ஓநாய் வார்த்தைகள்

ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் மனிதர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை, அவை வார்த்தைகளாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட வார்த்தைகளில் சில கீழே:

என்னுடைய ஜெபம்
என்னுடைய ஊழியம்
என்னுடைய உபவாசம்
என்னுடைய பரிசுத்தம்
என்னுடைய விசுவாசம்
என்னுடைய தாலந்து
என்னுடைய பிரசங்கம்
என்னுடைய கீழ்படிதல்
என்னுடைய பாடுகள்
என்னுடைய அபிஷேகம்

மேற்கண்ட வார்த்தைகளில் “என்னுடைய” என்பது சுயம் என்கிற ஓநாய், அதோடு இணைந்த ஆவிக்குரிய வார்த்தைகள் ஆட்டுத்தோல்கள். இவ்வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் தவிர்க்க இயலாது, ஏதோ ஒரு சூழலில் சரியான பிரயோகத்துக்காகப் பயன்படுத்துவது என்பது வேறு. வேதாகமப் பரிசுத்தவான்கள்கூட மேற்கண்ட வார்த்தைகளை பல இடங்களில் சரியான நோக்கத்தோடு பயன்படுத்தியிருக்கிறார்கள்.

எனவே இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவோரெல்லாம் பெருமைக்காக பயன்படுத்துவார்கள் என்பது அர்த்தமல்ல, ஆனால் பெருமைக்காரரெல்லாம் அடிக்கடி இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள்.

Leave a Reply