ஜெபமும் விசுவாசமும்

ஜெபமும் விசுவாசமும் பிரிக்க முடியாத இரட்டையர்கள். ஒன்று இன்றி இன்னொன்று பயனற்றது. ஒன்றை மகிமைப்படுத்தி இன்னொன்றை மட்டுப்படுத்துதல் தகாதது. ஆண்டவர் விசுவாசிக்கிறவனிடத்தில் “கேள்” என்கிறார் (லூக்கா 18: 35-43), ஜெபிக்கிறவனிடத்தில் விசுவாசி என்கிறார் (மாற்கு 11:24).

“விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்” (யாக் 5:15)

விசுவாசத்தை மையப்படுத்தும் பிரசங்கங்கள் அதிகரித்து வரும் நாட்கள் இவை. விசுவாசம் மகா உன்னதமானது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால் ஜெபமும் அதே அளவு மகா முக்கியமானது என்பதற்கு வேதத்தில் மிக மிக வலிமையான சான்று ஒன்று உள்ளது.

அது என்ன தெரியுமா?

“இயேசு ஜெபித்தார்”

(லூக்கா 3:21, மத்தேயு 14:23, மாற்கு 6:46, லூக்கா 6:12, லூக்கா 9:18, மத்தேயு 26:39,42,44, லூக்கா 22:32… இன்னும் பல வசனங்கள்)

Leave a Reply