கப்பல் கவிழ்ந்த கதை (பாகம்-2)

நீங்கள் முதல் பாகத்தை வாசிக்காவிடில் அதை வாசிக்க இங்கே சொடுக்கவும்

எனக்கு அருமையானவர்களே! இந்த கட்டுரையால் என் தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்வுக்கு என்ன பயன் என்று நீங்கள் நினைக்கலாம். புதிய ஏற்பாட்டு சபையில் தனிப்பட்ட பிரயோஜனம் என்று எதுவுமே இல்லை. ஏனெனில் நாம் நமக்காக வாழ்வதை நிறுத்திவிடும்படி அழைக்கப்பட்டவர்கள் அது ஆவிக்குரிய வாழ்க்கையாக இருந்தாலும் சரி. “இனி நான் அல்ல” (கலா 2:20) என்பவனே புதிய ஏற்பாட்டு விசுவாசி. கிறிஸ்துவின் முகவரியே நம் எல்லாருடைய முகவரியும் ஆகும். புதிய ஏற்பாட்டுக் கடிதங்கள் பெரும்பாலும் சபைகளுக்கே எழுதப்பட்டவை. வெளிப்படுத்தின விசேஷத்தின் முதல் மூன்று அதிகாரங்களில் ஆண்டவர் சபைகளுக்கே பேசினார். சபைகளுக்கு ஆவியானவர் சொல்வதை காதுள்ளவர்கள் கேட்டு அதை தங்கள் வாழ்க்கையில் அமல்படுத்துவதும் அடுத்த சகோதரனும் அதை செய்யும்படி அவனை ஊக்கப்படுத்தி புத்திசொல்லுவதுமே கிறிஸ்தவமாகும். “நான்”, “எனது தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்வு” என்பதே தவறான மூலத்திலிருந்து வந்ததாகும். ஒரு சரீரத்தின் எல்லா அவயவங்களும் மரித்துக் கிடக்கும்போது ஒரு அவயவம் மட்டும் வளர்ந்து கொண்டிருக்க முடியாது. இந்தக் கட்டுரையும் பொதுவாக சபைகளுக்கு எழுதப்பட்டதாகும் ஆனால் இதில் நாம் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளவேண்டிய காரியங்கள் பலவுண்டு.

சபைமக்கள் கொடுக்கும் காணிக்கைகள் அனைத்தையும் மேய்ப்பன் என்ற ஒருவரே வாரிக்கொண்டு போவதும், காணிக்கைகளை திருச்சபை என்ற பெயரில் இயங்கும் ஒரு நிறுவனத்துக்காகவும் அதன் கட்டிடங்கள், அமைப்புகள், வாகனங்கள் போன்றவற்றிற்காகவும் செலவிடுவது தேவன் நமக்கு வகுத்துத் தந்த முறை அல்ல. இன்றைய சபையைக் கொன்று கொண்டிருப்பதே இந்தக் காரியம்தான். தான் கர்த்தருக்குக் கொடுப்பதாக எண்ணிக்கொண்டு மிகுந்த கஷ்டத்தின் நடுவில் காணிக்கை கொடுக்கும் ஒரு ஏழை விசுவாசியின் காணிக்கை கர்த்தர் கைக்குப் போவதில்லை. அதாவது கர்த்தர் கொடுத்த சமநிலைப் பிரமாணத்தின்படி அந்த காணிக்கை செலவிடப்படுவதில்லை. மாறாக அன்று ஓப்னியும் பினகாசும் 1சாமு 2:12-17 இல் செய்ததை இன்று பலர் ஊழியம் என்ற பெயரில் செய்து கொண்டிருக்கிறார்கள். கர்த்தரின் சரீரத்துக்குப் (சபைக்கு) போகவேண்டிய உணவானது சட்டியில் வெந்து கொண்டிருக்கும்போதே ஆசாரியன் மூன்று கூறுள்ள ஆயுதத்தால் குத்தி தனக்கென்று எடுத்துக் கொள்ளுகிறான்.

“ஆதலால் அந்த வாலிபரின் (ஓப்னி,பினகாஸ்) பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது” (1சாமு 2:17).

கர்த்தருக்கு கொடுப்பதாக நினைத்து காணிக்கை கொடுக்கும் விசுவாசி ஏமாற்றப்படுகிறான். சமநிலைப் பிரமாணம் மீறப்படுகிறது. மந்தை ஏழ்மையிலேயே உழல்கிறது. மேய்ப்பனோ தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளுகிறார்.” எவன் மந்தையை மேய்த்து அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்? என்று I கொரி 9:7 சொல்வது உண்மைதான். ஆனால் மந்தையின் பால் முதலாவதாக எஜமானை சென்றடைய வேண்டும். மேய்பனுக்குரியது ஒரு சிறுபங்கே ஆகும். “மந்தையை நானே மேய்க்கிறேன் பால் எனக்கே சொந்தம்” என்று சொல்லிக்கொண்டு எல்லா ஆடுகளின் பாலையும் ஒருவனே குடித்தால் வயிறு வெடித்துவிடும்.

ஆதித்திருச்சபையில் சில அப்போஸ்தலர்கள் 1கொரி 9:7 சொல்லும் மந்தையின் பாலைத்தான் சாப்பிட்டார்கள். ஆனால் அவர்கள் எல்லாத்தையும் சுருட்டிக் கொண்டு மில்லியனர்களாக மாறவில்லை. மாறாக தங்களுக்கு எவ்வளவு அத்தியாவசியத் தேவையோ அதை மட்டுமே பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் மாதாந்திர வட்டிகட்ட எந்த லோனும் வாங்கி கட்டிடங்களைக் கட்டவில்லை, அவர்களது குதிரைக்கு தீனி(பெட்ரோல்) போட அவர்களிடம் எந்த சாரட் வண்டியும்(கார்,பைக்) இல்லை. காணிக்கை முழுவதும் தனது சபையிலும் மற்ற சபைகளிலும் உள்ள ஏழைகளான விசுவாசிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இன்று மல்கியா 3 ஆம் அதிகாரம் திரும்புகிறது, பண்டகசாலையில் சேரவேண்டிய காணிக்கை ஆசாரியனின் வங்கிக்கணக்கில் ஏறுகிறது. கர்த்தர் வஞ்சிக்கப்படுகிறார். சபைக்குள் ஏழைகளாகவும் கடன்காரராகவும் வந்தவர்கள் மேலும் மேலும் ஏழைகளாகவும் கடனாளிகளுமாகவே மாறிப்போகிறார்கள். ஏனெனில் பொருளாதார சிக்கல் நீங்க வேண்டுமென்றால் கர்த்தருக்குக் கொடுக்கவேண்டும் என்று போதிக்கப் படுகிறது. அவர்கள் அதை நம்பி மேலும் கடன்பட்டுக் கொடுக்கிறார்கள். கொடுக்கும் பணம் மேய்ப்பன் வாய்க்குள் போகிறது. கடனாளி மேலும் கடனாளியாகிறான். ஐயோ! இது அக்கிரமம்! பகல் கொள்ளை!!

பிரியமானவர்களே! இதினிமித்தமே இன்றய சபை “இக்கபோத்” நிலையை அடைந்துவிட்டது. இக்கபோத் என்பதற்கு ”கர்த்தரின் மகிமை இஸ்ரவேலை (சபையை) விட்டு விலகிவிட்டது” என்று அர்த்தமாகும். கர்த்தருடைய காணிக்கையை வஞ்சித்த பினெகாஸ் பெற்ற பிள்ளைதான் இந்த இக்கபோத் (1சாமு 4 ஆம் அதிகாரம்). இன்றும் பலர் தங்கள் ஊழியத்தில் ஆவிக்குரிய இக்கபோத்துகளையே பிள்ளைகளாகப் பெறுகிறார்கள். கர்த்தரின் மகிமை தங்களைவிட்டு விலகிவிட்டபடியால்தான் இவர்களுக்கு அதை சரிகட்ட சைக்காலஜியும், பரவச அனுபவங்களும், இசைக் கருவிகளும், உணர்ச்சிவசப்படுத்தும் கதைகளும் தேவைப்படுகிறது. அந்தோ பரிதாபம்!!

(இசைக்கருவிகளைப் பயன்படுத்துவது தவறல்ல ஆனால் அதை உணர்ச்சிகளைத் தூண்டப் பயன்படுத்துவதே தவறாகும்)

அனனியா, சப்பீரளை மறந்துவிடாதிருங்கள்!! சபைக்குள் விழுந்த முதல் பிணம் பண விஷயத்தில் பரிசுத்த ஆவியானவரோடு விளையாடியதால் விழுந்தது. உலகப் பொருளோடு கள்ளக்காதலை வைத்துக்கொண்டு கிறிஸ்துவுக்கு மணவாட்டியாக வாழமுடியாது (லூக்கா 16:13). கிறிஸ்துவுக்கு மணவாட்டியாக மாற விரும்பிய ஒருவனை நோக்கி அவர் சொன்னது: உனது பழைய உறவை முறித்துவிட்டு பின்னர் என்னிடம் வா என்பதாகும். அவனோ மனமில்லாதவனாகத் திரும்பிப் போய்விட்டான் (மத் 19:16-24).

மகிமை நிறைந்த ஆதித்திருச்சபையை விட்டு இன்று வெகுதூரம் கடந்து வந்துவிட்டோம். நம்மைப்போல சீர்கெட்டு அலைந்த இஸ்ரவேலை வனாந்திரத்தில் சந்தித்த எரேமியா தீர்க்கதரிசி அவர்களுக்கு சொன்னது இதுவே: “வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (எரே 6:16)

அருமையானவர்களே! பூர்வ பாதைகள் எவையென்று விசாரியுங்கள். தேவமகிமையை எங்கே தொலைத்தோம் என்று தேடி ஓடுங்கள். உண்மையைச் சொல்லுகிறேன், பாரத்தோடு சொல்லுகிறேன் அவர் மகிமை இப்போது நம்முடன் இல்லை. அதை எப்போதோ இழந்துவிட்டோம். உலக ஆசீர்வாதங்களை தேடிக்கொண்டிருக்கையில் அவரது மகிமையைத் தொலைத்துவிட்டு தொலைத்ததை இன்னும் அறியாதிருக்கிறோம். நம்முடைய நெற்றிகளில் இக்கபோத் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும் நாம் இன்னும் நிர்மூலமாகாதிருப்பது அவரது சுத்த கிருபையே!

இனி நாம் என்ன செய்வது????

ஆதிநிலை ஏகுதலே நமக்கு முன் உள்ள ஒரே வழியாகும்.

நமக்குள்ள எல்லாவற்றையும் விற்று விட்டு சமமாய்ப் பங்கிட்டுக் கொள்வது என்பது நாம் இப்போதுள்ள சூழ்நிலையில் இயலாத காரியம். அதைச் செய்யச் சொல்லி வேதம் கட்டளையிடவும் இல்லை. ஆனால் அதுவே நமது குறிக்கோளாக இருக்கட்டும். ஆதித்திருச்சபையின் மகிமையை அனுபவிக்க விரும்பினால் அவர்கள் சென்ற பாதைகளில் செல்வதே வழியாகும். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் வேதம் நம்மை என்ன செய்யச் சொல்லி கட்டளையிட்டிருக்கிறதோ அதிலிருந்து துவங்குவதே உசிதம். ஒரு 21 ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவனைப் பார்த்து உனக்குள்ள எல்லாவற்றியும் விற்று அப்போஸ்தலர் பாதத்தில் வை என்பது ஒரு LKG மாணவனை C# Programe எழுதச்சொல்லுவது போன்றதாகும். அதுவே நமது இலக்காக இருக்கட்டும் ஆனால் எங்கிருந்து துவங்க வேண்டுமோ அங்கிருந்து துவங்கித்தான் இலக்கை வேண்டும்.

“பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (2கொரி 9:6,7).

நாம் அவரவர் சூழ்நிலைக்குத் தக்கதாக மனதில் நியமித்தபடியே உற்சாகமாகக் கொடுக்க வேண்டும். நம்மில் பலர் லோன், கடன் என்ற பல பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். வீட்டு வாடகை, பிள்ளைகள் படிப்பு என்று பல காரியங்கள் இருக்கிறது. எனவே நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவை உற்சாகமாகக் கொடுக்கவேண்டும். கொடுக்கப்பட்ட பணமானது பகிரப்பட்டு சபைக்குள் உள்ள தரித்திரரான சகோதரருக்கு பகிர்ந்து அளிக்கப்படவேண்டும்.

சபையின் மேய்ப்பன் ஒருவேளை உலகப்பிரகாரமான வேலை செய்யாமல் கர்த்தருடைய ஊழியத்தை மட்டும் செய்யும்படி அழைக்கப்பட்டிருந்தால் அவரை அந்த சபையே தாங்கவேண்டும்.

”நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாக திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.”(1தீமோ 5:17,18).

பிரியமானவர்களே! அவர்களுக்கும் தினசரி உணவு, வீட்டுவாடகை, பிள்ளைகள் படிப்பு போன்ற காரியங்கள் இருப்பதை நாம் மறக்கக் கூடாது. சபையின் பணவிஷயங்கள் அனைத்தும் திறந்த புத்தகமாக அனைவருக்கும் தெரியும் வகையில் இருக்க வேண்டும். பணக்காரியங்களை நிர்வகிப்பதற்க்கு உண்மையும் உத்தமமுமான சகோதரர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இதை இன்றைய பெரிய சபைகளிடம் பேசினால் நம்மைப் பார்த்து கைகொட்டி சிரிப்பார்கள். மேற்க்கண்ட காரியங்களை செயல்படுத்த இன்று உள்ள நல்ல வழி வீட்டுக் கூட்டங்கள், வீட்டுக் கூட்டங்கள், வீட்டுக் கூட்டங்களே!

ஆனால் சமீபத்தில் அமெரிக்காவில் பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்ட வீட்டுக் கூட்டங்கள் எனும் இயக்கம் படுதோல்வியடைந்தது. காரணம் என்ன தெரியுமா? அவர்கள் வேதத்தில் உள்ள எழுத்துக்களை பின்பற்ற முயற்சித்தார்களேயன்றி இயேசுவைப் பின்பற்ற முயற்சிக்கவில்லை. வெறும் எழுத்துக்களைப் பின்பற்றினால் ஒன்றும் விளையாது. மெய்யான மனந்திரும்புதலும் அன்பும் கர்த்தருக்காகப் பற்றியெரியும் பக்தி  வைராக்கியமுமே நம்மை நெருக்கி ஏவவேண்டும்.

எச்சரிக்கை!! வெறும் சமநிலைப்பிரமாணத்தைப் பின்பற்றினால் எழுப்புதல் வந்துவிடும் என்று நினைத்தால் ஏமாந்து போவோம். நமது மனந்திரும்புதலின் விளைவாக முறைமைகள் மாறவேண்டுமே தவிர முறைமைகளை மாற்றினால் மனந்திரும்புதலும் எழுப்புதலும் வராது.

வீட்டுக் கூட்டங்கள்தான் வழியென்றால் அதற்காக  இன்று உள்ள சபைகளில் சமநிலைப் பிரமாணம் அமல்படுத்தவே முடியாது என்பதல்ல. பாரம்பரிய சபைகளிலும் கூட இன்னும் தேவனுக்காக எழும்பி நிற்கும் மேய்ப்பன்மார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மனமிருந்தால் மார்க்கமுமுண்டு. பிரியமானவர்களே! இந்த சமநிலைப் பிரமாணத்தை செயல்படுத்த நாம் சபையாக பொருளாசைக்கு மரிக்க வேண்டும். சிலரை கைதூக்கி விட வேண்டுமானால் சிலர் சிலவற்றை இழந்தே ஆகவேண்டும். யாரால் அதிகமாகக் கொடுக்க முடியுமோ அவர்கள் அதிகமாகக் கொடுக்க வேண்டும். கடனிலும் பொருளாதார நெருக்கடியிலும் உள்ள விசுவாசிகள் தங்களால் இயன்ற அளவு கொடுக்க வேண்டும். கர்த்தர் கிருபையால் அந்தக் கட்டுகளிலிருந்து வெளியேறியபின் அவர்களும் அதிகமாகக் கொடுக்கத் துவங்க வேண்டும்.

சமநிலைப் பிரமாணமானது வேதத்தில் எதனோடு ஒப்பிடப்பட்டுள்ளது தெரியுமா?

”எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம், சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.” (2 கொரி 8:14,15)

“எழுதியிருக்கிறபிரகாரம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது எங்கே எழுதப்பட்டிருக்கிறது?

யாத்திராகமம் 16:13-18:

“பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின் மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின் மேல் கிடந்தது.இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.

கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்; உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளக்கடவன் என்றான். இஸ்ரவேல் புத்திரர் அப்படியே செய்து, சிலர் மிகுதியாயும் சிலர் கொஞ்சமாயும் சேர்த்தார்கள்.

பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள்”

பிரியமானவர்களே! கர்த்தர் இஸ்ரவேல் சபை பிழைத்திருக்க உண்ணும்படி மன்னாவைக் கொடுத்தார். புதியஏற்பாட்டு சபை பிழைத்திருக்கும்படி விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிற கர்த்தர் கொடுத்த பிரமாணமே இந்த சமநிலைப் பிரமாணமாகும்.

நாம் சிறிய அளவிலிருந்து துவங்கலாம், கர்த்தருடைய மகிமை நம்மைப் பிரகாசிக்கும் அவரை நெருங்க நெருங்க இன்னும் நமது உலகப்பற்று விடுபடும். இனி சபைகளில் உலக ஆசீர்வாதங்களைப் பிரசங்கிக்க தேவையில்லை, மலைப் பிரசங்கத்தையும், சீஷத்துவத்தையும் பிரசங்கப் பீடத்திலிருந்து உரக்கக் கூறலாம். “ஒருவனும் தன்னுடயதை தன்னுடையதென்று சொல்லாத” அந்த ஆதித் திருச்சபை அனுபவமே நாம் எட்டிப்பிடிக்கக் ஏங்கும் இலக்காய் இருக்கட்டும். அதுவே கிறிஸ்துவின் சுபாவமும் கூட. அவர் தனது பரமத் தகப்பனையே நமக்கு பங்கிட்டுக் கொடுத்தாரே! அவரது சிங்காசனத்தில் தம்மோடு நம்மையும் அமர வைத்தாரே! அவருக்கே மகிமையுண்டாகட்டும்.

10 thoughts on “கப்பல் கவிழ்ந்த கதை (பாகம்-2)”

 1. // இசைக்கருவிகளைப் பயன்படுத்துவது தவறல்ல ஆனால் அதை உணர்ச்சிகளைத் தூண்டப் பயன்படுத்துவதே தவறாகும் //

  இசைக்கருவிகள் உணர்ச்சியைத் தூண்ட பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு உதாரணம் அவற்றின் இரைச்சல் தான்; இசைக்கருவிகளின் ஒலியளவு 40சதவீதமும் பாடகர் அல்லது நடத்துபவரின் ஒலியளவு சுமார் 60 சதவீதமாவது இருக்கவேண்டும்; பொதுவாகவே கிறித்தவ ஆராதனைகளில் இரைச்சல் அதிகமாக இருப்பதால் அது மாற்று மார்க்கத்தவருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

  // சபையின் மேய்ப்பன் ஒருவேளை உலகப்பிரகாரமான வேலை செய்யாமல் கர்த்தருடைய ஊழியத்தை மட்டும் செய்யும்படி அழைக்கப்பட்டிருந்தால் அவரை அந்த சபையே தாங்கவேண்டும். //

  சபையின் மேய்ப்பன் என்பவர் உலக வேலையிலும் இருக்கலாமா என்பதையும் ஆராயவேண்டும்; சபையின் கணக்கு வழக்குகளை சரிபார்த்து தணிக்கை செய்ய ஊழியரின் உறவுகளைத் தவிர்த்து சபையின் மூப்பர்களை நியமித்தல் வேண்டும்;

  இதற்கொரு நல்ல உதாரணம்,சிஎஸ் ஐ சபைகள்;ஆனால் அது ஆவியில்லாத சபை என்று ஒதுக்கித் தள்ளப்பட்டது;ஆனால் ஆவியுள்ள சபைகளில் பணஆசை தலைவிரித்தாடுகிறது;

  கர்த்தரைப் பாடுவதாகவும் கர்த்தர் தந்ததாகவும் கூறப்பட்டு தயாரிக்கப்படும் சிடிக்கள் பெரும்பாலும் சினிமாக்காரர்கள் புறக்கணித்த ட்யூன்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது; இதன் பாதிப்பை அந்த இசைத் தொகுப்பில் காணலாம்.

  இப்படி பண வசூலுக்காகவே சிடிக்கள் தயாரிக்கப்படுகிறது;இது பலரையும் பாதித்து திறமையில்லாதவரும் அழைப்பு இல்லாதோரும் கூட இசை ஆல்பம் தயாரிப்பில் குதித்து கிறித்தவ இசையை மாசுபடுத்திக்கொண்டிருக்கின்றனர்.

 2. சூப்பர், தொடர்ந்து கலக்குங்க. இந்தியா பக்கம் வரும்போது சொல்லுங்க. முடிஞ்சா சந்திக்கலாம். ஒத்த கருத்துள்ளவர்கள் இணைந்தால் ஜெபிக்கலாம், தேற்றலாம், சேர்ந்து கலக்கலாம்.

 3. நல்ல கட்டுரை. மத்தேயு 24 4ல் இயேசு “ஒருவனும் வஞ்சியாதப்படி எச்சரிக்கையாயிங்கள்” என்றார். மனிதன் மட்டுமல்ல காணிக்கைப் பணமும் நம்மை இயேசுவை விட்டு விலக்கிவிடாதப்படிக்கு (வஞ்சித்து விடாதபடி) கவனமாய் பண விடயத்தில் இருப்பது நலம்.

 4. தேவ குமாரனின் கதறல்களை இக்கட்டுரைகள் எமக்குத் தருகின்றன.
  என்னே ஆச்சரியம்.துன்மார்க்கரை தேவன் தமது வாயின் வார்த்தைகளால்
  சங்கரித்தால் எவ்வளவு நலமாக இருக்கும்?
  அது தான் இதோ?

 5. ஆண்டவருக்கு என்று கொடுக்க்கப்படும் பணம் தனியே கிறிஸ்தவர்களுக்கு மட்டும் தான் பகிரப்பட வேண்டுமா வறுமையில் வாடும் பிற மத சகோதரர்க‌ளிற்கு உதவுவது மிக முக்கியமானது அல்லவா

 6. மிக அருமையாய் எழுதுகிறீர்கள் ஐயா. தங்களுடைய எழுத்துக்கள் எல்லாம் ஆவியானவருடைய உள்ளக்கிடக்கையை படம்பிடித்துக் காட்டுகிறது. உண்மையாய் ஆண்டவரை நேசிக்கிற ஒருசிலராவது இதை தங்கள் சபைகளில் கடைபிடிக்க முன்வருவார்கள் என விசுவாசிக்கிறேன்.

 7. (Please bear with me for writing in English, currently I am learning to type in Tamil, which takes a lot of time:))

  Dear brother,
  I can understand your heart cry towards how today’s christendom has fallen a prey to the love of money and selfish ambitions.

  I agree with you on all that you have said except that the ideal for the believers is to have everything in common. This may not be practical, God wants us primarily to be free from the love of money and our selfishness and to have a generous heart (and hands!) towards our fellow believers.

  In my opinion, we should not take the Acts of the Apostles as our model for the New Covenant church, because there were many things the early Christians did which were not inspired by the Holy Spirit. For example, they drew lots for selecting the 12th apostle, Paul made a vow and tonsured, they sold their properties and had everything in common. These are historical facts, but not something to model ourselves after.

  As you also point out, there is no command in the epistles for the believers to have everything in common. They were commanded to care for the the needy in their midst and other places. Also, Paul even gave commands in one of the epistles for masters and slaves (which was the order of the day in those days). The book of Philemon is a case in point. If they had everything in common, there would not have been masters and slaves.

  (I love Bro. Zac Poonen’s wise advice on how to avoid going to the extreme in matters concerning doctrines by asking ourselves 4 simple questions:
  1. Did Jesus do it?
  2. Did Jesus teach it?
  3. Did the Apostles do it?
  4. Did the Apostles teach it?
  If “No” is the answer to any of these questions, it is of secondary importance.)

  I completely agree with you that we should support the needy brothers and sisters in God’s household. I would also say that we should be willing to lay down our lives for our brothers and sisters in Christ (1 John 3:16, 17). Imagine a local church, in which, everyone loves each other as himself/herself and is willing to die for one another. This is far greater than being able to live together having everything in common.

  Also, our primary responsibility is towards our own brothers and sisters whom we see and fellowship with. One cannot possibly practically love all the believers in the world in the same measure as the believers whom he/she has fellowship with. As a church we should try to support God’s work worldwide.

  I condemn all the works of today’s Babylonian Christianity as you do. But in an effort to take a stand against it, I fear, that you would go to an extreme of saying that the church’s ideal is to live together having everything in common.

  May the Lord lead you in His grace! Continue doing your great work, my brother!!

Leave a Reply