ஜீவன் – சேஷ்டபுத்திரன்

ஜீவன் – சேஷ்டபுத்திரன்

ஒரு அரசர் அவசரமாக வெளிநாடு செல்லவேண்டியிருந்ததால் தனது அமைச்சர்களிடம் தனது இரு மகன்களில் மூத்தவனுக்கு பட்டாபிஷேகம் நடத்தி அவன் கையில் நாட்டை ஒப்படைக்கும்படி சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார். பட்டத்துக்குரிய மூத்தவன் பெயர் ஜீவன். அமைச்சர்களுக்கு அவன் ஒரு புரியாத புதிர். எனவே அவனை அரியாசனத்தில் அமரவைத்துவிட்டு என்ன செய்வதென்று அவர்களுக்குப் புரியவில்லை. எனவே அவர்களது பார்வை...
கழுகைப்போல்…

கழுகைப்போல்…

நாம் அனுதினமும் உடையணிகிறோம். அது அழுக்கானதும் அதைத் துவைக்கிறோம், மீண்டும் அணிகிறோம். ஒருவேளை ஒரு மனிதன் தன் உடையை துவைக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் அது அழுக்காகி நாளுக்குநாள் மோசமாகி ஒருநாள் கிழிந்து கந்தலாகிவிடும். உடை தன்னைத்தானே துவைத்துக் கொள்ளாது, அதைத் துவைக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை உடை அணிபவர்தான் முடிவுசெய்ய வேண்டும். உடல்...
ஒரு முக்கியமான முடிவு

ஒரு முக்கியமான முடிவு

நான் வாலிபர் கூட்டங்களுக்கு பிரசங்கிக்கச் செல்லும்பொழுதெல்லாம் என்னுடைய பிரசங்கங்கள் ஒரே ஒரு காரியத்தைச் சுற்றியே இருக்கும். அது என்னவென்றால் ஒரு வாலிபன் தன் வாலிபப் பருவத்தில் எடுக்க வேண்டிய மிக மிக முக்கியமான ஒரே ஒரு முடிவு. “ஆண்டவரே என்னுடைய வாழ்வில் அவ்வப்போது எடுக்க வேண்டிய சின்ன முடிவுகளோ, அல்லது வேலை, திருமணம் போன்ற மிகப்பெரிய...
கருத்துத் திணிப்புகள்

கருத்துத் திணிப்புகள்

மகிழ்ச்சியான மரணங்கள்-1 ஆவிக்குரிய மரணமும், சரீர மரணமும் விரும்பத்தகாதது, அது சாபத்தின் வெளிப்பாடு. இயேசுவை விசுவாசிக்கிறவன் அந்த சாபத்துக்கு நீங்கலாகியிருக்கிறான்(யோவான் 11:25,26). ஆனால் ஆசீர்வாதமான, மகிழ்ச்சியான சில மரணங்கள் இருக்கிறன. அவை உடலில் ஏற்படும் மரணங்களல்ல, மனதில் ஏற்படும் மரணங்கள். அவைகளில் சிலவற்றை இந்தக் கட்டுரையில் காண்போம். #1 கருத்துத் திணிப்புகளுக்கு மரிப்பது அடுத்தவர்களது openion-களுக்கு...
ராஜாக்களுக்கு ஆண்டவன்

ராஜாக்களுக்கு ஆண்டவன்

கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா கூடாதா என்கிற விவாதம் நெடுநாட்களாக நம் மத்தியில் நடந்து வருகிறது. நம்முடைய உரிமைகளைப் பேச நமக்கும் ஒரு பிரதிநிதித்துவம் தேவை என்கிற நோக்கில் அநேகர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். அது ஏற்புடையதுதான்..ஆனால் இந்தக் கட்டுரை அதைப்பற்றி பேசவில்லை. அதாவது மதரீதியான கிறிஸ்தவர்கள் பற்றி பேசவில்லை. மறுபடியும் பிறந்த, பாலை உண்ணத்தக்க “பிள்ளைகள்(child)”...
நீங்கள் அறிந்திருப்பதை நானும் அறிந்திருக்கிறேன்

நீங்கள் அறிந்திருப்பதை நானும் அறிந்திருக்கிறேன்

ஒரு மருத்துவரிடம் ஒரு வியாதிக்காரன் வந்தால் அந்த மருத்துவர் அவனை பரிசோதித்துப் பார்த்து உங்களுக்கு இன்ன வியாதி இருக்கிறது என்று தெளிவாகச் சொல்லுவார். அதை அவர் ஒருதரம்தான் சொல்லுவாரேயன்றி ஒவ்வொருதரமும் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார். அந்த நபர் முற்றிலும் குணமடையும்வரை அடுத்தடுத்த சந்திப்புகள் ஒவ்வொன்றிலும் அவர் குணமடைவதற்கான காரியங்களைச் செய்வாரேயன்றி உனக்கு இன்னின்ன வியாதி இருக்கிறது என்பதையே...
இங்கே ஏறிவா..(வெளி 4:1)

இங்கே ஏறிவா..(வெளி 4:1)

ஆவிக்குரிய வாழ்க்கை என்றால் பக்தி மார்க்கத்தில் வாழ்வது என்பது ஒரு பொதுவான புரிதலாக இருக்கிறது. ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை என்பது மேலான பரிமாணத்தில்(higher dimension) வாழ்வதாகும். நாம் உடல் என்னும் ஒரு முப்பரிமாணக் கூட்டுக்குள் சிறைப்பட்டு வாழ்வதாலும், நமது புலன் உறுப்புக்கள் மூலமாக மட்டுமே அனைத்தையும் அறிந்துகொள்வதாலும் நமக்கு இந்த பெளதிக உலகம் மாத்திரமே உண்மை...