மோசே எனும் தலைவன்

மக்களின் மதிப்பைப் பெற
தம் பெயருக்கு முன்
அடைமொழிகளைச் சேர்க்கும்படி
அடம் பிடிக்கும் ஊழியர்கள்
ஆறுக்கு ரெண்டடி குழிகளில் தம்
அடைமொழிகளோடு
சேர்த்து புதைக்கப்படுவார்கள்!
ஜனங்களின் ஜீவனைக் காக்க
ஜீவபுத்தகத்திலிருந்தே தன் பெயரை
கிறுக்கிப்போட மன்றாடியவன்
பெயரோ காலங்களைக் கடந்து
கலங்கரை விளக்காய் ஒளிர்கிறது!
“மோசே” எனும் பெயருடன் இணைந்து நிற்க
எந்த அடைமொழிக்கும் தகுதியில்லை!
Rt. Rev. Dr. மோசே!
கேட்பதற்கே நன்றாக இல்லை! 🙂