கொரோனா டிவி

எனது சிறுவயதில் எங்கள் வீட்டில் CROWN நிறுவன தயாரிப்பான ஷட்டர் வைத்த கறுப்பு-வெள்ளை டிவி வைத்திருந்தோம். அந்த டிவியின் மாடல் பெயர் Corona Super. ஆனால் மோசமான மரணபீதியைப் பரப்பும் உண்மையான Corona Super டிவிக்களை இப்போதுதான் பார்க்கிறேன். டிவியைத் திறந்தாலே கொரோனா புராணம்தான் ஓடுது, இடையிடையே இமான் அண்ணாச்சி வேற விளம்பரத்தில் வந்து, “மேல் வீட்டுல இருக்கு, பக்கத்து வீட்டுல இருக்கு, உங்க வீட்டுல எப்ப வாங்கப்போறீங்க?” என்று கேட்டு பயமுறுத்துகிறார்.

உங்கள் வீட்டு டிவிக்கு கொரோனா முற்றிய நிலையில் உள்ளது. அதை லாக்-டவுன் பண்ணி கொஞ்ச நாளைக்கு மாஸ்க் போட்டு மூடி வையுங்கள். அதனிடம் இருந்து சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். அதுதான் உடம்புக்கும் மனதுக்கும் நல்லது.

Leave a Reply