இறைச்சட்டத்தின் சுருக்கம்

இறைச்சட்டத்தின் சுருக்கம்

இவ்வுலகின் சட்டங்கள் பொதுவானவை அது குற்றத்தை மட்டுமே பார்த்து எல்லோருக்கும் பொதுவான தண்டனை வழங்கும். ஆனால் இறைச்சட்டம் மிக நுண்ணியது, அது குற்றத்தை மட்டுமல்ல குற்றவாளியையும் நிதானித்தே தண்டனை வழங்கக்கூடியது. இறைச் சட்டத்தின் சுருக்கம் இதுதான்: நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும் (மத்தேயு 7:2)...
ஏ மரமே கனிகொடு!

ஏ மரமே கனிகொடு!

கனி என்பது ஒரு மரம் நல்ல மரமா, கெட்ட மரமா என்பதைக் காட்டும் அடையாளமாக இருக்கிறது. அதுபோலவே கிரியையும் ஒரு மனிதன் பாவியா, நீதிமானா என்பதைக் காட்டும் அடையாளமாக இருக்கிறது. ஒரு மனிதன் உள்ளே மாறாமல் வெளியே நீதியின் கிரியைகளை காட்டி மாய்மாலம் செய்ய முடியும். ஆனால் தேவன் அதனை விரும்பவில்லை. உள்ளார்ந்த மாற்றத்தின் மூலம்...
ஜெபம் என்பது உழைப்பா, உறவா?

ஜெபம் என்பது உழைப்பா, உறவா?

ஏதேனுக்கு வெளியே நெற்றி வியர்வை சிந்த ஆதாம் உழைத்தானே அந்த அனுபவமல்ல, ஏதேனுக்குள்ளே குளிர்ச்சியான வேளையில் தேவனோடு உலவினானே, அந்த அனுபவமே ஜெபம்!   ஜெபம் என்பது உழைக்கும் அனுபவமல்ல, உறவாடும் அனுபவம். புதிய ஏற்பாட்டு ஆசீர்வாதங்கள் எதுவும் உழைப்பின் வழியாக நமக்கு வருவதில்லை, பிள்ளை எனும் உரிமை வழியாகவே வருகிறது!   “கேளுங்கள்” என்று...
நமது தேடல் என்ன?

நமது தேடல் என்ன?

தேவன் > விருப்பங்கள் > கேட்கும் பிரசங்கங்கள் > மனம் மறுரூபமாதல் > சரியான தேடல் > சரியான பயணம் சுயம் > இச்சைகள் > செவித்தினவுக்கேற்ற பிரசங்கங்கள் > வஞ்சிக்கப்படுதல் > தவறான தேடல் > திசைமாறிய பயணம் நமது கிறிஸ்தவ வாழ்வின் போக்கை நிர்ணயிப்பதில் தேடல் (Seeking) என்பது மிக முக்கியப் பங்கு...
கிறிஸ்துவுக்குள் நாம் யார்?

கிறிஸ்துவுக்குள் நாம் யார்?

கிறிஸ்துவுக்குள் திருமுழுக்கு பெற்றவர்கள். ( ரோமர் 6:3) பாவத்திற்கு மரித்து, கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்கள். (ரோமர் 6:11) கிறிஸ்துவுக்குள் சக விசுவாசிகளோடு ஒரே சரீரமாக இருக்கிறவர்கள். (ரோமர் 12:5) கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்கள் ( 1 கொரி 1:2) கிறிஸ்துவுக்குள் உயிர்ப்பிக்கப்பட்டவர்கள். (1 கொரி 15:22) கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தப்பட்டு, அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். ( 2...
ஆயத்தம்

ஆயத்தம்

ஒரு நாட்டின் பேரரசர் மிகவும் கனம் பொருந்தியவராகிய தன்னுடைய குமாரனுக்கு ஒரு பெண்ணை திருமணத்துக்கென்று நியமிக்கிறார். நியமிக்கப்பட்ட பெண் இளவரசருக்கு சற்றும் ஏற்றவளல்ல. பேதமை நிறைந்தவள், பெலவீனமுமுள்ளவள். ஆனாலும் அவள் மீது கொண்ட அன்பு மற்றும் இரக்கத்தின் மிகுதியால் பேரரசரும் இளவரசரும் அவளைத் தகுதிப்படுத்தி, தங்கள் குடும்பத்தில் இணைத்துக்கொள்ள சித்தம் கொண்டனர். நிச்சயிக்கப்பட்ட நாளுக்கும், திருமண...
சீனி vs பனங்கருப்பட்டி

சீனி vs பனங்கருப்பட்டி

இன்பம் இனிப்பு போன்றது. அது இருவகைப்படும்; பாவம் தரும் சிற்றின்பம், பரிசுத்தம் தரும் பேரின்பம். பாவம் தரும் சிற்றின்பம் வெள்ளைச் சீனி போன்றது. அது இனிப்பு போல தோற்றமளிக்கும் விஷம் என்பது கண்டுபிடிக்கப்பட்டு இப்போது பட்டி தொட்டியெல்லாம் அந்தச் செய்தி பரப்பப்பட்டுவிட்டது. அது நன்கு தெரிந்தாலும் அது பார்வைக்கு அழகாக இருக்கிறது என்பதாலும், உலகம் முழுவதும்...