ஆவிக்குரிய நிலையில் திருப்தியடையாது முன்னேறவும் (எபி 6:12, எபே 4:11), உலகப் பொருளிலோ உள்ளதில் திருப்தியாயிருக்கும் படியாகவும் (1தீமோ6:6-12) வேதம் போதிக்கிறது. ஆனால் நாமோ நம்முடைய ஆவிக்குரிய நிலைமையில் ஏக திருப்தியாகவும், உலகப் பொருளிலோ சற்றும் திருப்தியடையாமல் தா,தா எனும் அட்டையின் குமாரத்திகளைப் போல (நீதி 30:15) திறந்த வாயுடன் வானத்தின் பலகணிகள் திறக்காதா என்று காத்துக் கொண்டிருக்கிறோம்
இயேசு மனிதர்களை நேசித்தார், பொருட்களைப் பயன்படுத்தினார் நாமோ பொருட்களை நேசிக்கிறோம், மனிதர்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிறோம்.
இயேசு சாத்தானுக்கு ராஜசிங்கமாகவும், மனிதர்கள் தனது தாடியை இழுத்து கன்னத்தில் அறைந்தபோது ஆட்டுக்குட்டியாகவும் அமைதிகாத்தார். நாமோ மனிதர்களிடம் சிங்கமாக சீறுகிறோம், சாத்தானிடமோ அவன் இழுக்கும் இழுவைக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் சாதுவான ஆட்டுக்குட்டியாக இருக்கிறோம்.
”என் வீடு பாழாய்க் கிடக்கிறது நீங்களோ அவனவன் தன் தன் வீட்டுக்கு ஓடிப் போகிறீர்களே” என்று ஆண்டவர் அங்கலாய்த்த காலத்தில் (ஆகாய் 1:4,9) ஒருவனும் ஆலயம் கட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை. இன்றோ கட்டிடங்கள் தேவையில்லை, நீங்களே அந்த ஆலயம் என்ற பிறகு ஐக்கியத்தில் ஆர்வம் காட்டாது மாய்ந்து மாய்ந்து ஆலயக் கட்டிடங்களைக் கட்டுகிறோம்
என்னை தசம பாகத்தில் வஞ்சிக்கிறீர்களே! (மல் 3:8) என்று கர்த்தர் கர்ஜிக்கும் அளவுக்கு கஞ்சமகா பிரபுக்களாக அன்றைய பழைய ஏற்பாட்டுக்காரர்கள் இருந்தார்கள். தசமபாகக் காலமெல்லாம் ஒழிந்து புதிய உடன்படிக்கை பூத்தபின் தசமபாகத்தை தூசுதட்டிஇன்று இயேசுவைப் போதிப்பதைவிட தசமபாகத்தைப் பற்றி அதிகமாக போதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இயேசு மதவாதிகளை தூரத்தில் நிறுத்தி வைத்தார். பாவிகளோடு நெருங்கிப் பழகினார். சீஷர்களை உருவாக்கினார். நாமோபாவிகளை தூரத்தில் நிறுத்தி வைத்து விட்டோம், பரிசேயர்களிடம் பிரசங்கபீடங்களைக் கொடுத்துவிட்டோம், இரட்டிப்பான நரகத்தின் மகன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
முதல் நூற்றாண்டில் சபை உலகத்துக்குள் போய் உலகைப் பாதித்தது. இன்று உலகம் சபைக்குள் வந்து சபையை பாதிக்கிறது.
இயேசு தேவசித்தம் செய்வதே போஜனம் என்றார் (யோவா 4:34). நாமோ போஜனத்துக்காகத்தான் தேவனையே தேடுகிறோம்.(யோவா 6:27).
ஆதிஅப்போஸ்தலர் பொருளாதாரத்தில் தரித்திரர், ஆவிக்குரிய ஐசுவரியவான்கள் நாமோ பொருளாதாரத்தில் ஐசுவரியவான்கள் ஆவிக்குரிய தரித்திரர்.
இயேசு சரீர சுகத்தைப் பற்றி ஒரு போதனையும் செய்யவில்லை ஆனால் எண்ணிறைந்த சுகமளிக்கும் அற்புதங்களைச் செய்தார். நாமோ வாய்கிழிய அற்புத சுகத்தைப் பற்றி பிரசங்கிக்கிறோம், காரியத்திலோ பூஜ்ஜியம்!
ஆவியானவர் சந்நிதியில் அப்போஸ்தலர் பிரித்தெடுக்கப்பட்டது அன்று (அப் 13:2), அரசியல்வாதிகள் முன்னிலையில் திருமண்டலத் தேர்தல்கள் நடக்கின்றன இன்று.
தேவன் யுத்ததில் சிறந்த குதிரையாக நம்மை நிறுத்த விரும்புகிறார் (சக 10:3). நாமோ தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகமாய் மாறிப்போனோம்.(எரே 2:23). அவர் நம்மை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினார்; நாமோ அவருக்கு காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனோம் (எரே 2:21)
அன்றைய பழைய ஏற்பாட்டுக்காரர்கள் புதிய ஏற்பாட்டு வாழ்க்கைக்காக ஏங்கினார்கள் (பேதுரு 1:10-12). இன்றைய புதிய ஏற்பாட்டுக்காரர்கள் கட்டடங்களை மகிமைப்படுத்துவது, பண்டிகைகளை ஆசரிப்பது, தசமபாகம், பொருளாதார ஆசீர்வாதம், பிரமாணத்துவம் என்று பழைய ஏற்பாட்டுக்கே திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இயேசு பாவிகளோடு வாழ்ந்தாலும் பாவத்தை வெறுத்தார், நாமோ பாவிகளை வெறுத்தாலும் பாவத்தோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அன்று சபையை சம்பாதிக்க பணத்தைப் பயன்படுத்தினார்கள். இன்று பணத்தை சம்பாதிக்க சபையைப் பயன்படுத்துகிறார்கள்.
எல்லாம் தலைகீழ், எதிலும் முரட்டாட்டம்…இதுவே நம் இன்றைய கிறிஸ்தவம். ”முரட்டாட்டம் பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது (1 சாமு 15:23).” தேவன் வெறுப்பவறையெல்லாம் விரும்புகிறோம். தேவன் விரும்புபவற்றையெல்லாம் அசட்டை செய்கிறோம். ஒன்றைத் தவிர…
ஒன்றே ஒன்றைத் தவிர…
தேவன் நாம் பரலோகத்துக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார். நமக்கும் அதே ஆசை நிறைய இருக்கிறது. ஆம், எப்படியேனும் கடைசியில் பரலோகம் மட்டும் சேர்ந்துவிட வேண்டும் என்று வாஞ்சிக்கிறோம். சேர்ந்துவிடுவோம் என்றும் நம்புகிறோம்.
பிரியமானவர்களே! ஒரு கதை சொல்லுகிறேன் கேளுங்கள். இதுவும் நம்முடைய சொந்தக் கதை சோகக் கதை போலவேதானிருக்கும் (1 கொரி 10:11)
எகிப்து எனும் இரும்புக் காளவாயிலிருந்து ஒரு கூட்ட ஜனத்தை கிருபையாக இரட்சித்து தேவன் அழைத்து வந்தார். அவர்களோ வழியில் முரட்டாட்டம் பண்ணினார்கள், வனாந்திரத்திலேயே அழிக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவனும் வாக்குப்பண்ணப்பட்ட கானானுக்குள் பிரவேசிக்கவில்லை. கீழ்படிந்த யோசுவாவும் காலேபும் மாத்திரம் பிரவேசித்தார்கள். அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது (ரோமர் 11:11) சுபாவக்கிளைகள் ஒலிவமரத்திலிருந்து முறித்துப் போடப்பட்டது. காட்டு ஒலிவமரத்தின் கிளைகளாகிய நம்மை எடுத்து கிருபையாக ஒலிவமரத்தோடு ஒட்டவைத்தார். ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது, ஆனால் தேவன் மாறாதவர்.
”சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு.
ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்.(ரோமர் 11:21,22).”
ஆம், தேவனோடு நாம் விளையாட முடியாது. அவரது நீடிய இரக்கத்தை நாம் ஏமாளித்தனம் என்று எண்ணக் கூடாது. நமக்கு நமது அனலுமற்ற குளிருமற்ற மதரீதியான கிறிஸ்தவத்தை விட்டு வெளியே வர மனதில்லையானால் தேவன் நம்மைக் கடந்து செல்ல தயங்க மாட்டார்.
ஜலப் பிரளயத்தில் முழு உலகமும் அழிக்கப்பட்டாலும் நோவா உட்பட 8 பேரை மீதம் வைத்திருந்தார். வனாந்திரத்தில் கலகம் பண்ணின இஸ்ரவேலர் முழுவதும் அழிக்கப்பட்டார்கள், அவர்கள் சந்ததியாரும் , யோசுவாவும் காலேபும் மீந்திருந்தார்கள். யெசபேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் அனைவரையும் அழித்துப் போட்டாலும் பாகாலின் பாதங்களை முத்தமிடாத 7000 பேரை மீதம் வைத்திருந்தார். ஹிட்லர் போன்ற கொடூரர்களால் யூதர்கள் உலகம் முழுவதிலும் வேட்டையாடப்பட்டாலும் 1948-இல் வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தை உருவாக்குவதற்கென்று ஒரு கூட்ட யூதர்களை தேவன் மீதம் வைத்திருந்தார்.
அதுபோலவே இன்று உலகம் முழுவதிலும் கிறிஸ்தவம் வியாபார மயமாக்கப்பட்டாலும், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தேவபக்தியின் வேஷம் தரித்து அதின் பலனை மறுதலிப்பவர்களாக இருந்தாலும். சபைகள் எங்கிலும் வஞ்சகம் தலைவிரித்து ஆடினாலும். எல்லாம் சாத்தானின் கைக்குள் அடங்கிவிட்டதுபோல தோன்றினாலும்…பரவாயில்லை. தாம் எச்சரித்தபடியே இயேசு அவர்களை வாந்திபண்ணிப் போடத்தான் போகிறார் (வெளி 3:16)
ஆனாலும், தேவன் ஒரு சிறு கூட்ட ஜனத்தை சபைப் பாகுபாடின்றி ஆயத்தப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். இவர்கள் தேவனை எல்லாவற்றிற்கும் மேலாக நேசிப்பவர்கள். தன்னை நேசிப்பது போல தன் சகோதரனை நேசிப்பவர்கள். கிறிஸ்துவுக்காக தன்னை விற்றுப் போட்டவர்கள். பாபிலோனின் பணக்கறை படியாதவர்கள். கும்பலோடு போகாமல் கும்பலுக்கு எதிர்பட்டுப் போகிறவர்கள். மதரீதியான கிறிஸ்தவமே இவர்களது முதல் எதிரி. வேத வசனத்தைத் தவிர வேறு எதனுடனும் யாருடனும் ஒத்துப் போகமாட்டார்கள். உலகத்தோடும் மாம்சத்தோடும் பிசாசோடும் வெறிகொண்டு மோதுபவர்கள். இவர்களைக் கொண்டுதான் இந்தக் கடைசி காலத்தில் ஒரு மாற்றத்தை தேவன் ஏற்படுத்தப் போகிறார்,
இதோ ஒரு ட்ரில்லியன் டாலர் கேள்வி….
அந்தக் கூட்டத்தில் நீங்களும் நானும் இருக்கிறோமா??????
vijay wrote
அன்று சபையை சம்பாதிக்க பணத்தைப் பயன்படுத்தினார்கள். இன்று பணத்தை சம்பாதிக்க சபையைப் பயன்படுத்துகிறார்கள்
2 corinthians
14. இதோ, உங்களிடத்திற்கு மூன்றாந்தரம் வர ஆயத்தமாயிருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை; நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்: பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.
மேலே உள்ள வசனத்தை பார்க்கும் போது பிள்ளைகளுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்கும் போதகர்கள்(பெற்றோர்கள்) எங்கே என்று கேள்வி எழுகிறது.
இயேசு சாத்தானுக்கு ராஜசிங்கமாகவும், மனிதர்கள் தனது தாடியை இழுத்து கன்னத்தில் அறைந்தபோது ஆட்டுக்குட்டியாகவும் அமைதிகாத்தார். நாமோ மனிதர்களிடம் சிங்கமாக சீறுகிறோம், சாத்தானிடமோ அவன் இழுக்கும் இழுவைக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் சாதுவான ஆட்டுக்குட்டியாக இருக்கிறோம்.
unmai thaan pirathar.
அன்புள்ள சகோ.விஜய்,
மிகவும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். தாங்கள் சிங்கப்பூரில் என்ன செய்கிறீர்கள். தேவன் தாமே தாங்களை மேலும் அதிகமாக பயன் படுத்துவாராக.
மிகவும் அருமையான கட்டுரை. இன்றைய கிறிஸ்த்தவ உலகின் வேஷங்களை வெளிச்சம்போட்டு காட்டும் நல்ல கருத்துக்கள். தேவையானவைகளை விட்டுவிட்டு தேவையற்றதை தெரிந்துகொண்டுள்ள தெளிவற்ற கூட்டங்களுக்கு தெளிவை உண்டாக்கும் செய்தி.
கேட்கிறதுக்கு காதுள்ளவனுக்கு நிச்சயம் கேட்கும்!
அன்பு சகோதரர் சுந்தர் அவர்களே! தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி!!
That was an excellent article!
This is very true:
[[இன்று இயேசுவைப் போதிப்பதைவிட தசமபாகத்தைப் பற்றி அதிகமாக போதித்துக் கொண்டிருக்கிறார்கள்.]]
Dear Vijay,
Nice article. Thanks.
Did you ever gained a soul for Jesus Christ?….. There are two easy things in the world, 1. Easy to raise questions and ask. 2. Easy to comment about other co-workers. ALL YOU WRITING IS BECAUSE OF YOUR LOVE TOWARDS JESUS????????? IF SO then First please bring some souls into the kingdom of God… Don’t waste your life time and your energy on this useless things. Master will take care of his servants not other servant because he is the one going to ask the account and going to pay…. more over he is not a human boss……… God bless you.
அன்பு சகோதரர் அவர்களுக்கு, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. தங்கள் ஆத்தும பாரத்துக்காகவும் கர்த்தரைத் துதிக்கிறேன்.
பிரதான கட்டளை என்பது வெறும் சுவிசேஷம் அறிவிப்பது மாத்திரமல்ல. சீஷர்களை உருவாக்குவதாகும். அது ஒருவருக்கு ஞானஸ்நானம் கொடுப்பதோடு முடிந்து விடுவதல்ல. கிறிஸ்து உங்களுக்குள் உருவாகும் வரை கர்ப்பவேதனைப் படுகிறேன் என்று பவுல் சொன்னாரல்லவா?
பிள்ளையைப் பெற்று ரோட்டில் போட்டுவிட்டுப் போகும் பணியைத்தான் இன்று அனேகர் செய்துவருகிறார்கள். அவர்களுக்கு தேவையெல்லாம் ஆத்துமாக்களின் கணக்கு அவ்வளவே! வெறும் ஞானஸ்நானத்தோடு ஊழியம் நிறைவு பெறுவதென்றால் சபையில் தீர்க்கதரிசிகளையும் போதகர்களையும் ஏன் கர்த்தர் நியமித்தார்?
தங்களிடம் பணிவாக ஒரு பதில் கேள்வி! ஆத்தும ஆதாயம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? நரகத்துக்கு மனிதனைத் தப்புவிப்பதையா அல்லது கிறிஸ்துவுக்கு கறைதிரையற்ற ஒரு மணவாட்டியை ஆயத்தம் செய்வதையா? தங்கள் பதில் பின்னது என்றால் தங்கள் அப்படி எத்தனை பேரை ஆயத்தம் செய்துள்ளீர்கள்? தங்கள் பதில் முன்னது என்றால் தாங்கள் பிரதான கட்டளையை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று பொருள். ஏனென்றால் பிரதான கட்டளை என்பது ”சீஷர்களை” உருவாக்குவது.
”நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;” (மத்28: 19,20).
சீஷர்களை உருவாக்குவதானால் சீஷத்துவத்துக்க்கு எதிரான பாரம்பரியங்கள் தோலுரிக்கப்பட வேண்டும். யார் சீஷன் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்துவருகிறோம்.
What you mentioned is correct, discipleship and taking them into the spiritual maturity is a key work of a servant. We have to do it and no doubt on that and we have to do it for the souls which we gained for Jesus and for the every one who we can reach, and to becoming a matured christian is a life time process. But what Paul mentioned about is a different than the way you linked there, When one accepted Jesus and took baptism do you think Jesus is not yet born in him? Actually you should quoted Collosians 1:28… And do you think that Jesus is not concerned about those who accepting him as Lord and savior? And there is no role for holy spirit to lead a person into spiritual maturity? . One may share gospel other may lead him into baptism and many others may stand with one to lead him into christian maturity…. so its a joined work (Read 1 Cor 3:6-15 its the clear passage about work and the pay of the master for each ones work). And if your goal is about spiritual maturity why cant you write something which really gives spiritual maturity instead of these gossips. Do you think that after you write all these gossips any one will get a spiritual growth? But for sure they will learn one thing..to write gossips,share gossips and to search for gossips. Is this what the views of Jesus and his apostles about making discipleship and leading into spiritual maturity? I gone through the replies of other brothers.. the sad thing is that no one mentioned it was useful or it bought a change in life.. because all these are reading by people who are addicted for gossips which we can easily identified from their replies. they all just glorified your writings and where is the glory for Jesus here???
அன்பு சகோதரர் அவர்களுக்கு! தங்கள் பதிலுக்கு நன்றி, இதோ தங்கள் கேள்விகளுக்கு அடியேனுடைய பதில்கள்:
//What you mentioned is correct, discipleship and taking them into the spiritual maturity is a key work of a servant. We have to do it and no doubt on that and we have to do it for the souls which we gained for Jesus and for the every one who we can reach, and to becoming a matured christian is a life time process.//
தங்களது பொதுவான இந்தக் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. கர்த்தர் தங்களுக்குத் தந்த ஆவிக்குரிய ஞானத்துக்காக அவரைத் துதிக்கிறேன்.
//But what Paul mentioned about is a different than the way you linked there, When one accepted Jesus and took baptism do you think Jesus is not yet born in him? Actually you should quoted Collosians 1:28 And do you think that Jesus is not concerned about those who accepting him as Lord and savior? And there is no role for holy spirit to lead a person into spiritual maturity? . //
தங்கள் கருத்தானது ஒருவன் இரட்சிக்கப்பட்டுவிட்டால் கர்த்தரும் அவரது ஆவியானவரும் பார்த்துக்கொள்வார்கள் என்பது போல உள்ளது. ஆவியானவர் சபைப் பொறுப்பிலுள்ள ஐவகை ஊழியர்கள் மூலம் கிரியை செய்கிறார். மேய்ப்பன் எவ்வழியோ மந்தையும் அவ்வழியே! மேய்ப்பர்கள் ஆவிக்குரியவர்களாக இருந்தால் மந்தையும் ஆவிக்குரியதாக இருக்கும். 16 ஆம் நூற்றாண்டுக்கு முந்தய இருண்ட காலத்துக்கு யார் காரணம்? சபைத் தலைவர்களல்லவா? தங்களுடைய கேள்வியான And do you think that Jesus is not concerned about those who accepting him as Lord and savior? And there is no role for holy spirit to lead a person into spiritual maturity? என்பதை மார்ட்டின் லூத்தரிடம் கேட்கப்பட்டிருந்து அவரும் அதற்கு ”ஆமாம்சாமி” போட்டு அமைதியாக இருந்திருப்பாரானால் நமக்கு விடியல் உண்டாகியிருந்திருக்குமா? என்னை லூத்தரோடு ஒப்பிடவில்லை ஆனால் அவரைப்போல சத்தியத்துக்காக நிற்க நீங்களும் நானும் அழைக்கப்படவர்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
//why cant you write something which really gives spiritual maturity instead of these gossips//
எதை கிசுகிசு என்று சொல்லுகிறீர்கள்? அந்த பாஸ்டர் இந்தப் பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கிறார், அந்த விசுவாசி சினிமாவுக்குப் போகிறார் என்று அவரது முதுகுக்குப் பின்னால் பேசுவது கிசுகிசு. ஆனால் இங்கு கூறப்பட்ட எல்லாமே நமது சொந்த நிலையை ஆராய்ந்து பார்த்து புலம்புவதும். சக விசுவாசிகளை எச்சரிப்பதும் எப்படி கிசுகிசு ஆகமுடியும்?
ஜனங்கள் ஆவிக்குரியவை என்று நினைத்து செய்யும் பல செயல்கள் மாம்ச பிரகாரமானவை. இதை பழைய ஏற்பாட்டு தீர்க்கர்களும், இயேசுவும் அபோஸ்தலரும் கண்டித்து இருக்கின்றனர். அவையெல்லாம் கிசுகிசுக்களா?
ஒரு தவறான கட்டிடத்தை இடித்து அந்த அஸ்திபாரத்தைப் பெயர்த்தெடுத்துத்தான் சரியான கட்டிடத்தை அதே இடத்தில் கட்ட முடியும். இது இடித்துப்போட அல்ல ஊன்றக்கட்டுவதற்கே (2கொரி 13:10)
//I gone through the replies of other brothers.. the sad thing is that no one mentioned it was useful or it bought a change in life.. because all these are reading by people who are addicted for gossips which we can easily identified from their replies//
இங்கு கருத்துக்கூறியவர்கள் யாரையுமே தங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர்களையெல்லாம் கிசுகிசுவுக்கு அடிமைகள் என்று எப்படிக் கூறலாம்? ஒரு ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ளவர்க்கு இது அழகல்ல.
அன்பு சகோதரர் சோஜன் அவர்களுக்கு,
மத்தேயு 23ஆம் அதிகாரம் முழுவதையும் வாசித்துப்பாருங்கள். அதில் இயேசு வேதபாரகரையும் பரிசேயரையும் பார்த்து உங்களுக்கு ஐயோ, என்று அவர்கள் வேதத்தை சரியாக போதியாமலும், அவர்களும் தன்நலத்திற்காக மக்களைத் திசை திருப்பியிருந்ததையும், அதனால் சீசர்களை கவனமாக இருக்கும்படியாகவும் சொன்னார். இதைத்தான் விஜய்யும் செய்கிறார். இயேசு பாவிகளை இரட்சிக்க வந்தவர், வேதபாரகரையும் பரிசேயரையும் ஏன் ஐயோ என்று சொல்லவேண்டும். மக்களை வேதத்தின்படி தேவனுக்கு நேராக வழிநடத்துபவர்களுக்கு, மக்கள் வேதத்திற்குப் புறம்பான விசுவாசத்தில் நடத்தப்பட்டால், வேதபாரகரையும் பரிசேயரையும் குறித்த இயேசுவின் மனநிலைதான் உன்மையாய் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கும் இருக்கும்.
Bro. Vijay, a very good eye opener for those who are willing to accept mistakes..and bringing out the wolves in sheep clothing, thank you brother in Christ for your effort and sharing it with us………and for bro. Sojan: i really feel sorry for him and i think he is on the other side of the article where you have mentioned about.
Just because a person is baptised he is not a believer…… and that is what many of the groups are doing and were doing in the past.. MASS CONVERSION.. and then leaving the sheep exposed to the wolves……. but a spiritual life is to live every day walking closer with our Lord…. as i went thru his reply I think he doesnt want bro. vijay writhing these things and bringing others to light…let us pray for these brothers………….
super short