கிறிஸ்துவே ஜீவன்…
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் (ரோமர் 6:23) பாவத்தினால் மரணம் வந்ததாகச் சொல்லும் வேதம், தேவனுடைய கிருபைவரமோ; பாவத்திற்கு நேர் எதிரான சுபாவமாக நாம் கருதும் பரிசுத்தத்தினால் அல்லது ஒழுக்கத்தினால் உண்டான நித்தியஜீவன் என்று சொல்லாமல், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் நித்தியஜீவன் உண்டானதாகச் சொல்லுகிறது. மரணத்தை பாவம் என்ற...