நேசர் இயேசு மாறாதவர்

மணவாளனாகிய இயேசுவுக்கும் மணவாட்டி சபைக்கும் இடையேயான உன்னத அன்பை மணவாட்டி மகிழ்ந்து பாடுவதுபோல புனையப்பட்ட பாடல் . பாடலைப் பாடிய அன்பு சகோதரி கிருபாவதி டேனியேல்  அவர்களுக்கும், இப்பாடலுக்கு இசையமைத்த  அன்பு தம்பி  ஜாக்சன் விக்டர் அவர்களுக்கும்,  மேலும் இப்பாடலுக்கு தங்கள் பங்களிப்பை அளித்த ஒவ்வொரு தேவபிள்ளைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

Music: Jackson Victor
Lyrics & Video Editing: Jayaraj Vijaykumar
Singer: Kirubavathi Daniel
Camera: Gladwin Bosco
Produced by: Naan Thazhchiadaiyen Pte Ltd & Channel of Blessing Ministries

Naan Thazhchiadaiyen Pte Ltd & Channel of Blessing Ministriநேசர் இயேசு மாறாதவர்
பேதம் ஏதும் பாராதவர்
கண்மூடும் கணம் கூட விலகாதவர்
கரைசேரும் வரை என்னைப் பிரியாதவர்

இரு பாதை மாறிச் செல்ல
இது மனித உறவு அல்ல
என் வலப்பாகம் பிரியாத
நிழலானவர்
பெரு வெள்ளம் ஏறிச் செல்ல
அதி லணையும் தீயும் அல்ல
அவர் அவியாத பேரன்பின்
தழலானவர்
தாயென்னை மறந்தாலும் மறவாதவர்
சேயென்னை பிரியாத உறவானவர்
பதினாயிரமும் ஆயிரமும் நெருங்காத
நிகரில்லா அழகனிவர்!

நேசர் இயேசு…

அவர் சொல்லை மீறிச் செல்ல – இனி
சிந்தை என்னது அல்ல,
அவர் மணவாட்டி தேகத்தின்
சிரசானவர்.
இனி எனது என்று சொல்ல
நானும் என்னவளல்ல
எனை அன்பாலே ஆட்கொண்ட
அரசானவர்.
மலையாக துணை நின்று எனைக் காத்தவர்
விலையாக உயிர் தந்து சிறை மீட்டவர்.
பாதகரை பேதையரை கரம் தூக்க
பரம் தந்த பரிசானவர்

நேசர் இயேசு…

2 thoughts on “நேசர் இயேசு மாறாதவர்”

    1. இசையமைப்பாளரிடம் கேட்கிறேன் சகோதரி. பாடலை இரசித்தமைக்கு நன்றி!

Leave a Reply