பால் வாஷர் – உங்களில் சிலருக்குக் கேள்விப்பட்ட பேராக இருக்கலாம். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஹார்ட்க்ரை மிஷனரி ஸ்தாபனத்தின் (HeartCry Missionary Society) நிறுவனர், போதகர். பெரு நாட்டில் பலவருடங்கள் மிஷனரியாகப் பணி செய்து அங்கே பல சபைகூடுகைகளைத் துவக்குவித்த வல்லமையான போதகர். இவரது பிரசங்கங்கள் அனேகரைத் தட்டி எழுப்பியதுமல்லாமல், எந்தவித சமரசமும் இல்லாமல் இருப்பதால் உண்மையான ஆத்துமபாரம் கொண்ட அனேகரால் இவரது போதனைகள் யூடியூப் மூலம் காணப்பெறுகிறது. வீடியோக்கள் எளிமையான ஆங்கிலத்தில்தான் உள்ளது என்பதால் அனைவருமே கண்டு கேட்டுப் பயன்பெறலாம்.
இன்றைய சபைகளைக் குறித்த பெரும்பாரத்துடன் சகோ. பால் வாஷர் சில வருடங்களுக்குமுன் வழங்கிய செய்தி ஒன்று – சபைகளை ஊன்றக்கட்டும் 10 குற்றச்சாட்டுகள். வெறுமனே காழ்ப்புணர்சியுடனும் மற்ற சபைகளின் மேல் கொண்ட வெறுப்பினால் எறியப்பட்ட கற்களாக அல்லாமல், உண்மையான பாரத்தோடும் அன்போடும் ஆலோசனையாகக் கொடுக்கப்பட்டது. இந்த செய்தி சகோ.பென்னி அவர்களின் முயற்சியால் மின்புத்தகமாக உருவாக்கம் பெற்றுள்ளது.
நம் சபைகளுக்குக்கும், குறிப்பாக சபைப் போதகர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது உங்கள் பதிவிறக்கதிற்காக பி.டி.எஃப் கோப்பாக (3.6MB) இங்கே பெற்றுக் கொள்ளலாம்:
Thank you for the e-book, brother.
You are most welcome brother!
Thanks Anna