ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இன்ப நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்! தங்களை நமது இணையதளத்துக்கு இன்முகத்துடன் வரவேற்கிறோம். சபை பக்திவிருத்தி அடையவேண்டும், தேவஜனங்கள் தேவகிருபையில் பெலப்பட்டு வெற்றியுள்ள ஆவிக்குரிய மற்றும் இம்மைக்குரிய வாழ்வை வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில், கர்த்தருடைய பெரிதான சித்தத்தின்படி “சேனல் ஆஃப் பிளஸ்ஸிங்” என்ற நமது ஊழியம் செயல்பட்டுவருகிறது.
புத்தகங்கள், இணையதளம், மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக தேவஜனங்களை சந்தித்து சத்தியத்தின் மூலம் அவர்களது ஆவிக்குரிய வாழ்வை ஊன்றக் கட்டுவது. கருத்தரங்குகள், கன்வென்ஷன்கள், வாலிபர் முகாம்கள், குடும்ப ஆலோசனைக் கூட்டங்கள் வழியாக இறைவார்த்தையை பகிர்வது, புதிய பாடல்களை உருவாக்கி அவற்றை சபைக்கு அர்ப்பணிப்பது ஆகியன தற்பொழுது நாம் செய்துவரும் ஊழியங்கள்.
நமது தாலந்துகள் கர்த்தருடைய இராஜ்ஜியத்தின் கட்டுமானப் பணிக்கு பயன்பட வேண்டும். தகுதியற்ற நம்மை கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாக மாற்றி, நம்மை அதன் மூலம் தகுதிப்படுத்தி அவருக்கு ஊழியம் செய்யும் வாய்ப்பை அளித்திருப்பது கர்த்தருடைய மகத்தான கிருபை. நமது ஊழியத்தை உங்கள் சபைக்கும், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
எங்களைத் தொடர்பு கொள்ள விரும்பினால் vijaykumar.jeyaraj@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.
தற்சமயம் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் வசித்துவருகிறோம், எனது மனைவியின் பெயர் ஹெலன். கர்த்தர் எங்களுக்கு சாமுவேல், ஏஞ்சலின் என்ற இரு குழந்தைகளைத் தந்து ஆசீர்வதித்திருக்கிறார். எங்கள் குடும்பத்துக்காகவும், ஊழியங்களுக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சத்தியத்தை அறியும் அறிவில் நடத்தி அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக!