கிறிஸ்துவுக்குள் நாம் யார்?

கிறிஸ்துவுக்குள் திருமுழுக்கு பெற்றவர்கள். ( ரோமர் 6:3)

பாவத்திற்கு மரித்து, கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்கள். (ரோமர் 6:11)

கிறிஸ்துவுக்குள் சக விசுவாசிகளோடு ஒரே சரீரமாக இருக்கிறவர்கள். (ரோமர் 12:5)

கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்கள் ( 1 கொரி 1:2)

கிறிஸ்துவுக்குள் உயிர்ப்பிக்கப்பட்டவர்கள். (1 கொரி 15:22)

கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தப்பட்டு, அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். ( 2 கொரி 1:21)

கிறிஸ்துவுக்குள் வெற்றி சிறந்தவர்கள். (2 கொரி 2:14)

கிறிஸ்துவுக்குள் புதுபடைப்பானவர்கள். ( 2 கொரி 5:17)

கிறிஸ்துவுக்குள் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டவர்கள். (2 கொரி 5:19)

கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறவர்கள். (2 கொரி 5:21)

கிறிஸ்துவுக்குள் தன்னுரிமை(சுயாதீனம்) பெற்றவர்கள் (கலா 2:4)

கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். (எபே 1:3)

பிதாவுக்கு முன்பாக அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்காக உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். ( எபே 1:4)

கிறிஸ்துவுக்குள் பிதாவுடைய சுதந்திரவாளிகள். (எபே 1:12)

கிறிஸ்துவுக்குள் தைரியத்தோடும் திடநம்பிக்கையோடும் பிதாவிடத்தில் சேரும் சிலாக்கியம் பெற்றவர்கள். ( எபே 3:12)

வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் கிறிஸ்துவுக்குள் முத்திரைபோடப்பட்டவர்கள். (எபே 1:13)

கிறிஸ்துவுக்குள் பிதாவினிடத்தில் இரக்கம் பெற்றவர்கள். (எபே 2:6)

கிறிஸ்துவுக்குள் அவருடைய இரத்தத்தினாலே பிதாவுக்கு சமீபமானவர்கள். (எபே 2:13)

கிறிஸ்துவுக்குள் பிதாவானவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகள். (எபே 3:3)

கிறிஸ்துவுக்குள் பிதாவால் மன்னிக்கப்பட்டவர்கள். (எபே 4:32)

கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிறவர்கள். (கொலோ 1:2)

கிறிஸ்துவுக்குள் வேர்கொண்டவர்கள், அவர்மேல் கட்டப்பட்டவர்கள். (கொலோ 2:6)

கிறிஸ்துவுக்குள் பரிபூரணமானவர்கள். (கொலோ 2:10)

கிறிஸ்துவுக்குள் (கையால் செய்யப்படாத) விருத்தசேதனம் பெற்றவர்கள். (கொலோ 2:11)

கிறிஸ்துவுக்குள் பிதாவின் நித்திய மகிமைக்கு அழைக்கப்பட்டவர்கள். (1 பேதுரு 5:10)

பிரியமானவர்களே! நமக்கு தேவனால் கிடைத்த சகலமும் கிறிஸ்துவின் மூலமே கிடைத்தது. அவரன்றி நமக்கு பிதாவோடு பங்கில்லை. கிறிஸ்துவுக்கு வெளியே நமக்கு ஒன்றுமில்லை. கிறிஸ்துவுக்கு வெளியே மனிதனுக்கு மிஞ்சியிருப்பது நரகாக்கினை மட்டுமே!

இதை வெறுமனே வாசிப்பதோடு நிறுத்தாமல் அந்தந்த வேதபகுதியின் முழுமையையும் வாசித்து, ஆவியானவரின் ஒத்தாசையுடன் தியானிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

 

Leave a Reply