அவர் அந்த நகரத்தின் மிக பிசியான பிரசங்கியார். அவரது பிரசங்கங்களால் பயனடைந்தோர் ஏராளம். பிரசங்கம் பண்ணுவது அவர் இரத்தத்தோடு கலந்துபோனது. அவருக்கு ஒருநாள் ஒரு ஊழியக்காரர்களுக்கான கூட்டத்தில் பேச வேண்டிய வாய்ப்பு வந்தது. ஊழியர்களுக்கான கூட்டமாதலால் அதற்காக சற்று சிரத்தையெடுத்து ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.
அதற்காக ஆயத்தமாகும்படி அவர் தேவ சமூகத்தில் உட்காந்து, ஆண்டவரே நான் இந்த கூட்டத்தில் என்ன பிரசங்கிக்க விரும்புகிறீர் என்று ஜெபித்த போது ஆவியானவர் பேச ஆரம்பித்தார், “எவ்வளவு காலம் அடுத்தவருக்கு பிரசங்கிப்பதிலேயே நேரம் செலவிடுவாய்? நான் உன்னைக் குறித்தும் அதிக கரிசனையோடிருக்கிறேன். உன்னைக் குறித்தும் உனது ஆவிக்குரிய வளர்ச்சிகுறித்தும் நீ அதிக சிரத்தையெடுக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், உன் படகு மூழ்கிக்கொண்டிருக்கிறது…எச்சரிக்கையாயிரு!” என்றார்.
“ஆண்டவரே என்னைக் குறித்து என்ன?…” என்ற தலைப்பில் அதுவே அந்த கூட்டத்தின் மையக்கருத்தானது. பிரசங்கத்தைக் கேட்ட ஊழியக்காரர்களிடம் மிகுந்த அசைவு ஏற்பட்டது. பலரும் தங்களை முதலாவது சரிசெய்து கொள்ளும்படி தேவனிடம் ஒப்புக்கொடுத்தனர். பிரசங்கியாரோ தனது ஊழியங்களில் தொடர்ந்து பிசியாக இருந்தார்.
ஒரு சில வாரங்கள் குறித்து இன்னொரு கூட்டத்துக்காக பிரசங்கத்துக்கு ஆயத்தமாகும்படி அவர் தேவ சமூகத்தில் உட்காந்து, ஆண்டவரே நான் இந்த கூட்டத்தில் என்ன பிரசங்கிக்க விரும்புகிறீர் என்று ஜெபித்த போது ஆவியானவர் பேச ஆரம்பித்தார், “எவ்வளவு காலம் அடுத்தவருக்கு பிரசங்கிப்பதிலேயே நேரம் செலவிடுவாய்? நான் உன்னைக் குறித்தும் அதிக கரிசனையோடிருக்கிறேன். உன்னைக் குறித்தும் உனது ஆவிக்குரிய வளர்ச்சிகுறித்தும் நீ அதிக சிரத்தையெடுக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், உன் படகு மூழ்கிக்கொண்டிருக்கிறது…எச்சரிக்கையாயிரு!” என்றார்.
பிரசங்கியார், ஜெபத்தில் இடமறித்தார்…நன்றி ஆண்டவரே! இந்த செய்தியை சில வாரங்களுக்கு முன்புதான் பிரசங்கித்தேன்? தயவு செய்து வேறு டாபிக் தாரும் …