எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!
இயேசுவின் வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? (மத்தேயு 24:3) என்று சீஷர்கள் இயேசுவைக் கேட்டபோது அவர்களுக்கு பதிலளித்த ஆண்டவர் பஞ்சம், கொள்ளை நோய்கள், போர்கள், பூமிஅதிர்ச்சிகள் இவைகளையெல்லாம் சொல்லும் முன் முதலாவதாகவும் மிக முக்கியமானதாகவும் சொன்ன அடையாளம் வஞ்சகம் (DECEPTION) என்பதாகும்.
ஒன்றல்ல இரண்டல்ல அநேகர் அநேகரை வஞ்சிப்பார்கள் (மத்தேயு 24:5) என்பதே வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தியாக இருக்கிறது. “ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள் (மத்தேயு 24:4)“ என்று இயேசு உலகத்தாரைப் பார்த்து அல்ல தன்னைப் பின்பற்றும் ஜனங்களைப் பார்த்துச் சொன்னார்.
உங்களுக்குத் தெரியுமா?
நீங்களும் வஞ்சிக்கப்பட முடியும், ஆகவே எச்சரிக்கையாய் இருங்கள்!!!
நான் எப்படி வஞ்சிக்கப்பட முடியும்… நான் ஒழுங்கா நல்ல ஆவிக்குரிய சர்ச்சுக்கு போறேன் ஜெபம் பண்றேன், தசமபாகம் கூட தவறாமல் கொடுக்கிறேன். நான் எப்படி வஞ்சிக்கப்பட முடியும்??? என்று நீங்கள் கேட்கலாம். தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்பட முடியும் என்று மாற்கு 13:22 சொல்லுகிறது.
பின்வரும் 15 எச்சரிக்கைகளையும் உங்கள் வாழ்க்கையோடு பொருத்தி ஆராய்ந்து பாருங்கள், ஆவியானவர் உதவியோடு சரி செய்யுங்கள் விசுவாசிகளை மோசம் போக்கும் கடைசிகால மாபெரும் வஞ்சகத்துக்குத் தப்புங்கள். இந்தப் 15 காரியங்கள் மட்டும்தான் என்பதல்ல. இயேசுவோடு தனிப்பட்ட உறவைக் காத்துக் கொள்வதில் அக்கறையாயிருங்கள். அவருக்கே செவிகொடுங்கள் அவர் அவர் அவர் மாத்திரமே பிரதானம்.
எச்சரிக்கை #1
ஆண்டவரையும் அயலாரையும் நேசிக்கச் சொல்லி அவர் கொடுத்த பிரதான கட்டளையை மறந்துவிட்டு, வெறும் சபைக்குச் செல்லுவதிலும், காணிக்கை கொடுப்பதிலும், ஊழியம் செய்வதிலும் மாத்திரமே திருப்தியுற்று இருக்கிறீர்களா? பாவத்தில் வாழ்ந்துகொண்டு குற்ற மனசாட்சியோடு போராடிக்கொண்டிருக்கும் பாவியை விட மதரீதியான சில காரியங்களைச் செய்துவிட்டு அதில் திருப்தியும் பெருமையும் அடைந்திருக்கும் விசுவாசியே பெரும் ஆபத்திலிருக்கிறான். ஏனனில் பாவி தன் பாவங்களை அறிந்திருக்கிறான் எளிதில் உடைக்கப்பட்டும் விடுவான். ஆனால் தன் கிறிஸ்தவத்தில் (கிறிஸ்துவில் அல்ல) திருப்தியடைந்திருக்கும் விசுவாசியோ தன்னைக் குறித்து உயர்ந்த எண்ணம் கொண்டிருப்பதால் சுயநீதி என்னும் கொடூரமான வஞ்சகவலையில் அகப்பட்டு இருக்கிறான்.
ஜாக்கிரதை! உங்கள் அஸ்திபாரத்தை கிறிஸ்து எனும் கன்மலையின்மீது அல்ல மதம் என்ற மணலின் மீது போட்டு இருக்கிறீர்கள். கிறிஸ்து உங்களிடத்தில் மார்க்க கிரியைகளை அல்ல அவரையும் அயலாரையும் நேசிக்கும் அன்பையே முதலாவது எதிர்பார்க்கிறார்.
மத்தேயு: 22:36-40
எச்சரிக்கை #2
பாவத்தின் மேல் வெறுப்பும் பரிசுத்ததின் மேல் வாஞ்சையும் நாளுக்குநாள் பெருகவில்லையா? உங்கள் தனி ஜெப நேரம் உங்களுக்கு இனிமையாக இல்லையா?
ஜாக்கிரதை! தேவனோடு உங்களுக்கு நெருங்கிய ஐக்கியம் இல்லை என்பதன் வெளிப்பாடுதான் இது. உங்கள் ஆத்ம திருப்தியை கர்த்தரிடத்தில் அல்ல வேறு எங்கோ தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
லூக்கா 12:34; நீதிமொழிகள் 27:7
எச்சரிக்கை #3
நீங்கள் வேதத்தை வாசிக்கக் கூடாதபடிக்கு ஒருவேளை படிக்கத் தெரியாதவரானால் வசனத்தை பிறர் வாசிக்கக் கேட்கக் கூடாதபடிக்கு உங்கள் சொந்த அலுவலில் பிசியாகவே இருக்கிறீர்களா?
எச்சரிக்கை! நீங்கள் மிக எளிதாய் வஞ்சிக்கப் படுவீர்கள். வேதத்தை கவனியாதவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சம் இல்லை என்று ஏசாயா 8:20 எச்சரிகிறது.
ஏசாயா 8:20, சங்கீதம் 119:165, ஓசியா 4:6
எச்சரிக்கை #4
உங்கள் பாஸ்டர், உங்கள் சபையைத்தவிர வேறு சபைகளையோ ஊழியர்களையோ அங்கீகரிக்கவோ நேசிக்கவோ முடியவில்லையா? அவர்களுக்காகவும் ஜெபிக்காமல் உங்கள் சபைக்காக மாத்திரமே ஜெபிக்கும்படி கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கிறீர்களா?
எச்சரிக்கை! இது வஞ்சகத்திலெல்லாம் மாபெரும் வஞ்சகம்.
I யோவான் 4:20, 1கொரிந்தியர் 12: 5-27, 1கொரிந்தியர் 1:10-13,
எச்சரிக்கை #5
அனுதினமும் உங்கள் சொந்த இருதயத்தை ஆராய்வதற்கும் சுத்திகரிக்கப்படுவதற்கும் தேவனிடத்தில் கிட்டிச் சேர்ந்து, அவரைப்போல மாறுவதற்கும் வாஞ்சையில்லாமல் வெறும் உபதேசங்களைக் குறித்து வாக்குவாதம் செய்வதில் ஆர்வமுடையவரா?
அபாயம்! இது ஒரு ஆவிக்குரிய நோய் என்று வேதம் எச்சரிக்கிறது.
தீமோத்தேயு 6:4, தீத்து 3:9; I கொரிந்தியர் 11:16
எச்சரிக்கை #6
உங்கள் கண்களும் நாவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையா?
எச்சரிக்கை! நீங்கள் ஆவிக்குரிய அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படவேண்டிய அவசியத்தில் இருக்கிறீர்கள்.
மத்தேயு 6:22, 23 யாக்கோபு 3:5-12,
எச்சரிக்கை #7
நீங்கள் ஜாதி உணர்வு உடையவரா?
நீங்கள் வஞ்சிக்கப்படுவது இருக்கட்டும் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா? என்பதை முதலாவது ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று உங்களை நீங்கள் அடையாளப்படுத்துவதால் நாடார், வன்னியர், தேவர், பள்ளர், பறையர் என்று வைராக்கியம் பாராட்டுவதால் நீங்கள் இந்து மதத்தின் ”வருணாசிரமக் கோட்பாட்டையே” இன்னும் நம்புகிறீர்கள் பரிசுத்த வேதாகமத்தை அல்ல என்பது தெளிவாகிறது. உங்களைப் படைத்தவர் கர்த்தரா? பிரம்மாவா? என்பதை இன்றே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
கலாத்தியர் 3:28
எச்சரிக்கை #8
உங்கள் வேதத்தை நீங்களே நேரடியாக வாசிக்காமல் அல்லது வசனத்தைக் கேட்காமல், ஏதேனும் ஒரு பிரசங்கியாருடைய பிரசங்கத்தையே தொடர்ந்து கேட்டால் போதும் என்ற உணர்வுடையவரா? அல்லது பிரசங்க மேடையில் யார் எதைச் சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்ளுகிறீர்களா?
அபாயம்! கேட்ட போதகம் சரிதானா என்று உங்கள் வேதத்தை நீங்களே ஆராய்ந்து பார்ப்பது அவசியம். பெரேயா பட்டணத்தார் பவுலின் போதகத்தையே பரிசோதித்துப் பார்த்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது. அதனால்தான் அவர்கள் தெசலோனிக்கே பட்டணத்தாரைவிட நற்குணசாலிகளாய் இருந்தார்கள் என்றும் அவர்களைப் பாராட்டுகிறது. சர்ப்பத்தைபோல வினா உள்ளவர்களாய் இருங்கள். இல்லாவிட்டால் இந்தக் கடைசி நாட்களில் யாரும் உங்களை எளிதாக வஞ்சிக்கமுடியும்.
அப்போஸ்தலர் 17:11, மத்தேயு 7:15, I தெசலோனிக்கேயர் 5:21
எச்சரிக்கை #9
பரிசுத்த ஆவியானவரை உள்ளான மனிதனில் அடையும் மாற்றத்தில், கனிகளில், சாட்சியான வாழ்க்கையில் தேடாமல் வெளிப்புற அடையாளங்களிலும் சரீரத்தில் ஏற்படும் அனுபவங்களிலும் மாத்திரமே தேடுகிறீர்களா?
எச்சரிக்கை: பரிசுத்த ஆவியின் பலன் வெறும் பரவசத்துக்கு அல்ல பிரதிஷ்டை வாழ்வு வாழவே அருளப்பட்டுள்ளது.
அப்போஸ்தலர் 1:8
எச்சரிக்கை #10
நீங்கள் செல்லும் சபையில் நித்தியத்துக்கு உரிய ஆசீர்வாதங்களை விட உலகத்துக்குரிய ஆசீர்வாதங்களைப் பற்றிய செய்திகளையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் சபையில் மலைப் பிரசங்கத்தைப் பற்றிய செய்திகளைக் கேட்டு வெகு காலமாயிற்றா?
ஜாக்கிரதை! நீங்கள் வஞ்சிக்கப்படுகிறீர்கள். ஒருவனும் கிரியை செய்யாத இராக்காலம் வருவதற்குள் நீங்களும் உங்கள் சபையும் இடுக்கமான வாசலுக்குள் நெருக்கமான வழிக்குள் மறுபடியும் விரைவாக வந்து சேருங்கள்.
பிலிப்பியர் 3:19, I கொரிந்தியர் 15:19
எச்சரிக்கை #11
நிலையான நகரம் எனக்கு இங்கு இல்லை, இந்த பூமியில் நான் ஒரு பரதேசி என்ற உணர்வோ, இயேசுவின் வருகையை ஒவ்வொரு நாளும் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கும் மனநிலையோ இல்லாமல் இருக்கிறீர்களா?
ஜாக்கிரதை! இது மனதளவில் உங்களை நம் அப்பாவையும் அவர் வீட்டையும் விட்டு தூரத்தில் வைத்திருக்க சாத்தான் செய்த திட்டமிட்ட சதி.
எபிரெயர் 13:14, II பேதுரு 3:12, 2 கொரிந்தியர் 5:1-6
எச்சரிக்கை #12
நாதியற்றிருக்கும் தரித்திரருக்கும் பசித்த வயிரோடு உணவுக்காய் ஏங்கும் திக்கற்ற பிள்ளைகளைக் குறித்து பரிதபிக்காமல் ஊழியங்களுக்குக் கொடுத்தால் மட்டுமே எனக்கு தேவன் ஐசுவரியத்தை அள்ளிக் கொடுப்பார் என்று உணர்வோடு தேவனுக்குக் கொடுக்கிறீர்களா?
ஜாக்கிரதை! சில பொய்யான போதனைகளால் ஏமாற்றப்பட்டு இருக்கிறீர்கள். அவ்விதமாய் நீங்கள் வஞ்சிக்கப்பட உங்களுக்குள் இருக்கும் பொருளாசையும் ஒரு காரணம். கொடுப்பதைக் குறித்து புதிய ஏற்பாடு சொல்லியுள்ள பகுதிகளை நன்றாக ஆராய்ந்து பாருங்கள்.
கலாத்தியர் 2:10, நீதிமொழிகள் 19:17, யாக்கோபு 1:27
எச்சரிக்கை #13
நீங்கள் உங்கள் சபையில் நற்சாட்சி பெற்றிருந்தும் உங்கள் சொந்த வீட்டில் உங்களுக்கு சாட்சி இல்லையா?
அப்படியானால் நீங்கள் இரட்டை வாழ்க்கை வாழுகிறீர்கள். மாய்மாலம் தேவன் வெறுக்கும் பிரதான பாவம். இதற்கு நாளை அல்ல இன்றே, இப்பொழுதே மனந்திரும்ப வேண்டியது அவசர அவசியம்.
அப்போஸ்தலர் 1:8; I தீமோத்தேயு 5:8;
எச்சரிக்கை #14
ஒரு படித்த அந்தஸ்த்துள்ள விசுவாசிக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தையும் மரியாதையையும் ஒரு படிக்காத, ஏழை விசுவாசிக்குக் கொடுக்க முடியவில்லையா?
அப்படியானால் நீங்கள் கிறிஸ்துவை அல்ல ஒரு கனியற்ற வறட்டு மதத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்று அர்த்தம். பிரியமானவர்களே! இது கர்த்தர் பார்வையில் அருவருப்பானது என்பதை உணருங்கள்.
யாக்கோபு2:1-9
எச்சரிக்கை #15
கிறிஸ்துவுக்குள் நீங்கள் யார் உங்கள் மேன்மை என்ன? புதிய உடன்படிக்கையில் உங்களுக்கு அருளப்பட்ட சிலாக்கியங்கள் என்னென்ன? நமக்கும் பழைய ஏற்ப்பாட்டு விசுவாசிகளுக்கும் என்ன வித்தியாசம் இவைகளையெல்லாம் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறீர்களா? நாம் இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றுதான் பவுல் எபேசியர் முதல் அதிகாரத்தில் கருத்தாய் ஜெபிக்கிறார். இதுவே நம் பிரதான தேவை.
எச்சரிக்கை! இது புரியாவிட்டால் பிள்ளைகளாக அல்ல வெறும் பக்தகோடிகளாகவே வாழ்ந்து முடித்து விடுவோம். நாம் பிரதானமானவைகளைக் குறைவாகவும் தேவையற்றவற்றைப் பற்றி அதிகமாகவும் பிரசங்கங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்கு முன்னே உள்ள ஒரே வழி: அப்போஸ்தலர் எழுதிய நிருபங்களை ஆவியானவர் துணையோடு நாமே ஆராய்ந்து பார்ப்பதுதான்.
எபேசியர்1:16-19
பிரியமானவர்களே! உங்களைப் புண்படுத்த அல்ல, உங்களை அதிகமாய் நேசிப்பதாலேயே உங்களில் ஒருவரும் கெட்டுப் போகக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்த எச்சரிப்புகளை வெளியிட்டு இருக்கிறேன். சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள் என்று நீதிமொழிகள் 27:6 சொல்லுகிறது. இது உங்களுக்குப் பிரயோஜனமாக இருந்தால் இந்த செய்தியின் பிரிண்ட் வடிவம் கீழே தரப்பட்டுள்ளது. இதைப் Download செய்து Printout எடுத்து கணினியோ இணையதளத்தையோ பயன்படுத்தாத உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சபையாருக்கும் கொடுங்கள். அவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
Dear Brother Vijay,
Greetings! I am thankful to God for your article, which addresses many of the deceptions that are prevail among many Christians, even among those who claim to be Spirit Filled and having many gifts of the Holy Spirit. Matt 7:22-23 is a terrible warning against many Christians those who claim to have many gifts of the Holy Spirit.
I wish to make a little comment in connection to your thought regarding Mark 13:22,”For false Christs and false prophets shall rise, and shall shew signs and wonders, to seduce, if it were possible, even the elect.”. You have expressed a thought (in Tamil, meaning), “The elect Christian can also be deceived”. I understand your heart behind this phrase. But this would bring a gulf of fear and doubt about many of God’s promises in the hearts of many faithful Christians. In other words, you can say that the faithful Christian would be free from all these 15 warnings (echarippu). Mk 13:22, in Tamil version, gives a possible meaning as if an elect Christian can be lost. But the proper interpretation of this verse, especially it is very easy in English version… “For false Christs and false prophets shall rise, and shall shew signs and wonders, to seduce, if it were possible, even the elect.” Here the phrase, “… if it were possible…” means there would me miracles and wonders that may be seen possible enough to decieve even the elect Christians, but will not. That is the proper interpretation of this verse.
To the best of my understanding and the belief of many faithful Christian giants such as John Banyan, C.H.Spurgeon, Martyn Luther, John Calvin, John Mc Author and etc… a true and faithful Christian who is an elect can never be lost or will ever lose his / her salvation because the salvation is granted to a person not on the basis of man’s choice, but on the choice of God the Almighty…
If time permits, pl read Eph 1:4-8, Rom 8:29-30, John 17:9, Jn 10:24-29… It may be of some interest to you to know what’s C.H.Spurgeon’s faith stand in connection to the election and perseverance of saints… “”If ever it should come to pass,
That sheep of Christ might fall away,
My fickle, feeble soul, alas!
Would fall a thousand times a day.”
If one dear saint of God had perished, so might all; if one of the covenant ones be lost, so may all be; and then there is no gospel promise true, but the Bible is a lie, and there is nothing in it worth my acceptance. I will be an infidel at once when I can believe that a saint of God can ever fall finally. If God hath loved me once, then He will love me for ever. God has a master-mind; He arranged everything in His gigantic intellect long before He did it; and once having settled it, He never alters it, “This shall be done,” saith He,… (http://www.spurgeon.org/calvinis.htm)…
Once saved is ever saved. That does not mean a Christian can live a life every way he likes according to his own flesh. But a faithful Christian would live a life according to God’s word and would always strive to live a life free from the warnings that you have enlisted in your article. What you have given in the list is very proper. But the opening lines stating that even an elect Christian can be deceived and be lost is not sound in doctrine… I would be very happy to explain more about it, if you are interested…
Kindly let me know that how I can prepare articles in Tamil, like what you have done. Please let me know your mobile number to which I may contact you…
Dear brother, pl don’t take my comment as rude or offensive one. It may be classified as a constructive criticism….
Call me if you wish to 09443035140…
Yours in Christ
Paulraj
அன்புள்ள சகோதரர் பால்ராஜ் அவர்களுக்கு,
தங்கள் வருகைக்கும் கமெண்ட்டுக்கும் எனது நன்றிகள். தங்களது விமர்சனம் நிச்சயமாகவே ஆக்கபூர்வமானது என்று அறிந்திருக்கிறேன், தேவ ஜனங்கள் குழப்பமும் பயமும் அடையக்கூடாது என்ற அக்கறையில் எழுதியிருக்கிறீர்கள். தங்களுக்கு என் பாராட்டுக்கள்! ஆதரவற்ற குழந்தைகளுக்காக தாங்கள் செய்யும் மகிமையான ஊழியத்துக்காக ஆண்டவரைத் துதிக்கிறேன்.
Once saved ever saved, Predestination, Rapture போன்றவை பல நூற்றாண்டுகளாக சபைத் தலைவர்களாலும் வேத ஆராய்ச்சியாளர்களாலும் கடுமையாக விவாதிக்கப்படும் விஷயங்கள் என்பது நாம் அறிந்ததே, கொள்கையளவில் கிறிஸ்தவம் கால்வினிஸ்ட் மற்றும் ஆர்மீனியன்கள் என்று இரண்டாகப் பிரிந்திருப்பதை நம்மில் பலர் அறிவோம். இவற்றை ஆதரிப்பதற்க்கும் உடைப்பதற்கும் ஏகப்பட்ட வசனங்களை வேதத்திலிருந்தே எடுத்துக் காட்ட முடியும். கிறிஸ்துவின் வருகை வரை இந்த விவாதத்துக்கு முடிவே கிடையாது, ”உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்க வேண்டியதே” என்று I கொரி 11:19 சொல்லுகிறது. நான் பொதுவாக விவாதங்களுக்குள் செல்வதில்லை இருந்தாலும் தங்களுடைய நியாயமான கேள்விக்கு பதிலளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தகப்பனது மடியில் பாதுகாப்பாக அமர்ந்திருக்கும் தன்னை எதிரி பறிக்க வருவதைக் கண்டு நடுங்கும் குழந்தையை இன்னும் இறுகக் கட்டியணைத்து “பயப்படாதே! உன்னை ஒருவனும் என்னுடைய கரங்களிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது என்று தகப்பன் தைரியப்படுத்துவதையும். அதே குழந்தை சற்று வளர்ந்த பின்னர் எதிரியின் மாயவலையில் வீழ்ந்து தகப்பன் கையை உதறிவிட்டு ஆவலோடு எதிரியின் பின்னால் செல்லுகையில் ”போகாதே! அவன் பின்னால் போனால் அவன் உன்னைப் பட்சித்துப் போடுவான்” என்று எச்சரிப்பதையும் கற்பனை செய்து பாருங்கள்.
தேவவசனமானது அது அருளப்பட்ட காலச் சூழ்நிலைகளோடும், பெற்றுக் கொண்ட நபர்களின் தனிப்பட்ட சூழலோடும் பொருத்திப்பார்த்து விளங்கிக்கொள்ளப்பட வேண்டியதாயிருக்கிறது. முதலாம் நூற்றாண்டில் தலைவிரித்தாடிய உபத்திரவத்தில் கலங்கிப்போய் ஒருவேளை மறுதலித்து விடுவோமோ என்று கலங்கிய விசுவாசிகளைப் பார்த்து “அவர் உங்களைக் வழுவாதபடி காக்க வல்லவர். (யூதா 1:24)” என்ற வார்த்தை உற்சாகமூட்டும் ஆறுதலின் வார்த்தையாகவும். அனலுமின்றி குளிருமின்றி மார்க்கரீதியான குருட்டாட்டத்தில் மூழ்கியிருந்த லவோதிகேயர்களைப் பார்த்து “உங்களை வாந்திபண்ணிப் போடுவேன் (வெளி 3:16) என்பது எச்சரிப்பின் வார்த்தையாகவும் வெளிப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தேவவார்த்தையை அதன் சூழலிலிருந்து தனியாக வெளியே எடுத்து புரிந்துகொள்ள முயற்சிப்பதே எல்லா புரட்டு உபதேசங்களும் தோன்றக் காரணம்.
நான் எழுதிய இந்த எச்சரிக்கை செய்தியானது லவோதிகேயாவை விட வெதுவெதுப்பாக இருக்கும் இந்திய கிறிஸ்தவ உலகத்துக்கு எழுதியது (எனக்கும் சேர்த்துதான்). ஒரு விசுவாசி தன் இரட்சிப்பை இழந்துபோக முடியுமா என்றால், முடியும் என்பதே என்னுடைய பதில். அதற்கு முழுமுதல் பொறுப்பாளியும் அந்த விசுவாசிதான். சாத்தானல்ல. சாத்தானுக்கு நம்மை தேவனுடைய கரத்திலிருந்து பறிக்கும் அதிகாரமோ, வல்லமையோ இல்லை. ஆனால் அவன் நம்மை வஞ்சித்து தேவனை விட்டு வழுவிப்போகச் செய்யக்கூடிய மகா தந்திரவாதி.. அதைத்தான் அன்று ஆதாம், ஏவாளிடம் சாதித்துக் காட்டினான். எனவேதான் ”வஞ்சிக்கப்படாதிருங்கள்” என்று வேதம் நம்மைப் பலமுறை எச்சரித்திருக்கிறது.
தேவனை நேசித்து அதேவேளையில் மாம்சத்தோடு அனுதினமும் ஜீவமரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் யாரும் கலங்க வேண்டியதில்லை. நாம் இன்று தோற்றாலும் நாளை வெல்வோம்! நாம் போராட்டத்தை கைவிட்டு விடாதவரை நமக்கு நம்பிக்கை இருக்கிறது. ”நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுவான் என்று வேதம் சொல்லுகிறது, நான் ஏழுதரமல்ல ஏழு லட்சம் முறை விழுந்திருக்கிறேன் ஏழு லட்சம் முறை எழுந்தும் இருக்கிறேன். தேவன் என்னை நியாயம் தீர்த்திருந்தால் இந்நேரம் என் சமாதியில் புல் முளைத்திருக்கும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருக்காக வாழவேண்டும் என்ற வாஞ்சை நம் உள்ளத்தில் இருக்குவரை நியாயத்தீர்ப்புக்கு முன் நம்மிடம் கிருபை மேன்மை பாராட்டிக் கொண்டேதானிருக்கும்.
இந்த கட்டுரையில் சொல்லியிருப்பது போல பாவத்தில் வீழ்ந்தவன் தாழ்மையாய் அதை ஒத்துக் கொள்ளுவான். அவனுக்கு நிச்சயம் நம்பிக்கை உண்டு, ஏனெனில் தாழ்மை உள்ளவனுக்கு கிருபை அளிக்கப் படும் (நீதி 3:34). மார்க்கக் கிரியைகளிலும், சுயநீதியிலும் பெருமை பாராட்டிக்கொண்டு தங்கள் பாஸ்டர் மாத்திரமே உலகில் உள்ள ஒரே தேவமனிதர், அவர் சொல்வது மாத்திரமே வேதம் என்று நம்பிக்கொண்டு தங்கள் வேதத்தை தாங்களே ஆராய்ந்து பார்க்காத இந்தத் தலைமுறை சோம்பல் கிறிஸ்தவர்களுக்கே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இனி “Once saved ever saved” என்று நம்பும் தங்களிடம் சில சான்றுகளை முன்வைக்க விரும்புகிறேன். சகோதரர் தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் அகங்காரமாகக் கேள்வி கேட்பதாக நினைக்க வேண்டாம். இது நம் வாசகர்களையும் சிந்திக்கத் தூண்டும். ஒருவேளை என்னுடைய கருத்து தவறாக இருந்தால் கண்டிப்பாகத் திருத்திக் கொள்ளுகிறேன்.
சான்று#1:
”ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.” (மாற்கு13:22). என்ற வசனத்தைக் குறிப்பிட்டு ”வஞ்சிக்கத்தக்கதாக அற்புதங்களைச் செய்வார்கள் ஆனாலும் வஞ்சிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அடுத்த வசனத்தைக் கவனித்தீர்களா? ”நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள் (மாற்கு13:22).” நம்மை யாரும் வஞ்சிக்க முடியாதென்றால் “நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்” என்ற எச்சரிப்பு எதற்கு? யாருக்கு?
இதுமாத்திரமல்ல புதிய ஏற்பாடு முழுவதும் வரும் “எச்சரிக்கையாயிருங்கள்”, ”விழிப்பாயிருங்கள்” என்ற வசனங்களை அடிக்கடி பார்க்கிறோமே! எதற்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்? அப்படி இல்லாவிட்டால் என்ன ஆகும்?
சான்று#2:
மாற்கு 13:36 சொல்லுகிறது ”நீங்கள் நினையாத வேளையில் வீட்டெஜமான் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்”. சகோதரர் அவர்களே! ஒருவேளை நாம் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடிக்கப்பட்டால் நமது நித்திய எதிர்காலம் என்ன என்பதை விளக்க முடியுமா?
இரட்சிப்பை இழக்கமாட்டோம், ஆனால் சாட்சியைத்தான் இழந்துபோவோம் என்று சொன்னாலும் கூட இரட்சிப்பை இழக்காமல் சாட்சியை இழக்கும் கிறிஸ்தவர்களுக்கு நித்திய எதிர்காலம் என்ன என்பதைக் குறித்து புதிய ஏற்பாடு ஏதேனும் சொல்கிறதா? அப்படி சாட்சியை இழந்து இரட்சிப்பை மாத்திரம் கையில் பிடித்துக் கொண்டு ஆவிக்குரிய தரித்திரனாய் நேசரின் முகத்தில் விழிப்பதைவிட நரகமே வாசி அல்லவா?
சான்று#3:
ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய். (ரோமர் 11:22). ”வெட்டுண்டு போவாய்” என்பதன் அர்த்தம் என்ன என்பதை விளக்க முடியுமா?
சான்று#4:
இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.
எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை, ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.
ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்தார்களென்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.
அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக. அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்.இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.
இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். (1கொரி 10:1-12)
இஸ்ரவேலரின் கானான் பயணம் நிழலாட்டமென்றால்… எகிப்திலிருந்து இரட்சிக்கப்பட்ட அநேகர் கானானுக்குள் பிரவேசிக்கவில்லை. அப்படியென்றால் பரமக்கானானுக்குள் மாத்திரம் இரட்சிக்கப் பட்ட யாவரும் பிரவேசிப்பார்கள் என்று சொல்லுவது எப்படிப் பொருத்தமாக இருக்கும்? இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது. அவர்கள் செய்ததுபோல் நாமும் செய்யாதிருப்போமாக அப்படிச் செய்தால் அவர்களுக்கு நடந்ததே நமக்கும் நடக்கும்.
சான்று#5
மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.(1 கொரி 9:27) ”ஆகாதவனாய்ப் போகுதல்” என்றால் என்ன? யாருக்கு?
இப்பொழுதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன், இன்னும் நிறைய சான்றுகள் உள்ளன. தங்களிடம் இதற்கும் பதில்கள் இருக்கலாம், உங்கள் பதிலுக்கு நான் பதில் சொல்வேன், என் பதிலுக்கு நீங்கள் பதில் சொல்லுவீர்கள். இது நிச்சயமாக முடியாது. நமக்குப் பிறகு உங்கள் மகனும் என் மகனும் இதைத் தொடர்வார்கள். ஏனனில் கால்வினிஸ்ட் ஆர்மீனிஸ்ட் வாதங்கள் ஆண்டவர் வரும் வரை முடிவடைவதில்லை.
ஒருகாரியத்தை நான் இதை வாசிக்கும் அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இரட்சிக்கப்பட்டவன் தனது இரட்சிப்பை இழந்துபோக முடியும் என்று உபதேசிக்கும் கடினப் பிரசங்கியான நான் ஒருவேளை அந்தரங்கப் பாவத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கலாம். அதேவேளையில் ஒருமுறை இரட்சிக்கப்பட்டவன் எந்தச் சூழ்நிலையிலும் அதை இழந்து போகமாட்டான் என்ற சகோதரரின் வாதம் பார்ப்பதற்கு நவீனகால செழிப்பின் உபதேசம் போல தெரிந்தாலும். அவர் கர்த்தருக்கு முன் உண்மையும் உத்தமமுமாய் ஜீவித்துக் கொண்டிருக்கலாம். கர்த்தர் உபதேசத்தைப் பார்க்கிறவர் அல்ல, இருதயத்தைப் பார்க்கிறவர். ஆரோக்கியமான உபதேசத்தைக் கொண்டிருக்கிறவர்களெல்லாம் பரிசுத்தர்களுமல்ல, நவீன கால செழிப்பின் உபதேசத்தைக் கொண்டிருப்பவர்களெல்லாம் பாவிகளுமல்ல. புது சிருஷ்டியே காரியம்! (கலா 6:15).
என்னுடைய எழுத்துக்கள் சகோதரரை எவ்விதத்திலாகிலும் புண்படுத்தியிருந்தால் சிரம் தாழ்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன். தங்களோடு நட்பும் ஐக்கியமும் பாராட்ட எப்பொழுதும் விரும்புகிறேன். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஊழியத்தையும் அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக! ஆமேன்.
சகோதரர் விஜய் சொன்னது போல இது ஒரு முடிவில்லாத விவாதம். என்னை பொறுத்தவரை இது திரித்துவத்தை போல ஒரு தேவ ரகசியம், நாம் மரணம் சம்பவிக்கும் வரையோ அல்லது நமது நேசர் வரும் வரையோ காத்து இருக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு சந்தேகமும் இன்றி வேதம் கால்விநிசத்தை (calvinism) ஆதரிக்கிறது. இன்னும் ஆழமாக பார்த்தால் இரண்டு விஷயங்களை வேதம் தெளிவாக போதிக்கிறது
1. Sovereignty of God
2. Resposibility of Man
Calvinist is the one who leaned more towards Sovereignty of God. Arminianist is the one who leaned more towards the Responsibility of man
இதை தீர்ப்பது தேவனால் மாத்திரமே முடியும். John Piper என்ற வேதபண்டித்தர் இப்படியாய் சொல்லுகிறார்
Salvation is decisive by God’s Sovereignty but depend on human Responsibilty. Faith is a Gift of God but the unbelief is the irresponsibility of Man
ஒருவன் தான் பெற்ற ரட்சிப்பை இழந்து போக முடியும் என்றால் “தேவனே என் நண்பனை ரட்சியும்!” என்ற ஜெபத்தை தேவன் கேட்பதற்கு என் நண்பனுடைய ஒத்துழைப்பும் தேவை. தேவ கிருபை தவிர்க்க முடியாதது (irresistable grace). As we all agree we all sinners and slaves to SIN by nature When God raised a person from deadness (or opened his eyes) Jesus will be awesome! unbelievabily beatiful!! irresistabily amaing!!! to him, he will be left with no option other than accepting Him as Lord of Live
John 6:44 “No one can come to me unless the Father who sent me draws him, and I will raise him up at the last day.”
Acts 13:48 “When the Gentiles heard this, they were glad and honored the word of the Lord; and all who were appointed for eternal life believed.”
சரி! விஷயம் இவ்வாறு இருக்க நான் எப்படி கிறிஸ்தவ வாழ்கையை நடத்துவது என்று பவுல் பிலிப்பியர் நிருபத்தில் இவ்வாறு சொல்லுகிறார்
Phil 3:12 “Not that I have already obtained all this, or have already arrived at my goal, but I press on to take hold of that for which Christ Jesus took hold of me”
God already holding me but I have a commandment to press on. Simply the pressing on is an evidence that God is already holding you
Phil 2:12-13 “Therefore, my dear friends, as you have always obeyed—not only in my presence, but now much more in my absence—continue to work out your salvation with fear and trembling, for it is God who works in you to will and to act in order to fulfill his good purpose.”
Most of the time people use Phil 2:12 to support the need of works in Salvation but the very next verse says “the working is not your work but God’s work thru you”
Just my 2 cents. Please apologise if i am wrong. Again it is not a essential doctrin and need not to separate believers!
அன்புடன்
ஜான்
1. Sovereignty of God
2. Resposibility of Man
Calvinist is the one who leaned more towards Sovereignty of God. Arminianist is the one who leaned more towards the Responsibility of man
இது எனக்கு புதிய செய்தி நண்பரே, ஏற்புடையதாகவும் இருக்கிறது; இதனால் பல்வேறு மார்க்கக் குழப்பங்களுக்கான விடை தெளிவாகத் தெரியவருகிறது; இந்த கருத்து அமைந்துள்ள தொடுப்பு ஏதேனும் இருந்தால் அதனைத் தரவும்; அப்படியானால் தனது ஆத்மீக வாழ்வுக்கு மனிதனை சார்ந்திருக்கும் சமுதாயமே அனைத்து குழப்பத்துக்கும் காரணம், என்று கொள்ளலாமா?
ஜான் அவர்கள் இந்த பொருளில் தொடர்ந்து எழுத விரும்பினால் தொடுப்பைத் தொடரவும்…
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=40801601
நிச்சயமாக அணைத்து குழப்பங்களுக்கும் காரணம் மனிதன் தன்னை மையமாக வைத்து தேவன் இருக்கவேண்டும், இயங்கவேண்டும் என்று நினைபதுதான். சராசரியான ஒரு மனிதன், ஏன் நிறைய கிறிஸ்தவர்களும் கூட எதாவது ஒரு பிரச்சனை என்றால் தேவன் இருக்கிறரா? என் பிரச்சனையை தீர்ப்பதை விட அவருக்கு என்ன வேலை என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். எப்போது நாம் தேவனை மையம் (God centredness) என்று கொள்ளுகிறோமோ அப்பொழுது எல்லாம் சரியாகிவிடும். வானம் இடிந்து தலையில் இறங்கினாலும் நம்மை அசைக்க முடியாது
Regarding my statements, In the below verses Jesus simply states, everything is unfolding as God ordained but Judas will still carry his Sin and guilt
Matt 26:24 “The Son of Man will go just as it is written about him. But woe to that man who betrays the Son of Man! It would be better for him if he had not been born.”
John 19:10-11 “….Pilate said. “Don’t you realize I have power either to free you or to crucify you?” Jesus answered, “You would have no power over me if it were not given to you from above. Therefore the one who handed me over to you is guilty of a greater sin.”
Following are my sources;
http://www.desiringgod.org/resource-library/sermons/the-free-gift-of-god-is-eternal-life-part-2
http://www.desiringgod.org/resource-library/sermons/the-freedom-and-justice-of-god-in-unconditional-election
http://www.desiringgod.org/resource-library/sermons/skeptical-grumbling-and-sovereign-grace
http://www.desiringgod.org/resource-library/seminars/tulip-part-1
Stretching more on sovereignty will produce fatalism (hyper Calvinists)!
Stretching more on responsibility will produce legalism!
I am convinced Pas. John Piper is very much balanced and He attacks the hyper Calvinists more than any arminianists
ஆம்…. இயேசுவின் வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? (மத்தேயு 24:3) என கேட்ட போது “வஞ்சிக்கப்படாதிருங்கள்” என்பதையே முதலில் கூறினார். கண்டிப்பாக நான்(ம்) மிகவும் கவனமாயிருத்தல் வேண்டும்.
1. Sovereignty of God: We know it God is sovereign and that it is not God’s will that any should perish
(2 Peter 3:9) The Lord is not slack concerning his promise, as some men count slackness; but is longsuffering to us-ward, not willing that any should perish, but that all should come to repentance.
2. Resposibility of Man: I think more than 90% of the teachings of the New Testament is regarding the responsibility of man.
God is love. We can take God’s love for granted. He will keep His side of the promises. But we need to keep our side of the commitment. God can never go wrong or God can never fail. But the problems is with us. Therefore we need to be careful to obey, be diligent, pray, read the Word, walk in the Spirit, walk in love, walk in holiness etc.
I believe once saved in not always saved. If it were so there would not have been so many warnings in the New Testament.
The teachings of NT is primarily meant for believing and obeying it. Failure to believe and obey is sin which will result in backsliding and damnation/hell.
Hebrews 10:38 Now the just shall live by faith: but if any man draw back, my soul shall have no pleasure in him.
Hebrews 10:25 Not forsaking the assembling of ourselves together, as the manner of some is; but exhorting one another: and so much the more, as ye see the day approaching.
Hebrews 10:26 For if we sin wilfully after that we have received the knowledge of the truth, there remaineth no more sacrifice for sins,
1 Peter 5:8 Be sober, be vigilant; because your adversary the devil, as a roaring lion, walketh about, seeking whom he may devour:
John 3:16 For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life .Only those who believe and continue to believe and follow Lord till the end will be saved. His grace is always available to us because he loves us.
Therefore the above ‘Warnings’ of Brother Vijay is very much needed in these last hours.
நிலையான நகரம் எனக்கு இங்கு இல்லை, இந்த பூமியில் நான் ஒரு பரதேசி என்ற உணர்வோ, இயேசுவின் வருகையை ஒவ்வொரு நாளும் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கும் மனநிலையோ இல்லாமல் இருக்கிறீர்களா?
ஜாக்கிரதை! இது மனதளவில் உங்களை நம் அப்பாவையும் அவர் வீட்டையும் விட்டு தூரத்தில் வைத்திருக்க சாத்தான் செய்த திட்டமிட்ட சதி.
எபிரெயர் 13:14, II பேதுரு 3:12, 2 கொரிந்தியர் 5:1-6
இந்த நிலை இன்று கிறிதவர்களிடம் உண்டா என்று பார்த்தால் அது இல்லை என்று தான் சொல்லவேண்டும்,இன்றைக்கு மக்களின் பனத்தை எப்படியாவது கர்ந்துவிடவேண்டும் என்பதில் ஒவ்வொரு பனம் படைத்த கோடிஸ்வர ஊழியர்களும் போட்டி போட்டுகொண்டு முன்னே நிற்க்கிறார்கள் என்பதை நினைக்கும்போது சற்று கிறிஸ்தவம் எங்கே போய் கொண்டுருக்கிறது என்று சொல்ல தோனுகிறது….1.பனம் சம்பாதிக்க கிறிஸ்து இந்த உலகத்தில் வந்தாரா? 2.புகழை தன்னகத்தே சேர்த்துகொண்டு பெருமையின் இருப்பிடமாய் இருந்தாரா? 3.தான் நல்ல நிலைமையில் இருந்தும் அனேக கோடிகளுக்கு சொந்தமாயிருந்தும் யாருக்கும்(ஏழை ஊழியங்களுக்கு,ஏழைகளுக்கு,திக்கற்றவர்களுக்கு,அனாதைகளுக்கு) உதவ வேண்டாம் என்றாரா? இரட்சிப்பு ஊழிக்காரனுக்கும்,இன்றைய விசுவாசிகளுக்குமே தேவை….வெளியிலுள்ளவர்களுக்கு அல்ல…………
kindly send the link for this warning message .. i want to download and send to my friends circle
thank you