வேதமே உங்கள் ஜெபமாக – நூல் அறிமுகம்

அன்பு சகோதரர் பென்னி அலெக்ஸாண்டர் அவர்களின் நெருங்கிய நண்பனாக இருப்பதாலும், ஒரு டிசைனராக இருப்பதாலும் அவரது எழுத்தில் உருவான “வேதமே உங்கள் ஜெபமாக” புத்தகத்தை அவர் வெளியிடுவதற்கு முன்பதாகவே வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

வேத வசனத்தோடு இயைந்த ஜெபமானது எத்தனை அவசியமானது, அழுத்தமானது, ஆழமானது, அழகானது, அசாத்தியமான பலன்களைத் தரக்கூடியது என்பதை எடுத்துக் காட்டும் புத்தகம். அன்னாள், யோசபாத், நெகமியா, பவுல், லேவியர்கள், எசேக்கியா ராஜா, தாவீது, சாலொமோன், எஸ்றா, தானியேல் எல்லாவற்றுக்கும் மேலாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என வேதாகமப் புருஷர்கள் செய்த ஜெபங்களை ஆழமாக ஆய்வு செய்து அதன் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பல ஆண்டுகள் ஜெப வாழ்வில் ஊறிப்போன நபராக நீங்கள் இருந்தாலும் நீங்கள் அறியாத, அறிந்து கொள்ளவேண்டிய அரிய தகவல்களை உள்ளடக்கியது இந்தப் புத்தகம். சகோதரருக்கு இந்த ஞானத்தையும், கிருபையையும் தந்த கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. இந்த நூலை வாசித்து முடிக்கும்போது ஜெபத்தையும், வார்த்தையையும் குறித்த நமது புரிதல் இன்னும் பெருகி விரிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

புத்தகத்தை வாங்க:
https://yawaypublications.myinstamojo.com/product/3276623/-e3de8?fbclid=IwAR1ih4ULvhR8FHKTvaosiImj4fthakMAuQ30rnlgFOqCwu8Nhi36mmH0YME

Leave a Reply