காற்றில் மிதக்கும் இறகு
காற்று எப்போதும் பூமியில் வீசிக்கொண்டே இருக்கிறது. பறவை இறகு போன்ற இலகுவான பொருட்கள் அந்தக் காற்றடிக்கும் திசையில் இழுத்துச் செல்லப்படுகின்றன, இரும்பு மற்றும் கற்கள் போன்ற பாரமான பொருட்களோ அசையாது கிடந்த இடத்திலேயே கிடக்கின்றன. விண்ணகக் காற்றாகிய ஆவியானவர் முதல் நூற்றாண்டிலிருந்து இந்த பூமியில் அசைவாடிக் கொண்டேதான் இருக்கிறார். ஆனால் அவருடன் இணைந்து உன்னத அனுபவங்களில்...