கலாச்சாரமல்ல…சாரமே முக்கியம்!

சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள்.(அப் 15:2)

சில யூதக் கிறிஸ்தவர்கள் சபைக்குள் யூதக் கலாச்சாரத்தைப் புகுத்த முயன்றாலும் முயன்றார்கள் உடனே பவுலும் பர்னபாவும் அவர்கள் மீது புலிகளைப் போல பாய்ந்துவிட்டார்கள், பின்னே என்ன அவர்கள் நம்மைப் போலவா? எந்தக் கள்ளத்தீர்க்கனும் வந்து வாலாட்டிவிட்டுப் போகட்டும் என்று காலாட்டிக் கொண்டு அமர்ந்து வேடிக்கை பார்க்க! தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று ஒரு பழமொழி உண்டு. நீங்கள் அவருடைய இரத்தத்துக்கு இரத்தமான சதைக்குச் சதையான உடன்பிறப்புக்களாக இருப்பீர்களானால் அப்பா வீடு சீரழிவது கண்டு நீங்கள் ஆடாவிட்டாலும் உங்கள் சதை ஆடும், இரத்தம் கொதிக்கும்.

அன்று பவுலும் பர்னபாவும் கலகம் பண்ணாதிருந்திருந்தால் நியாயப்பிரமாணம் மறுபடியும் சபையை ஆக்கிரமித்து கிறிஸ்துவின் மரணத்தை அர்த்தமற்றதாக மாற்றியிருந்திருக்கும். புதிய ஏற்பாட்டு சபையை ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் ஆக்கிரமிப்பதை எந்த தேவமனிதனும் பொறுத்துக் கொள்ளமாட்டான். அது யூதக்கலாச்சாரமாக இருந்தாலும் சரி, மேற்கத்திய கலாச்சாரமாக இருந்தாலும் சரி. காரணம் சபை என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கானது. வெவ்வேறு இன, நிற, மொழிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி ஒரே சரீரமாக மாறும் அதிசயம்தான் சபை. சபைக்கு உள்ள தெய்வீக அழகே இந்த வேற்றுமையில் ஒருமைதான். இந்த ஒருமைக்குள் நம்மை கிறிஸ்துவின் அன்பு என்ற காருண்யக் கயிறுதான் கட்டிவைக்க வேண்டுமே தவிர ஒரு கலாச்சாரக் கயிறல்ல.

பல்வேறு மக்கள் கூட்டத்தை ஒரே கலாச்சாரத்துக்குள் அடக்கி எல்லோருக்கும் ஒரே ஆராதனை மொழி, ஒரே வேதமொழி, ஒரே பழக்க வழக்கம் என்று திணித்து அதை ஒரு மதமாகவோ அல்லது ஒரு இயக்கமாகவோ கட்டி எழுப்புவது ஒரு பெரிய காரியமல்ல. அப்படி எழுப்பினால் அது முழுக்க முழுக்க மாம்சம்! ஆவியானவரோ நம்மை வேற்றுமைகளின் மத்தியிலும் சகோதர அன்பு எனும் அலங்காரக் கயிறால் நம்மை ஒன்றாகக் கட்டி அழகு பார்ப்பவர். இந்தக் கட்டுக்குள் வந்தபிறகு இனம், நிறம், மொழி எல்லாவற்றிற்கும் மரித்தவர்களாகிவிடுகிறோம்.

பிரியமானவர்களே! இந்தக் கட்டுரை எதைப் பற்றியதென்றால் நாம் ஆவிக்குரிய காரியங்களுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பது பற்றியதுதான். குதிரைகளைக் குறித்தும் இரதங்களைக் குறித்தும் மேன்மை பாராட்டுபவர்கள் பாராட்டிக் கொண்டே இருக்கட்டும். நாமோ கர்த்தரைக் குறித்து மாத்திரமே மேன்மை பாராட்ட அழைக்கப்பட்டவர்கள்.

மாம்சக் கண்களை முற்றிலும் மூடிவிட்டு, ஆவியின் கண்களை அகலத்திறந்து பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சீர்கேடுக்கும் கிழவிகள் பேச்சுக்கும் செவிகளை மூடி, தேவசத்தத்துக்கு செவிகளைத் திறந்து வைப்போம். பாத்திரத்தின் வெளிப்புறமல்ல உட்புறமே தேவனுக்கு முக்கியம். கலாச்சாரமல்ல, கிறிஸ்துவின் சாரமானது உப்பாகிய நமக்குள் இருக்கிறதா என்பதே பரலோகத்துக்கு நம்மீது உள்ள கரிசனை.

நம்மை ஆவிக்குரிய வளர்ச்சியில் முழுமையாக கவனம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்றுதான் பாரமான வேறு எந்த சுமையையும் நம்மீது சுமத்தப் போவதில்லை என்று ஆவியானவரும் அப்போஸ்தலரும் கலந்து முடிவெடுத்தார்கள். (அப் 15:29) எவ்வளவு நல்ல தேவன் பாருங்கள்! நீங்கள் ஆவிக்குரியவர்களாக வாழும்படி கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள் ஆகவே மனுஷருக்கு அவர்தம் பழக்கவழக்கங்களுக்கு அடிமைகளாகாதிருங்கள் என்று வேதம் சொல்லுகிறது.

அப்போஸ்தலர் 15க்காக தேவனைத் துதிக்கிறேன்! நல்லவேளை விருத்தசேதன முறை அன்றே வேரறுக்கப்பட்டுவிட்டது. இல்லாவிட்டால் கத்தி சுவிசேஷம் சொல்லும் நாம் கத்தியோடும் செல்லவேண்டியதாயிருந்திருக்கும். கத்தியும் கையுமாக வரும் நம்மைக் கண்டு ஜனங்கள் காததூரம் ஓடியிருக்க மாட்டார்களா? இருதயத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே விருத்தசேதனம் என்று அன்றே அப்போஸ்தலர் அறுதியிட்டுக் கூறிவிட்டனர் (ரோமர் 2:29)

நல்லவேளை (பழைய ஏற்பாட்டு) வேதகலாச்சாரத்தின்படிதான் உடையணிய வேண்டும் என்ற அவசியம் புது உடன்படிக்கை கிறிஸ்தவருக்கு இல்லை. தமிழகத் தெருக்களில் யூத உடையணிந்து நானும் என் மற்ற சகோதரர்களும் வலம் வருவதை என்னால் கற்பனை செய்து கூடப்பார்க்க முடியவில்லை. இவ்வித பாரத்தை நம் மீது சுமத்தாத ஆதிஅப்போஸ்தலருக்கு நன்றிகள்(அப் 15:29). மாம்சீக விழிகளுக்கு புலப்படும் வெண்ணாடைதான் அணியவேண்டும் என்றும் வேதம் சொல்லவில்லை. நீங்கள் உங்கள் கலாச்சார உடையை தாராளமாக அணியலாம். ஆனால் ஆன்மீக விழிகளுக்குப் புலப்படும் ஒரு வெண்ணாடையை நாம் இயேசுவிடமிருந்து வாங்கி அணியவேண்டும்(வெளி 3:18). மாத்திரமல்ல அந்த ஆடையை அசுசிப்படாமல் கடைசிவரை காத்துக் கொள்ளவேண்டும்(வெளி 3:4). அந்த ஆடையற்றவன் புறம்பான இருளில் தள்ளப்படுவான் என்று வேதம் எச்சரிக்கிறது(மத்22:11-13). வேதக்கலாச்சாரத்தை அல்ல வேதவார்த்தையாகிய இயேசுவின் சாரத்தை உங்களில் ஏற்றுக்கொள்ளுங்கள்.

திருமணத்தில் நீங்கள் தாலி வேண்டுமானாலும் கட்டுங்கள், மோதிரம் வேண்டுமானாலும் மாற்றுங்கள் வேதம் இதைத்தான் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தவில்லை. ஆனால் கிறிஸ்து சபையை நேசிப்பதுபோல கணவன் மனைவியை நேசிக்கவேண்டும் என்றும், சபை கிறிஸ்துவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தது போல மனைவி தன்னைக் கணவருக்கு ஒப்புவிக்கவேண்டுமென்றும் வேதம் திட்டவட்டமாக போதிக்கிறது(எபே 5), மாத்திரமல்ல நாமே கிறிஸ்துவுக்கு கறைதிரையற்ற மணவாட்டிகளாக வாழும்படி நம்மை அது அறிவுறுத்துகிறது. திருமணம் செய்யும் முறையல்ல திருமணத்துக்குப் பின் ஒரே மாம்சமாய் வாழும் வாழ்க்கையே முக்கியம். உலகத்துக்கு உப்பான நமது குடும்பங்களே சாரமற்று சாட்சியற்று வாழ்ந்தால் உலகத்துக்கு வேறு என்ன நம்பிக்கை இருக்கிறது?

நல்லவேளை அடக்க ஆராதனை முறைமைகள் சபைப் புத்தகங்களில்தான் காணப்படுகிறது வேதபுத்தகத்தில் அல்ல. மரித்தோரை புதைக்க வேண்டுமானாலும் புதையுங்கள் புதைக்க முடியாத பட்சத்தில் எரிக்க வேண்டுமானாலும் எரியுங்கள் ஆனால் சுயத்தை வென்று, கொன்று புதைக்க வேண்டுமென்று வேதம் சொல்லுகிறது (ரோமர் 6). சுயத்துக்கு மரிக்காத ஆத்துமாவை ஆயிரம் பிஷப்புகள் கூடி ஆராதனை நடத்திக்கூட பரலோகத்துக்குள் தள்ளிவிட முடியாது. கிறிஸ்தவக் கலாச்சாரமல்ல, கிறிஸ்துவின் சாரமே முக்கியம்.

தேவன் நமக்கு இவ்வித விடுதலை அளித்திருக்கும் வேளையில் நாம் கலாச்சாரம் என்ற பெயரில் விக்கிரக அடையாளங்களை மட்டும் சுமந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம் பிள்ளைகளுக்கு அர்த்தமுள்ள வேதப்பெயர்களைச் சூட்டலாம் அல்லது அழகான தமிழ்ப்பெயரைக் கூட சூட்டலாம். வேதப்பெயரைத்தான் சூட்டவேண்டுமென்று வேதமே நமக்குச் சொல்லவில்லை. ஆனால் அவர்களை வேதத்தின்படி வளர்க்கவேண்டும் என்பதே மகா மகா முக்கியம். அப்படியில்லாததால்தான் போத்திபார் மனைவி மடியில் தூங்கும் யோசேப்புகளாலும், வயதானாலும் கர்த்தர் உரக்கக் கத்திக் கூப்பிட்டாலும் கூட காது கேட்காத செவிட்டு சாமுவேல்களாலும், ஞானம் எந்தக் கடையில் கிடைக்கும் என்று கேட்கும் சாலமோன்களாலும், மூன்று முறையல்ல மூன்று லட்சம் முறை மறுதலித்துக் கொண்டே இருக்கும் பீட்டர்களாலும் இன்றைய கிறிஸ்தவம் நிறைந்து காணப்படுகிறது.

எனக்கன்பானவர்களே கலாச்சாரமல்ல..சாரமே முக்கியம். யூதம் அல்ல வேதமே முக்கியம். பாத்திரத்தின் வெளிப்புறமல்ல உட்புறமே முக்கியம்.

உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள் (மாற்கு 9:50)

 

17 thoughts on “கலாச்சாரமல்ல…சாரமே முக்கியம்!”

  1. “””” பின்னே என்ன அவர்கள் நம்மைப் போலவா? எந்தக் கள்ளத்தீர்க்கனும் வந்து வாலாட்டிவிட்டுப் போகட்டும் என்று காலாட்டிக் கொண்டு அமர்ந்து வேடிக்கை பார்க்க! தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று ஒரு பழமொழி உண்டு””””

    Super line Vijay Keep rocking

  2. Its Very nice. கலாச்சாரமல்ல..சாரமே முக்கியம். யூதம் அல்ல வேதமே முக்கியம். பாத்திரத்தின் வெளிப்புறமல்ல உட்புறமே முக்கியம். Very important word.

  3. Dear brother

    eventhough your message sounds good.I could find a hidden satanic agenda in your message
    The right thing should be when your heart changes you look graceful in your out look and attire also.
    When you are filled with the love of Jesus Christ, you will reveal Him through your every being.
    You can not dance like mike jackson but will dance like King David. You can not dress like merlin mantroe but dress like Sarah,Rebeka yea through the dress and apearence we can distinguish men and women of God and prostitutes..I pray….May the Holy Spirit give you wisdom to understand this.Dont be an instrument of Saten in the shadow of Jesus Christ. Dont be impulsive on reading the comment but if you realy examine your self in the Light of the Word of God you will be saved and guide the Church in the Light of the Lord.

    1. அன்பு சகோதரrர் ஜோசப் அவர்களுக்கு, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் எனது நன்றிகள்!

      hidden satanic agenda???????????

      கேள்வியை நீங்கள் கேட்டு அதற்க்கு பதிலையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள். ஒரு கிறிஸ்துவின் சாரமுள்ள விசுவாசி எப்படி மடொன்னா போல உடையணிய முடியும்??? நீங்கள் உங்கள் கலாச்சார உடையை தாராளமாக அணியலாம். என்று சொன்னது தங்களைப் பதித்ததா அல்லது வெண்ணுடை அணியத் தேவையில்லை என்று சொன்னது தங்களைளுக்கு எரிச்சல் மூட்டியதா என்று தெரியவில்லை. கலாச்சாரம் என்பதற்க்கும் கலாச்சார சீரழிவு என்பதற்க்கும் தங்களுக்கு பொருள் விளங்குமல்லவா? கலாச்சாரம் என்பது ஒரு நல்ல விஷயம்தான், மடொன்னா போல உடையணிவது கலாச்சார சீரழிவு. மடொன்னா உடைதான் தங்கள் கலாச்சாரமா? என்று அமெரிக்காவுலுள்ள சான்றோர்களிடம் கேட்டுப்பாருங்கள் புரியும். சாத்தானின் மறைமுக நோக்கத்தைப் பார்க்குமளவுக்கு இந்தச் செய்தியில் வேறு என்னத்தைக் கண்டீர்கள்???

  4. Dear brother

    Thanks for the open and frank reply

    1. I am in no way irritated or affected by your idea. but 100 % against the works of satan in disguise in Christian society.
    2. As you have asked to look to the older society for dress code and culture.
    when we dig back to our older society with respect to dress code or any other decoration of human body 100 % you will end up in disappointment to note that even at that time there were such people like madona etc etc etc in the society are you going to say we can follow that .When you read the Bible and submit to the word of God rather than forming our own ideas we will definitely can not dress like society as the Lord has called us to come out of the society and follow Him in Seperation and Holiness inside and out side.
    3. The important point is that the Word of God instruct us to do is to clean inside and outside a vessel will be called clean if cleansed inside and outside together.
    4. Kalacharam and Charam both are important in a Christian. A real child of God will leave every thing (every Kalacharam) for Jesus that is what early Christian men and women did to fallow Jesus Christ. In no way their Kalacharam was in line with the Kalacharam of that time.

    Hope you understand

    1. அன்பு சகொதரரே! தங்கள் பதிலுக்கு நன்றி!!!

      1, நான் கலாச்சாரம் என்றுதான் சொன்னேனே தவிர பழைய கலாச்சாரம் என்று குறிப்பிடவில்லையே!! நமது கலாச்சாரம் என்ன சேலை அணிவதும், வேட்டி சட்டையும் அதையே செய்யுங்கள் என்று சொல்வது எப்படி சாத்தானின் செய்தியாகும்? வேதம் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தை நம்மீது திணிப்பதில்லை, ஆனால் கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளும்படி நம்மை அறிவுறுத்துகிறது என்பதே செய்தியின் சாரம்.

      2. பாத்திரத்தின் வெளிப்புறம் அல்ல உட்புறமே முக்கியம் என்பதால், உட்புறத்தை மட்டும் சுத்தமாக்கு, வெளிப்புறத்தை அழுக்காக வைத்திரு என்பது இங்கு சொல்லப்பட்ட செய்தியல்ல, வேதம் சொல்வதும் அதுவல்ல.போஜன பான பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. என்பதே மத்தேயு 23:26 சொல்லும் செய்தி.

      3.// Kalacharam and Charam both are important in a Christian// இந்த வாக்கியம் தங்கள் 2ஆம் கருத்துடன் முரண்படுகிறது. சற்று விளக்கினால் நலமாயிருக்கும்.

  5. Dear brother

    The title of your views contradicts point no 2 of your reply.

    Later portion of Point No.2 of your reply gives the answer for point No.3

    It is needless to point out that your reply para 1 is the one I realy ponted out as demonic.

    It quite easy to identify a lady or a man by his dressing irrespective of type of dress they wear
    I explain little more we can make out a lady wearing a saree or a man wearing trousers a rich or poor, bad or good etc etc and Man or women of God or worldly.

    The inner change through our Lord Jesus Christ is so immediate as well as outer change through the inner Man.

    Definitely the above points will clarify to explain both charam which is inside and Kalacharam which is seen outside are important for a Christian and if any one do not change both according to the word of God we can see the Kalacharam will easily overcome charam in Jesus Christ and distroy a Christian life or make him shallow. Hope this clarify…God bless you

  6. //நல்லவேளை (பழைய ஏற்பாட்டு) வேதகலாச்சாரத்தின்படிதான் உடையணிய வேண்டும் என்ற அவசியம் புது உடன்படிக்கை கிறிஸ்தவருக்கு இல்லை. தமிழகத் தெருக்களில் யூத உடையணிந்து நானும் என் மற்ற சகோதரர்களும் வலம் வருவதை என்னால் கற்பனை செய்து கூடப்பார்க்க முடியவில்லை//

    Super Brother!!! இன்று உடை மாறுதலையும் நகை கழற்றுவதையும் தான் full gospel என்று கூறுகிறோம். எங்களில் அனேகரிடம் உள்ளான மாறுதலைக் காணமுடியவில்லை. ஆவியின் கனிகளைவிட மாமிசத்தின் கிரியைகளே எங்களிடமும் அதிகம் உள்ளது -:

  7. Dear brother,in many of the churches today,most of the women are not covering their heads..But in Bible it is written that women should cover their heads during prayer and prophecy..When I asked a pastor about that,he replied that it was done in earlier days,as a sign that women are subjective to men,(as a symbol of obedience)..But it is not necessary if u really honour your husband in ur heart…Can u clarify…

  8. But if the entire women in the church is not covering their heads,they are looking at the person who is covering their head differently…Moreover even if i cover my head,if i am not really submissive to my husband ,that covering will be just an act..The entire context here in this scripture is about submissive to the man,right? These are my doubts.dont mistake me brother,i would like to know the truth as it is..

Leave a Reply