Greatest Truth Ever Told

“உலகின் ஆகச்சிறந்த உண்மை” என்ற இந்தப் பாடத்தை கருத்தரங்கு வடிவில் எல்லா சபைகளுக்கும், விசுவாசிகளின் காதுகளுக்கும் எடுத்துச்செல்ல விரும்புகிறோம்.

உலகின் ஆகச்சிறந்த உண்மை எது?

சுவிசேஷமே அந்த உண்மை! சுவிசேஷம் ஆயிரம் அணுகுண்டுகளுக்கு சமமான வல்லமையை தன்னகத்தே கொண்டது. மனந்திரும்புதலுக்கு மட்டுமல்ல, அதன்பின்னர் நாம் வாழ அழைக்கப்பட்டிருக்கும் வெற்றி வாழ்க்கைக்குள்ளும் நம்மை நடத்தத் தேவையான சகல அறிவையும், ஆற்றலையும், ஜீவனையும் ஒரு விதையைப்போல தனக்குள் கொண்டுள்ளது. சுவிசேஷத்தை சரியாக கேட்காததினாலேயோ, அல்லது கேட்டும் புரியாததினாலேயோ இரட்சிக்கப்பட்ட பல விசுவாசிகளின் வாழ்க்கை கனலற்று, கனியற்றுக் காணப்படுகிறது.

அந்த இடைவெளியை இந்தக் கருத்தரங்கு நிச்சயம் போக்கும் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறேன். மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த கருத்தரங்கில் நீங்கள் கற்றுக்கொள்ளப்போகும் செய்திகள் உங்கள் ஆவிக்குரிய அறிவில் புதிய பல புதிய கோணங்களைக் காணச் செய்யும் என்பது திண்ணம்.

இக்கருத்தரங்கில் கற்றுத்தரப்படும் சில ஆவிக்குரிய பாடங்கள்:

  • பாவம் எப்படி மனிதனை தேவனிடமிருந்து பிரிக்கிறது? உண்மையில் பாவம் மனிதனுக்குள் என்னதான் செய்கிறது?
  • மகா பாபிலோனின் இரகசியம்: பிசாசு எப்படி மனிதனை பாவத்திலும் தோல்வியிலும் நிலைத்திருக்கப் பண்ணுகிறான்?
  • தேவன் விழுந்துபோன மனிதனோடு எப்படி இடைப்படுகிறார்?
  • பழைய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து (நியாயப்பிரமாண இரகசியங்கள்)
  • இரட்சிப்பு என்றால் என்ன, அது மனிதனை எதிலிருந்து, எப்படி விடுதலையாக்குகிறது?
  • நியாயப்பிரமாணம் vs கிருபை (உடன்படிக்கைகளை புரிந்துகொள்ளுங்கள்)
  • இரட்சிக்கப்பட்டாயிற்று… இனி நான் யார்? அடுத்து என்ன?
  • விசுவாசத்தினால் உண்டாகும் நீதி என்பது என்ன? அதை எப்படி நடைமுறை வாழ்வில் அனுபவிப்பது?
  • கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை சாத்தியமா? அதை எப்படி பெறுவது?
  • ஆவிக்குரிய வளர்ச்சியின் அடுத்தடுத்த தளங்களுக்கு ஏறிச்செல்ல விசுவாசம் நமக்கு எப்படி உதவுகிறது?

பவர்பாய்ண்ட் / கீநோட் பிரசண்டேஷன் வழியாக காணொளிகளுடன் தேவனுடைய சத்தியம்  தமிழில் கற்றுத்தரப்படுகிறது. அதைத் தொடர்ந்து கேள்வி – பதில் பகுதியும் உண்டு. இக்கருத்தரங்கு குறித்து மேலும் அறிந்து கொள்ளவோ, உங்கள் சபை அல்லது வீட்டுக்கூட்டங்களில் இந்தக் கருத்தரங்கை நடத்தவோ விரும்பினால் vijaykumar.jeyaraj@gmail.com என்ற எமது மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!