கூடாரத்துக்குள் வந்து அழுங்கள்

கூடாரத்துக்குள் வந்து அழுங்கள்

தம்முடைய பிள்ளையாக எதையும் உரிமையாக விசுவாசித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நம்மைக் குறித்த தேவனுடைய சித்தமாக இருக்கிறது. கர்த்தரிடத்திலிருந்து ஏதேனும் ஒரு நன்மையைப் பெற்றுக்கொள்வதற்காக கண்ணீர்விட்டு, கதறி அழுது, உருண்டு புரண்டு, உபவாசம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை. ஆனால் அதுதான் ஒரே வழி என்பது போல ஒருகாலத்தில் சபைகளில் பிரசங்கங்கள்...
அது ஒரு அழகிய நிலாக்காலம்…

அது ஒரு அழகிய நிலாக்காலம்…

கடந்த காலத்தை நினைத்து நாஸ்டால்ஜியாவில் மூழ்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? சீருடையுடன் சுற்றித் திரிந்த இனிமையான பள்ளி நாட்கள், தென்னை மட்டை வைத்து கிரிக்கெட் விளையாடிய அனுபவங்கள், 90-களின் தின்பண்டங்கள், ஆல்-இந்திய ரேடியோ, துர்தர்ஷன், ரூபவாஹினி, முதல் காதல், பழைய நண்பர்கள், கல்லூரி சேட்டைகள் அத்தனையையும் நினைத்தால் மனதுக்குள் ஒருவித மழைச்சாரல் அடிப்பதை உணராதவர்கள் யாரும் இருக்க...
சர்ச்சுக்குள்ள டான்ஸ் ஆடுறீங்களா? – 1

சர்ச்சுக்குள்ள டான்ஸ் ஆடுறீங்களா? – 1

நடனம் என்பது மனிதனின் மகிழ்ச்சியான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான வடிகால். கோபம் ஏற்பட்டால் தாக்க முற்படுவது எப்படியோ, பயம் ஏற்பட்டால் ஒளிந்து கொள்வது எப்படியோ, துக்கம் ஏற்பட்டால் அழுது தீர்ப்பது எப்படியோ, அப்படியே மகிழ்ச்சியின் மிகுதியை நடனமாடித் தீர்ப்பது மனித இனத்தில் இயல்பு. நடனம் ஆதியிலிருந்தே மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. தேவசமுகத்தில் நடனமாடுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று...
நீங்கள் பார்ப்பது வீடியோ கேம் அல்ல

நீங்கள் பார்ப்பது வீடியோ கேம் அல்ல

நீங்கள் திமுகவா, அதிமுகவா என்று கேட்டால், “எங்கள் அரசியல் இந்த பூமிக்குரியது அல்ல” என்று சொல்லும் பலர் இஸ்ரேலா ஈரானா என்று கேட்டால் “இஸ்ரேல்” என்கிறார்கள். அதுமட்டும் ஆவிக்குரிய அரசியல் போல! புரிந்து கொள்ளுங்கள் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே இருக்கும் பகையானது ஆதியில் இருந்து ஆரம்பித்தது என்பதற்காக அது ஆவிக்குரியதாகிவிடாது. சாலோமோன் தேவாலயத்தை மையமாக...
அப்போஸ்தலர்களிடம் மோதிய பொய்

அப்போஸ்தலர்களிடம் மோதிய பொய்

இந்த முப்பரிமாண உலகம் தீமையானது. அதை உன்னதமான நல்ல கடவுள் படைக்கவில்லை. நல்ல கடவுள் தீமையான உலகை எப்படி படைத்திருக்க முடியும்? உன்னதமான கடவுள் ஏயோன்கள்(Aones) என்னும் இடைநிலைக் கடவுள்களைத்தான் படைத்தார். அந்த ஏயோன்கள் ப்ளெரொமா(Pleroma) என்ற கடவுளின் ஆவிக்குரிய மண்டலத்தில் வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட ஏயோன்களில் ஒன்றுதான் அறிவுக்கடவுளாக சோஃபியா. அறிவுக்கடவுளாக இருந்தாலும் சோஃபியா ஆர்வக்கோளாறில்...
வசனம் பிறந்த கதை

வசனம் பிறந்த கதை

உங்களை ஒருவர் திடீரென்று அழைத்து “தேவனுடைய ராஜ்ஜியம் எப்படிப்பட்டதென்று சொல்லுங்கள்” என்று வினவினால் நீங்கள் உடனடியாக அவருக்குச் சொல்லும் பதில் என்னவாக இருக்கும்? தொடர்ந்து வாசிப்பதை சற்று நிறுத்திவிட்டு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் என்பதை சில வினாடிகள் யோசித்துப் பாருங்களேன்! பரலோகராஜ்ஜியம் பற்றி பைபிளில் படித்த வசனங்களை நினைவுக்குக் கொண்டுவந்து ஏதாவது பதில் சொல்ல...