கோசேனுக்குள் கொள்ளைநோய் வராது

கொள்ளைநோய் நமக்கு வருமா வராதா என்பதை நாம் எகிப்தில் இருக்கிறோமா அல்லது கோசேனில் இருக்கிறோமா என்பது தீர்மானிக்கிறது. இன்று எகிப்து என்பதும் கோசேன் என்பதும் இடங்களல்ல.

எகிப்து என்பது அந்திகிறிஸ்துவினால் ஆட்கொள்ளப்பட்ட மீடியாக்கள் பேசும் பொய்களால் நிரம்பிய உலகத்தின் மனநிலை.

கோசேன் என்பது விசுவாசத்தால் வேலியடைக்கப்பட்ட மீட்கப்பட்டவர்களின் மனநிலை. நான் இப்படி எழுதியிருப்பதால் ஏற்கனவே கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் புண்பட வேண்டாம். உங்கள்மேல் இருக்கும் இயேசுவின் இரத்தமே உங்களை உயிரோடு காத்திருக்கிறது. உலகத்தின் பயமுறுத்துதல்களுக்கும், பொய்களுக்கும் செவிகளை அடைத்து. சத்தியத்துக்கு செவிகளைத் திறந்து கொடுப்போம்.

நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்(யாத் 15:26)

இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும்…பயப்படாதிருப்பாய்(சங் 91:6)

Leave a Reply