பிதாவின் சிங்காசனம்

நாட்டில் நடக்கும் அநியாய அக்கிரமங்களுக்கு எதிராக சபையாக ஜெபிப்பதும், சட்டத்துக்கு உட்பட்டு ஜனநாயக முறையில் எதிர்வினையாற்றுவதும் விசுவாசிகளின் கடைமை. பல நாடுகளில் கருக்கலைப்பு மற்றும் ஒருபால் திருமணத்துக்கு விரோதமாக சபை தனது எதிர்ப்பை அந்தந்த நாட்டு அரசிடம் கடுமையாக பதிவு செய்திருக்கிறது. ஆனால் நம்மை சுற்றி நடக்கும் காரியங்கள் நமக்குள் இருக்கும் தேவசமாதானத்தை குலைக்கும் அளவுக்கு நம்மை பாதிக்கக்கூடாது.

எல்லாவற்றையும்போல் இதற்கும் ஆண்டவராகிய இயேசுவே நமக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார். உலக வரலாற்றிலேயே மோசமான கொடுங்கோல் ஆட்சி ஒன்று இருந்திருக்குமானால் அது ரோம ஆட்சிதான். ரோம ஆட்சிக்கு அடிமையாக யூத இனம் வாழ்ந்த பொழுதிலும்கூட, அந்த நெருக்கடியான அரசியல் சூழலில் அதைவிட கொடுமையாக கடலும் கொந்தளித்துக் கொண்டிருந்தபோதும்கூட அந்த கடல் பயணத்தில் இயேசுவால் நிம்மதியாக உறங்க முடிந்தது. என் பிதாவின் வலுவான கரத்தினுள் அத்தனையும் அடங்கியிருக்கிறது என்ற அவரது விசுவாசமே அவர் பெற்றிருந்த மன சமாதானத்துக்கும், நிம்மதிக்கும் காரணம். நமக்கும் அதே விசுவாசம் இருக்கிறதா?

தேசத்தில் நடைபெறும் சம்பவங்கள் நமது நிம்மதியை குலைக்குமானால் நாம் “கர்த்தர் ராஜரிகம் பண்ணுகிறார் (சங் 93:1 )” என்ற உண்மையை மறந்துவிட்டோம் அல்லது அதை நம்பவில்லை என்று அர்த்தமாகிறது. அண்ட சராசரங்களும் அவரது கைக்குள் அடங்கியிருப்பதுபோலவே, நமது தேசமும் சூழ்நிலைகளும், இயற்கையும் பிதாவின் கைக்குள் அடங்கியே இருக்கிறது. இன்னும் வருங்காலத்திலும் அப்படியே இருக்கும்!

அவரது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது (சங் 93:2)

ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com

Leave a Reply