(இது ”எழுப்புதல் தொடரின்” இரண்டாம் அத்தியாயம். நீங்கள் கடந்த அத்தியாயத்தைப் படிக்காவிடில் அதைப் படித்து விட்டு பின்னர் இந்த அத்தியாயத்தைத் தொடரும்படி அன்புடன் வேண்டுகிறேன்)
முந்தய அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்
கடந்த அத்தியாயத்தில் எழுப்புதல் என்றால் என்ன? என்பது பற்றியும் சபை வரலாற்றில் நடந்த சில குறிப்பிட்ட எழுப்புதல்கள் பற்றியும் ஆராய்ந்தோம். இந்த அத்தியாயத்தில் போலி எழுப்புதல்கள் பற்றி ஆராய்வோம்.
கடைசி நாட்களுக்கும் இயேசுவின் வருகைக்கும் அடையாளம் என்ன? என்று சீடர்கள் இயேசுவை நோக்கிக் கேட்ட போது பஞ்சம், கொள்ளைநோய்கள், போர்கள், இவை எல்லாவற்றையும் குறிப்பிடும் முன்பு அவர் பிரதானமாகக் குறிப்பிட்ட அடையாளம் “வஞ்சகம்” என்பதாகும் (மத்தேயு 24:5,5). ஆம், அந்த இறைவாக்கின் நிறைவேறுதலையே இன்று நாம் எங்கும் காண்கிறோம். பிசாசானவன் ஆண்டவர் உண்டாக்கின ஒவ்வொன்றுக்கும் மாற்றாக ஒரு போலியை உண்டாக்கி அதற்கு ஒரு மினுமினுப்பான வெளிப்பூச்சைப் பூசி விசுவாசிகளுக்குக் கொடுத்து அவர்களை ஏமாற்றும் பணியை திறம்பட செய்து வருகிறான்.
இன்று சுவிசேஷ மேடைகளில் நம் பாவத்தை மன்னித்து இந்த பொல்லாத பிரபஞ்சத்தினின்று நம்மை விடுதலையாக்குபவராக, பாவத்தின் மேல் ஜெயங்கொள்ளச் செய்கிறவராக இயேசு காட்டப்படுவதில்லை, மாறாக வியாதியை சுகமாக்குபவராகவும், வேலை தருபவராகவும், வரன் பார்த்துக் கொடுக்கும் எலியேசராகவும், கார், பங்களா கொடுக்கும் கொடைவள்ளலுமாகவே காட்டப் படுகிறார். பாவம்! ஆவியானவருடைய நிலையோ இன்னும் பரிதாபம், நமது உள்ளான மனிதனை கிறிஸ்துவுக்காக பலப்படுத்தி நம்மை சாட்சிகளாக மிளிரச் செய்யும் ஆவியானவர் வெறும் கிச்சுக் கிச்சு மூட்ட மாத்திரமே என்று விசுவாசிகள் நம்ப வைக்கப் பட்டுவிட்டனர். விசுவாசிகளை ஊதியும் கைவைத்தும் மல்லாக்கச் சாய்க்கும் ஊழியங்கள் கன ஜோராக நடைபெற்று வருகின்றன. ஆவியானவர் நம்மைப் பலப்படுத்தி உலகத்தோடும், மாம்சத்தோடும், பிசாசோடும் மல்லுக்கு நிற்க வைப்பவர், மல்லாக்கச் சாய்ப்பவர் அல்ல.
நானும்கூட இப்படிப்பட்ட காரியங்களை நம்பி வந்தவன் தான். ஆனால் கர்த்தர் கிருபையால் என் கண்கள் திறக்கப் பட்டது. இயேசுவும் அப்போஸ்தலரும் செய்யாத அல்லது போதிக்காத எதையும் நம்புவதில்லை என்ற தீர்மானமான முடிவுக்கு வந்து விட்டேன். வேதம் கையில் கிடைக்காத நாட்களில் ஜனங்கள் வஞ்சிக்கப் பட்டார்கள் சரி, ஆனால் சொந்த மொழி வேதாகமத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஏமாறுவோமானால் அது யார் குற்றம்?
இன்று சாத்தான் உருவாக்கிய வேறொரு இயேசுவும், வேறொரு ஆவியானவரும் (II கொரிந்தியர் 11:4) சபையை சீரழிப்பது போலவெ வேறொரு எழுப்புதலும் சபைகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த எழுப்புதல் வேறொரு ஆவியானவரால் தரப்படுவது. மாம்சத்தில் பிறப்பது மாம்சமாயிருக்கும் (யோவான் 3:6)என்ற வசனம் இந்த போலி எழுப்புதலுக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஏனெனில் இது முழுக்க முழுக்க உணர்ச்சிப் பரவசம் சம்பந்தப்பட்டது. ஆவியானவரின் ஒத்தாசையையும் சுவிசேஷத்தின் வல்லமையையும் சார்ந்து நிற்பது அல்ல உணர்ச்சியைத் தூண்டும் இசையையும் நயவசனிப்பான வார்த்தைகளையும் சார்ந்து நிற்பது. ஜனங்கள் அழுவதும் ஆல்டர் காலுக்கு (Altar call) முன்வருவதும் போன்ற இதன் கனிகள் நிஜ எழுப்புதலின் கனிகள் போலவே தோற்றமளிக்கக் கூடியதாகையால் யாரும் எளிதாக ஏமாந்து விடக்கூடும்.
ஆவியானவர் தரும் உண்மை எழுப்புதலின் கனிகள் பலர் மாபெரும் மிஷனரிகளாகவும், சபைத்தலைவர்களாகவும் ஏன் இரத்த சாட்சிகளாகவும் கூட பரிமளித்திருக்கிறார்கள். சபை வரலாற்றில் நிகழ்ந்த ஒவ்வொரு எழுப்புதலில் ஏற்பட்ட விளைவுகளையும் இனிவரும் தொடர்களின் ஒவ்வொன்றாக நான் சுட்டிக் காட்டிக் கொண்டு வரும்போது அதை விளங்கிக் கொள்ளுவீர்கள். ஆனால் இந்த போலி எழுப்புதலின் கனிகளிடம் ஆழமான அர்ப்பணிப்பை எதிர்பார்க்க முடியாது. இவர்களில் பலர் ஒன்று மதவாதிகளாக, கிறிஸ்தவப் பரிசேயராக வளர்வார்கள் அல்லது தாங்கள் விட்டு வந்த உலக இன்பங்களுக்கே திரும்பி விடுவார்கள். பின்னர் தாழ்மையைக் கற்றுக்கொள்ளும் சிலர் மாத்திரமே தப்பிப் பிழைத்து தேவ கிருபையால் கரையேறுகிறார்கள்.
போலி எழுப்புதல்கள் உருவாகக் காரணம் என்ன?
போலி எழுப்புதல்கள் உருவாகக் காரணம் என்ன என ஆராய்ந்து பார்த்தால் அதற்கு சாத்தானை மாத்திரம் குறை கூற முடியாது. ஊழியர்களும் விசுவாசிகளுமே முக்கியக் காரணம். அதிலும் மிக முக்கிய காரணம் “அறிவில்லாமையால் சங்காரமாகும் விசுவாசிகளே (ஓசியா 4:6)”
சகோ.சகரியாபூணன் அவர்கள் தனது ”கொடிய வஞ்சகமும் போலி எழுப்புதலும்” என்ற கட்டுரையில் போலி எழுப்புதல்களை உருவாக்கும் காரணிகளாக கீழ்கண்ட 10 சாத்தியக் கூறுகளைத் தருகிறார்.
- இன்றைய திரளான கிறிஸ்தவர்கள், புதிய ஏற்பாடு என்ன போதிக்கிறது? என்பதைக்கூட அறியாதிருக்கிறார்கள்! அது ஏனென்றால், புதிய ஏற்பாட்டை இவர்கள் கவனமாய்ப் படிக்கவில்லை. ஆகவேதான் புதிய ஏற்பாடு போதிப்பதைப் பின்பற்றுவதற்குப் பதிலாக தங்கள் தலைவர்களின் போதகங்களைக் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள்.
- தங்களின் குணாதிசயத்தை விட (இயற்கைக்கு அப்பாற்பட்ட ஜீவியம்). இவர்களுக்கு ‘அற்புதங்கள்’ (இயற்கைக்கு அப்பாற்பட்ட வரங்கள்) அதிக முக்கியமாய் மாறிவிட்டது!
- ஆவிக்குரிய சம்பத்தைக் காட்டிலும் பொருளாதார சம்பத்துகளே இவர்களுக்கு அதிக முக்கியமாய் மாறிவிட்டது!
- பரிசுத்த ஆவியின் உண்மையான அசைவாடுதலுக்கும். உணர்ச்சி வசப்படுதலுக்கும் ஆத்துமப் பரவசம் அல்லது மனோதத்துவ செயலாற்றத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை! இதற்கும் இவர்களது “புதிய ஏற்பாட்டு சத்தியத்தின் அறியாமையே” காரணம் எனலாம்.
- மனதை திடப்படுத்தி, அதன் மூலமாய் “மனோதத்துவ அடிப்படையில்” நிகழச் செய்யும் சுகத்திற்கும், இயேசுவின் நாமத்தில் நிகழும் அற்புத சுகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.
- இருதயத்தின் ஆழத்தில் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதைக் காட்டிலும் உணர்ச்சிப் பரவசமும் நூதனமான சரீர அசைவுகளுக்குரிய நிஷ்டாந்தங்களுமே அதிக முக்கியத்துவமுள்ளதாய் மாறிவிட்டது.
- தலைவர்களாய் இருப்பவர்களுக்கு, அந்தரங்கத்தில் தேவனோடு இசைந்து நடப்பதைக் காட்டிலும், ஜனங்களுக்குச் செய்திடும் ஊழியமே அதிக முக்கியமாய் மாறிவிட்டது.
- இந்தத் தலைவர்களுக்கு “தேவனுடைய அங்கீகாரத்தைக் காட்டிலும்” மனுஷர்களுடைய அங்கீகாரமே அதிக முக்கியமானதாக மாறிவிட்டது!
- இந்தத் தலைவர்களுக்கு, தங்களுடைய ஜனங்கள் கிறிஸ்துவுக்கு முழுமையாய் தங்களை அர்பணித்திருக்கிறார்களா? என்பதைக் காட்டிலும், கூட்டங்களில் பங்கு பெறும் ஜனத்தினுடைய எண்ணிக்கையே அதிக முக்கியமாக மாறி விட்டது!
- இந்தத் தலைவர்களுக்கு, ஒரு ஸ்தல சபையைக் கட்டி, அந்த சபையில் தங்களையும் ஒரு பணிவிடைக்காரராய் வைத்துக் கொள்ளுவதைக் காட்டிலும், தங்களின் சமஸ்தான தனி சாம்ராஜ்ஜியமும் தங்களது பொருளாதார உயர்வின் சிம்மாசனமுமே அதி முக்கியமாக இவர்களுக்கு மாறிவிட்டது!
(சகோதரர் எழுதிய இந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ளது. இந்தக் கட்டுரையை ஆன்லைனில் தமிழில் படிக்க இங்கே சுட்டவும்)
போலி எழுப்புதலின் இருண்ட பக்கம்
வெறும் உணர்ச்சிவசப்படுதலை மையமாகக் கொண்ட போலி எழுப்புதல்களை சாதாரண பிரச்சனையாக கருதிகொண்டு வாளாவிருந்து விட முடியாது. இதை எதிர்த்து போர் தொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஏனெனில் இது நம் தேவனுடைய துப்புரவான மணவாட்டி சபைக்குள் அந்தகார ஆதிக்கத்தைக் கொண்டு வருவதாக இருக்கிறது. கீழ்க்கண்ட வீடியோவைப் பாருங்கள் பரிசுத்த ஆவியின் எழுப்புதல் என்ற பெயரில் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் அப்படியே மற்ற மதங்களிலும் சாமியாடுதல், தீட்சை, குண்டலினி யோகம் இன்னும் பற்பல பெயர்களிலும் அதே விதமாக செய்யப் படுவதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டி இருக்கிறார்கள்.
இது எதைக் காட்டுகிறது? இத்தகைய சபைகளிடமும் ஊழியக்காரர்களிடமும் காணப்படுவது எத்தகைய ஆவி? இன்று பிற மதங்களில் செய்யப்படும் ஆழ்நிலை தியானம் Soaking Prayer என்ற பெயரில் சபைகளுக்குள் வந்துவிட்டது. இவைகளை நானும் ஒரு காலத்தில் நம்பினேன் என்றும் அவைகளை செய்தேன் என்றும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பெரேயா பட்டணத்தார் போல பிரசங்க மேடையில் சொல்லப் படுபவைகளையெல்லாம் வேதத்துக்குட்பட்டவையா? என்று ஆராய்ந்து பார்க்காமல், எல்லாவற்றையும் நம்பி ஏற்றுக்கொள்ளும் குருடனாயிருந்தேன். பிரியமானவர்களே! வஞ்சிக்கப்படாதிருங்கள். இத்தகைய கிரியைகளில் வேதம் போதிக்கும் பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியானவரா வெளிப்படுகிறார்? (II தீமோ 1:7) என்பதை ஆராய்ந்து பாருங்கள்.
இயேசு மற்றும் ஆதி அப்போஸ்தலர்களின் வாழ்க்கைக்கும் ஊழியத்துக்கும் போதனைகளுக்கும் இது எத்தனை முரண்பட்டதாகக் காணப்படுகிறது! இந்த மாதிரியான மாம்சீக அனுபவங்கள் ஆவிக்குரிய வளர்ச்சியையும் கிறிஸ்துவின் சுபாவத்தையும் நம்மில் உண்டாக்குமா? இது கிறிஸ்துவை அறியாதவர்களிடம் நம்மைக் குறித்து என்ன விதமான கருத்தை உண்டாக்கும்? கீழே மற்றுமொரு வீடியோவைத் தந்திருக்கிறேன். இப்படிப்பட்ட வீடியோக்களைத் தரக் காரணம் உங்களுக்கு நல்ல ஒரு Entertainment-ஐக் கொடுக்க அல்ல. இது பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடு அல்ல அப்பட்டமான அந்நிய அக்கினி (லேவி 10:1) என்பதை வெளிப்படுத்தவே. இத்தகைய ஊழியக்காரர்களைப் பின்பற்றும் ஊழியர்கள் பலர் இன்றும் நம் மத்தியில் இருக்கிறார்கள். அவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.
இந்த மாதிரி அனுபவங்களுக்குள் உங்களை நடத்த முயற்சிக்கும் எந்த ஊழியக்காரரைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள். அவர் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருந்தாலும், அற்புத அடையாளம் நிகழ்த்துபவராக இருந்தாலும், தேர்ந்த வேத பண்டிதராக இருந்தாலும், உங்களுடன் இனிமையாகப் பழகுபவராக இருந்தாலும் அவரைப் பின்பற்றாதிருங்கள். நமக்குள் கிறிஸ்துவின் சிந்தையை விதைக்காத, நம்மை கிறிஸ்துவைப் போல மாற்ற வழிநடத்தாத யாருமே அவர் எவ்வளவு புகழ் பெற்ற ஊழியராக கிறிஸ்தவ உலகத்தால் மதிக்கப்பட்டாலும் நமக்கு அவர் தேவை இல்லை.
இன்று ஆவியில் சிரிப்பது, ஆவியில் அழுவது, பாம்பு போல நெளிவது, தவளை போல கத்துவது, குரங்கு போல குதிப்பது, வாந்தி எடுப்பது, ஆழ்நிலைத் தியானம் இன்னும் என்னென்னெவோ எழுப்புதல் என்ற பெயரில் அணிவகுத்து வருகின்றன. அவை மேற்கத்திய நாட்டு அறிவு ஜீவிகளிடமிருந்து நூதனமான விளக்கங்களோடு வருவதால் பல சபைகளில் இத்தகைய அனுபவங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்படுகிறது. ஆதித் திருச்சபைகளிலும் கள்ளப் போதகர்கள் இருந்தார்கள், ஆனால் பவுல் போன்ற விழிப்பான சபைத்தலைவர்கள் பலர் இருந்ததால் இந்த ஓநாய்கள் சபைகளுக்குள் எளிதாக வரமுடியவில்லை.
”ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.
நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.
ஆனபடியால், நான் மூன்றுவருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.” (அப் 20: 28-31)
விழித்திருக்க வேண்டிய நமது முற்பிதாக்கள் அன்று கோட்டை விட்டதால் இன்று நாம் தேவனுடைய வீட்டிலிருந்து அந்நிய அக்கினியைத் துரத்த ஒரு மாபெரும் ஆவிக்குரிய யுத்தத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த வாய்ப்பை நம்முடைய தலைமுறையும் தவறவிட்டால் எதிர்காலம் எப்படி இருக்குமோ தெரியாது. நமது இளைய தலைமுறை இன்னும் மோசமான வஞ்சகத்தில் சிக்கிவிடாதபடி ஜாமக்காரனாய் கண்ணும் கருத்துமாய் உப்பரிகையின் மேல் காவல் நிற்பது நமது கடமை. மீண்டும் அடுத்த அத்தியாத்தில் சந்திப்போம்.
(தொடரும்)
இதன் தொடர்ச்சியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
.
Good work Bro., Pray that your writings will clear the mind and awaken the true spirit of revival among the church.
Very nice thoughts bro. Actually,now the revival is very need where those who are not living a spritual life, but they are may be the preacher or the church leader. Whoever may be, after reading this, they should change their life and must they live a holy life among not only people but also our truthful God.
Thank you for your visit and comments brother. May God Revive our Churches and Nations by His Spirit!
எச்சரிக்கை! நம்ம ஊரு சாது (?) வும் இந்த Morning Star (Rick Joyner – இரண்டாவது Video வில் இருப்பவர்) குரூப்பை சார்ந்தவர்தான்.
இதே குழுவில் இருப்பவர்தான் Todd Bentley, ப்ளோரிடாவில் மகா பெரிய (?) எழுபுதால் நடத்தி அது நடந்து கொண்டு இருந்த போதே (Todd claimed raised dead people, some witnessed that thay got golden toothe, gold powder was poured…etc) ஒரு அலுவலக பெண்ணிடம் ரொம்ப நாளாக தவறான உறவுகொண்டிருந்ததாக பிடிபட்டர். எழுப்புதல் (?) அணைந்து விட்டது. நம்ம சாமியும் அடிக்கடி பரலோகம் போறார், இயேசுவோடும் பிதாவோடும் சாதரணமாக பேசுறார். இவர் பேசுறதை வெளில சொல்லுறதுநால மக்கள் இயேசுவை நம்புராங்கலோ இல்லையோ அய்யாவை நம்புறாங்க. இப்ப எனக்கு ஒரு டவுட்டு..அது சரி நம்ம அய்யா இவ்வளோ சுளுவாய் யேசுவோடு பேசுறார், CD எல்லாம் வாங்கிட்டு வந்து T.V பொட்டியில் போடுறார். இந்த யோவான் என்னடான யேசுவோட மாரிலே சாய்ஞ்சு இருக்கிறவர் ஆனா வெளிபடுத்தினவிசேசத்தில் அவரை பார்த்த மாத்திரத்தில் செத்தவனை போல விழுந்தேன் என்கிறார். தேவனுக்கு மிகவும் பிரியமான டேனியல் என்னடான “என் நாவு மேல் வாயோடு ஒட்டி கொண்டது என்கிறார்” , நம்ம ஏசாயா “ஐயோ! அதமாணேன் என்கிறார்”. சரி சரி நம்ம அய்யா இவுங்க எல்லாரையும் விட பரிசுத்தரா இருப்பாரு போல. எங்கபோய் முட்டிக்க
(It is mentally tiring to type in Tamil!)
See, supernatural experiences can be given by God and the Devil. Don’t you think?
Ofcourse our God is King of Kings. People fell at His feet when they saw Him. True. But He can also reveal Himself as a friend, father, mother, brother, and lover(spiritually I mean) to us. It is nothing wrong to see God and talk to him as a friend. Our God loves to have a relationship with us. He delights in us. Ane we delight in Him.
Rick Joyner, imo, is either lying or deceived. That is what I felt when I read his Final Quest.
Sadhu, imo, is basically very sincere and genuine and loves and respects God very much. He is also a great prophet. I have no doubt about that.
But I think he lacks a bit of discernment.That’s all!
நாம் எல்லோருமே ராஜரீக ஆசாரியர்கள் என்று வேதம் சொல்லுகிறது. தேவபிள்ளைகள் எல்லோரும் ஆசாரியர்களும் ஒருவருக்கு ஒருவர் சகோதரருமாய் இருக்க “தேவ மனிதர்” என்ற ஒரு Special Catagory உண்டா?
// “தேவ மனிதர்” என்ற ஒரு Special Catagory உண்டா? //
இருக்கலாம் தவறல்ல, ஆனால் அது யோவான் 15:15 – ஐ பிரதிபலிக்கவேண்டும்..!
தனிப்பட்ட ஊழியர்கள் செய்யும் தவறான உபதேசங்களை நமது தளத்தில் சுட்டிக்காட்டி தாராளமாக விவாதிக்கலாம். அதே வேளையில் தனி நபர்கள் மீது ஏளனம், கிண்டல் ஆகியவற்றைத் தவிர்க்கும்படி சகோதரர்களை அன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்ளுகிறேன். அது விவாதங்களை ஆரோக்கியமான பாதையில் கொண்டு செல்லும்.
[Ofcourse our God is King of Kings. People fell at His feet when they saw Him. True. But He can also reveal Himself as a friend, father, mother, brother, and lover(spiritually I mean) to us. It is nothing wrong to see God and talk to him as a friend. Our God loves to have a relationship with us. He delights in us. Ane we delight in Him.]
I agree that God can reveal Himself in a dream or appear in a room (I 100% believe the testimonies of Muslim converts from Pakistan and Iran who gave such testimonies). But i don’t see any evidence in bible that the saints went to heaven and saw Jesus in His glory and stood on their feet! I request you to read his frequent accounts of heaven visits to notice the ‘casualness’.
While we are in this tent [that is, the body], we groan . . . [longing for] what is mortal [to] be swallowed up by life. Now He who prepared us for this very purpose is God, who gave to us the Spirit as a pledge. Therefore, being always of good courage, and knowing that while we are at home in the body we are absent from the Lord – for we walk by faith, not by sight. (2 Corinthians 5:4-7)
Moreover there is no use for Church in saying “Jesus and Father are very appreciative of Sadhu’s TV programme”. It will just help get him more money and more people would go to him than going to God.
I wish Every minister should be like John the Baptist
John 3:26 “…Rabbi, he who was with you across the Jordan, to whom you bore witness—look, he is baptizing, and all are going to him…”
John the Baptist Replied:
John 3:29 “The bride belongs to the bridegroom. The friend who attends the bridegroom waits and listens for him, and is full of joy when he hears the bridegroom’s voice. That joy is mine, and it is now complete. He must increase, but I must decrease.”
“The voice of the wilderness was silent before the life giving voice of the eternally sovereign Son of God”
John 5:25 “Truly, truly, I say to you, an hour is coming, and is now here, when the dead will hear the voice of the Son of God, and those who hear will live”
[[ But i don’t see any evidence in bible that the saints went to heaven and saw Jesus in His glory and stood on their feet!]]
நாம் எல்லோரும் ஒரு நாள் பரலோகம் செல்லத்தான் போகிறோம்! இயேசு கிறிஸ்துவை முகமுகமாக பார்க்கத்தான் போகிறோம். அங்கே நிற்கவே முடியாது என்றால் என்ன செய்வது? :-). ஆண்டவர் நமக்கேற்றபடி தம் மகிமையை குறைத்துக் கொள்வார்!
விழ ஒரு காலம் உண்டு. நிற்க ஒரு காலம் உண்டு!
தானியேல் விழுந்தார். உண்மைதான். அப்புறம் எழுந்தார் தானே! அப். யோவானும் விழுந்து, எழுந்து , எல்லாற்றையும் நன்றாக நின்று பார்த்துத்தானே எழுதினார்!
[[ I request you to read his frequent accounts of heaven visits to notice the ‘casualness’. ]]
அவர் casual ஆக பேசினாலும், அனுபவங்கள் casual ஆக இருந்திருக்காது.
[[Moreover there is no use for Church in saying “Jesus and Father are very appreciative of Sadhu’s TV programme”. It will just help get him more money and more people would go to him than going to God.]]
சில அனுபவங்களை சொல்லாமல் இருக்கலாம் என்பதுதான் என் கருத்தும்.
நம் சுய பிரயோஜனத்திற்காக, நம்மை உற்சாகப்படுத்தும் படி கொடுக்கப்படும் தரிசனங்களையோ, அனுபவங்களையோ வெளியே சொல்லத் தேவையில்லை.
Also , I do not agree with anything and everything he says. There is quite a list of things that I do not agree with him!
[நாம் எல்லோரும் ஒரு நாள் பரலோகம் செல்லத்தான் போகிறோம்! இயேசு கிறிஸ்துவை முகமுகமாக பார்க்கத்தான் போகிறோம். அங்கே நிற்கவே முடியாது என்றால் என்ன செய்வது? . ஆண்டவர் நமக்கேற்றபடி தம் மகிமையை குறைத்துக் கொள்வார்!]
ஆனால் நாம் மறுருபம் ஆக்க பட்ட சரிரத்தை உடையவர்களாய் இருப்போம். பாவமில்லாத துதர்கள்கூட அவரை நோக்கி பார்க்க திராணியின்றி முகத்தை முடிகொள்ளுவதாக ஏசாயாவில் வாசிக்கிறோம்.
[Sadhu, imo, is basically very sincere and genuine and loves and respects God very much. He is also a great prophet. I have no doubt about that. But I think he lacks a bit of discernment.That’s all!]
Hom come a great prophet who frequently visits heaven couldn’t discern seemingly simple and plain (which you & me were able to see easily) heresy that Rick Joyner is making?
[சில அனுபவங்களை சொல்லாமல் இருக்கலாம் என்பதுதான் என் கருத்தும்.]
நான் வாதிடுவதாக எண்ணவேண்டாம். தயவு செய்து சபை பக்திவிருத்தி அடையும்படி அவர் எதாவது பார்திருந்தால் அல்லது எழுதியிருந்தால் எனக்கு தெரியபடுத்தவும். அவருடைய எந்த அனுபவமும் எனனை அல்லேலுயா சொல்ல வைத்ததாகவோ அல்லது என்னுடைய பாவத்தை கண்டித்து உணர்தியதகவோ எனக்கு நினைவில்லை.
Preaching own experiance, ministry excellence will not edify others. It is always good and useful to exposite the bible then God will speak and convict people
2 Cor 4:5 “For we do not preach ourselves, but Jesus Christ as Lord, and ourselves as your servants for Jesus’ sake.”
Having said these….I am not judging the motive of many false preaching and self-exaltation. Most of the preachers adopt these false methodologies because of the simple reason “It works”. It is easy to control people when you have nice enchanting music ,voice and some basic leadership skils. If you have all three then Alas! “you are a preacher and great revivalist”. Most of the time when i happend to be in one of these meetings I felt like how it would have been when the preists of baal were cried to get an answer.How many of these revivalists studied theology and stay right on the basics (Grace alone, thru faith alone by cross alone thru Jesus alone).
Holy Spirit of God is saverign! He cannot be used like a power, He cannot be manipulated. There is no ‘mantra’ or ‘formula’ to make Him work. If at all there is a formula then it is simply exalting Jesus (as peter did in Acts 10)
Acts 10:44 “While Peter was still speaking these words, the Holy Spirit came on all who heard the message”
Holy Spirit of God will always exalt Jesus, He won’t speak anthing new (i mean it), He will take what Jesus spoke (what is in Bible) and transform our live.
John 16: 12 “I have much more to say to you, more than you can now bear. 13 But when he, the Spirit of truth, comes, he will guide you into all the truth. He will not speak on his own; he will speak only what he hears, and he will tell you what is yet to come. 14 He will glorify me because it is from me that he will receive what he will make known to you. 15 All that belongs to the Father is mine. That is why I said the Spirit will receive from me what he will make known to you.”
Here is why preaching should be Expository
“Expository means that preaching aims to exposit, or explain and apply, the meaning of the Bible. Every sermon explains and applies the Bible. The reason for this is that the Bible is God’s word, inspired, infallible, profitable—all sixty-six books of it. The preacher’s job is to minimize his own opinions and deliver the truth of God. Therefore, it is mainly Bible exposition—explanation and application.
And the preacher’s job is to do that in a way that enables us to see that the points he is making actually come from the Bible. If they come from the Bible and you can’t see that they come from the Bible, your faith will rest on man and not God.
The aim of this exposition is to help you eat and digest some biblical truth that will make your spiritual bones more like steel, and double the capacity of your spiritual lungs, and make the eyes of your heart dazzled with God’s greatness, and awaken the capability of your soul for kinds of spiritual enjoyment you didn’t even know existed. “
ஆண்டவர் கவலைகள் தீர்ப்பார். கண்ணீரைத் துடைப்பார் என்று சுவிசேஷகர்கள் நிறைய சொல்லி கேட்டாச்சு.
வசனம் பற்றி நிறைய காரியங்களையும் சபையில் பேசி கேட்டாச்சு.
இது தீர்க்கதரிசிகள் பேசும் காலம். அவர்கள் பேசுவது, இது வரை நாம் கேட்டது போல் அல்லாமல் கொஞ்சம் கடாபுடா என்று இருப்பது நமக்கு வித்தியாசமாக இருக்கிறது.
Expository teaching தேவைதான். Prophetic Teaching ம் தேவைதான்.
[[ஆனால் நாம் மறுருபம் ஆக்க பட்ட சரிரத்தை உடையவர்களாய் இருப்போம். பாவமில்லாத துதர்கள்கூட அவரை நோக்கி பார்க்க திராணியின்றி முகத்தை முடிகொள்ளுவதாக ஏசாயாவில் வாசிக்கிறோம். ]]
முகமுகமாய் காண்பேன் என்று பாட்டெல்லாம் பாடுகிறோம்??
[[நான் வாதிடுவதாக எண்ணவேண்டாம். தயவு செய்து சபை பக்திவிருத்தி அடையும்படி அவர் எதாவது பார்திருந்தால் அல்லது எழுதியிருந்தால் எனக்கு தெரியபடுத்தவும். அவருடைய எந்த அனுபவமும் எனனை அல்லேலுயா சொல்ல வைத்ததாகவோ அல்லது என்னுடைய பாவத்தை கண்டித்து உணர்தியதகவோ எனக்கு நினைவில்லை]]
Do you watch his pgm daily?
ஏன் எப்பொழுதும் ஏதாவது ஆவிக்குரிய பலனை எதிர்பார்க்கிறீர்கள்?!
You take it as some information.
உம்: சங்கீதக்காரன் தாவீதுக்கு இனிமையான குரல் கிடையாது : சகோ. தினகரன்.
சிறு பிள்ளைகள் பரலோகத்தில் தூதர்களால் போதிக்கப்படுகிறார்கள் : sadhu sundar singh or kailasha maharishi & sadhu sundar selvaraj.
பரலோகில் முதல், இரண்டாம், மூன்றாம் வானம் என்ற பிரிவுகள் உண்டு:சகோ. தினகரன்.
தேவ தூதர்களில் சிலருக்கு செட்டைகள் உண்டு; சிலருக்கு கிடையாது!:சகோ. தினகரன்.
பூ பாடும், புல் பாடும் என்றெல்லாம் சிலர் சொல்லியிருக்கிறார்கள்! போய் பார்த்தால் தான் தெரியும்!
[[Hom come a great prophet who frequently visits heaven couldn’t discern seemingly simple and plain (which you & me were able to see easily) heresy that Rick Joyner is making? ]]
I have also wondered.
But sometimes we do not always know immediately. When I first read “Purpose Driven Life” by Rick Warren, I thought it was a good book. Only later I found that, that is not true.
[ஆண்டவர் கவலைகள் தீர்ப்பார். கண்ணீரைத் துடைப்பார் என்று சுவிசேஷகர்கள் நிறைய சொல்லி கேட்டாச்சு.
வசனம் பற்றி நிறைய காரியங்களையும் சபையில் பேசி கேட்டாச்சு.
இது தீர்க்கதரிசிகள் பேசும் காலம்]
மன்னிக்கவும். தீர்க்கதரிசிகளின் காலம் முடிந்து விட்டது. இது தேவ ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும், அன்பையும், வருகையும் அறிவிக்கும் காலம்
Matt 11:13 “For all the Prophets and the Law prophesied until John”
Heb 1:1-2 “Long ago, at many times and in many ways, God spoke to our fathers by the prophets, but in these last days he has spoken to us by his Son, whom he appointed the heir of all things, through whom also he created the world”
1 John 2:27 “But the anointing that you received from him abides in you, and you have no need that anyone should teach you. But as his anointing teaches you about everything, and is true, and is no lie—just as it has taught you, abide in him”
[முகமுகமாய் காண்பேன் என்று பாட்டெல்லாம் பாடுகிறோம்??]
மறுருபம் ஆக்க பட்ட சரீரத்தில் முகமும் இருக்கும். இயேசு உயிர்தெழுந்த பின்பு மறுருபமக்கபட்ட சரீரத்தில் இருந்து மீனை புசித்து அவர் ஒரு ஆவி இல்லை என்று சிஷர்களுக்கு நிரூபித்தார்.
[உம்: சங்கீதக்காரன் தாவீதுக்கு இனிமையான குரல் கிடையாது : சகோ. தினகரன்.
சிறு பிள்ளைகள் பரலோகத்தில் தூதர்களால் போதிக்கப்படுகிறார்கள் : sadhu sundar singh or kailasha maharishi & sadhu sundar selvaraj.
தேவ தூதர்களில் சிலருக்கு செட்டைகள் உண்டு; சிலருக்கு கிடையாது!:சகோ. தினகரன்.
பூ பாடும், புல் பாடும் என்றெல்லாம் சிலர் சொல்லியிருக்கிறார்கள்!]
இது போன்ற குப்பைகளை வைத்துதான் சொல்லுகிறேன். இவற்றை சொல்லுவதான் அவர்களுடைய வயிறுதான் நிரம்பும். வேதத்தை வாசிக்காத, ரட்சிப்பின் நிச்சயம் இல்லாத ஒரு கும்பல் இதை பார்த்து மலைத்துபோயி பணம் அனுப்பும். இந்த தீர்கதரிசனங்கள்(?) நான் ஒரு Superier என்று காண்பிக்க இவர்கள் செய்யும் Gimmicks. இதை கூடவா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை? . இந்த தீர்கதரிசனங்களை (?) எந்த வகையிலும் நம்மால் உறுதிபடுத்த முடியாது ஆனால் வேதம் சொல்கிறது
1 Thessalonians 5:22 “But test everything; hold fast what is good”
Phil 3:19 “Their destiny is destruction, their god is their stomach, and their glory is in their shame. Their mind is on earthly things”
பவுல் ஏன் வியாக்கியானம் இல்லாமல் சபையில் அன்னியபாஷை பேசகூடாது என்று சொன்னார் என்றால், வியாக்கியானம் இருந்தால்தான் அதை வேதத்தோடு ஒப்பிட்டு உண்மையா அல்லது பொய்யா என்று சோதிக்க முடியும். இன்று நிறையபேர் ஏதோ சத்தமாக காப்பி அடித்து உளறி விட்டு ஆவியில் ஜெபிக்கிறேன் என்று ஏமாற்றுகிறார்கள்
[But sometimes we do not always know immediately. When I first read “Purpose Driven Life” by Rick Warren, I thought it was a good book. Only later I found that, that is not true.]
உண்மையிலே Rick Joyner ஐ Decern பண்ணுவதற்கு சாதுவுக்கு தெரியவில்லை ஆனால் அவர் ஒரு பெரிய தீர்கதரிஷி என்று நம்புகிறீர்களா? நெசமாவா??
[[மன்னிக்கவும். தீர்க்கதரிசிகளின் காலம் முடிந்து விட்டது.]]
மன்னிக்கவும்.நான் அப்படி நினைக்கவில்லை. பவுல் யார்? யோவான் யார்? அகபு யார்?2 சாட்சிகள் யார்?
அப்போஸ்தலர், தீர்க்கதரிகள்.. என்று சொல்லப்பட்டிருப்பவர்கள் யார்?
[[ [முகமுகமாய் காண்பேன் என்று பாட்டெல்லாம் பாடுகிறோம்??]
மறுருபம் ஆக்க பட்ட சரீரத்தில் முகமும் இருக்கும். இயேசு உயிர்தெழுந்த பின்பு மறுருபமக்கபட்ட சரீரத்தில் இருந்து மீனை புசித்து அவர் ஒரு ஆவி இல்லை என்று சிஷர்களுக்கு நிரூபித்தார்.]]
தாங்கள் விவாதத்தை வேறு திசையில் கொண்டு செல்கிறீர்கள்.
[[இது போன்ற குப்பைகளை வைத்துதான் சொல்லுகிறேன். இவற்றை சொல்லுவதான் அவர்களுடைய வயிறுதான் நிரம்பும்.]]
சாது சுந்தர் சிங்ம் இந்த category தானா? சகோ. தினகரன் ஒரு நாளும் சுவிசேஷக் கூட்டங்களில் அனுபவ்ங்களைப் பேசியது கிடையாது.
[[பவுல் ஏன் வியாக்கியானம் இல்லாமல் சபையில் அன்னியபாஷை பேசகூடாது என்று சொன்னார் என்றால்,]]
எப்பொழுது என்றால் , பிறர் கேட்கும்படி பேசுகையில், அதாவது மைக் கில் பேசும் போது, பொதுக் கூட்டத்தில் பேசும் போது வியாக்கியானம் இல்லாமல் அன்னியபாஷை பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
பேசுபவருக்கு பக்தி விருத்தி உண்டானாலும், கேட்பவருக்கு புரியாது என்பதால் தான்.
ஆவிக்குரிய சபைகளில் பல ஆவிக்குரிய சடங்காச்சாரங்கள் இருக்கத்தான் செய்கிறது.
[[உண்மையிலே Rick Joyner ஐ Decern பண்ணுவதற்கு சாதுவுக்கு தெரியவில்லை ஆனால் அவர் ஒரு பெரிய தீர்கதரிஷி என்று நம்புகிறீர்களா? நெசமாவா]]
நெசமாத்தான்!
உங்களுக்கு பல விஷயங்கள் தெரியவில்லை என்பற்காக, உங்களை விசுவாசி இல்லை என்று சொல்லி விட முடியுமா??
[மன்னிக்கவும்.நான் அப்படி நினைக்கவில்லை. பவுல் யார்? யோவான் யார்? அகபு யார்?2 சாட்சிகள் யார்?
அப்போஸ்தலர், தீர்க்கதரிகள்.. என்று சொல்லப்பட்டிருப்பவர்கள் யார்?]
இயேசுவுக்கு அப்புறம் வந்த தீர்கதரிசிகள் தேவனுக்கும் மனிதனுக்கும் நடுவில் நிற்பவர்கள் (சாமுவேலை போல) அல்ல. இவர்கள் சொல்லும் தீர்கதரிசனமும் முழுமையானது (அப்போஸ்தலர்களை தவிர)
I கொரிந்தியர் 13:9 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.
நவீன தீர்கதரிசிகள் சொல்லும் எல்லாவற்றையும் நாம் நிதானித்து அறியும்படி அழைக்கபட்டு இருக்கிறோம்
[சாது சுந்தர் சிங்ம் இந்த category தானா? சகோ. தினகரன் ஒரு நாளும் சுவிசேஷக் கூட்டங்களில் அனுபவ்ங்களைப் பேசியது கிடையாது.]
எனக்கு சாது சுந்தர் சிங் சொன்னது பற்றி தெரியாது. யாராய் இருந்தாலும் வேத ஆதராம் இல்லாமல் , தேவனுக்கு மகிமை உண்டாகாமல் சுயமகிமைக்காக சொல்லும் கதைகளை நம்புவது தவறு. குறிப்பாக வேத வசனத்தை குறிக்கோள் காட்டாமல் Mystic அனுபவங்கள் மூலமாய் சொல்லும் விஷயங்கள் பெரும்பாலும் (எல்லாம் அல்ல) தவறானதாகவே இருக்கும், ஏனென்றால் சாத்தானும் ஒளியின் வேஷத்தை தரித்துகொள்லுவனே. என்னை பொறுத்த வரையில் நாம் பரலோகம் செல்வதற்க்கு முன்பாக தெரியவேண்டிய, வெளிபடுத்தபடவேண்டிய விஷயங்கள் எல்லாம் வேதத்தில் இருக்கிறது. ஆவியானவரும் வேதத்தின் மூலமாகதான் பேசுவார்
யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். ஆகையால் இப்பேர்பட்ட, தேவையிலாத, ஆதாரமில்லாத கதைகளை ஒதுக்குவது கிறிஸ்தவ வாழ்கைக்கு உதவும்
[உங்களுக்கு பல விஷயங்கள் தெரியவில்லை என்பற்காக, உங்களை விசுவாசி இல்லை என்று சொல்லி விட முடியுமா??]
நிச்சயமாக சொல்லமுடியாது! ஆனால் Rick Joyner ஐ நிதானிக்க தெரியாதவர் பெரிய தீர்கதரிஷி இல்லை என்றும், நிச்சயமாக பரலோகம்போயி பிதாவிடமும், இயேசுவிடமும் பேசி C.D வாங்கி வந்தவர் இல்லை என்று சொல்ல முடியும்
I கொரிந்தியர் 2:15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்
சகோ. ஜான் அவர்களே!
நீஙக சொன்னபடி எழுதப்பட்ட வசனத்தை contradict பண்ணி ஆவியானவர் பேச மாட்டார். அதனால் தான் ஓரளவு வேதம் படித்திருந்தாலே Rick Joyner ன் Final Quest வாசிக்கும்போது நிறைய ரெட் லைட் நமக்குள் எரியும். கழுவுற மீனில் நழுவும் மீன் போல் தான் Rick Joyner எழுதியிருப்பார். நிறைய தப்பாகவும் இருக்கும்.
அது அவருக்கு தெரியாதது அதிசயமே. மார்டின் லூத்தர் யூதர்களை வெறுத்தது அதிசயமே. பெண்களை குறை பேசியதும் அதிசயமே. வெளி விசேஷத்தை குறை பேசியது இன்னும் அதிசயமே. Rick Joyner பற்றி தெரிந்து வைத்திருக்கிற தங்களுக்கு சாது சுந்தர் சிங் பற்றி தெரியாது என்பது அதிசயமே. அதிசயங்களால் நிறைந்ததுதான் இவ்வுலகம்!
If I remember correctly, I got really very upset on hearing his support/praise for Rick Joyner’s Final Quest, I wrote to him that, if he cannot correctly discern Rick Joyner, then he may end up telecasting Anti Christ and False Prophet instead of telecasting the ministry of two witnesses!!
இது அதிசயம்தானே! யாராயிருந்தாலும், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது தான் என் பாலிசி. So I can understand your anger!
ஆனால் ஏஞ்சல் டிவிக்கென்று ஒரு கடைசிகால பணி இருக்கிறது என்று அவர் சொல்வதை நம்புகிறேன்.அது வருகை பற்றி பேசும் ஒரு தீர்க்கதரிசி என்றும் நான் நம்புகிறேன். ஆண்டவர் தன் கரத்தில் வைத்து பயன்படுத்துகிறார் என்றும் நான் நம்புகிறேன்.
மனிதர்கள் குறைவுள்ளவர்கள். ஒருவர் பற்றிய எல்லா விஷயங்களும் நமக்கு பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பெரிய நன்மைக்காக சில சிறு குறைகளை சகித்து கொள்ளலாம்.
எல்லா வசனமும் நமக்கு வாசித்தவுடன் புரிந்து விடாது. முக்கியமாக தீர்க்கதரிசனங்கள். தீர்க்கதரிசி யாரைக் குறித்து பேசுகிறார். தன்னைக் குறித்தோ, வேறு ஒருவரைக் குறித்தோ என்று அந்த எத்தியோப்பிய மந்திரி கேட்டது போல, ஆண்டவர் விளக்கா விட்டால் சில விஷயங்கள் நமக்கு புரியவே புரியாது.
வசனத்தில் இல்லாத காரியங்களையும் ஆண்டவர் பேசக் கூடும். உம்: தாவீதுக்கு நல்ல குரல் கிடையாது என்று சகோ, தினகரன் சொன்னது. இதை நம்புவதும் நம்பாததும் நம் விருப்பம். நான் சகோ. தினகரனை நம்புவதால் அவர் சொல்வதை நம்புகிறேன். அது போல் சாது சுந்தர் சிங் சொல்லியிருப்பதை நம்புகிறேன். வின்சென்ட் செல்வகுமாரை நம்புகிறேன். சாதுவையும் நம்புகிறேன். என்றாலும் கண்ணை மூடிக் கொண்டு அல்ல! As I have said already, there are a few things that I do not agree with. பார்க்காமலே பார்க்கும் சகோ.விஜயையும் நம்புகிறேன்!
(சகோ.விஜய் உங்களை நான் நேற்று ஏஞ்சல் டிவியில் பார்த்தேன்! நான் சொல்வது சரியா?)
எல்லாவற்றயும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்வோம்.
என் பரலோக தரிசனங்கள் என்ற சகோ. தினகரன் எழுதிய புத்தகத்தை எல்லோரும் படிப்பது நல்லது.
[ஆனால் ஏஞ்சல் டிவிக்கென்று ஒரு கடைசிகால பணி இருக்கிறது என்று அவர் சொல்வதை நம்புகிறேன்.அது வருகை பற்றி பேசும் ஒரு தீர்க்கதரிசி என்றும் நான் நம்புகிறேன். ஆண்டவர் தன் கரத்தில் வைத்து பயன்படுத்துகிறார் என்றும் நான் நம்புகிறேன். நான் சகோ. தினகரனை நம்புவதால் அவர் சொல்வதை நம்புகிறேன். அது போல் சாது சுந்தர் சிங் சொல்லியிருப்பதை நம்புகிறேன். வின்சென்ட் செல்வகுமாரை நம்புகிறேன். சாதுவையும் நம்புகிறேன். ]
நீங்கள் இவர்களால் வஞ்சிக்கப்படாமல் தகுந்த நேரத்தில் தேவன் உங்களுக்கு பிரகாசமுள்ள மன கண்களை கொடுக்க வேண்டுமென்று ஜெபிப்பதை தவிர வேறு ஒன்றும் என்னால் செயமுடியாது. நேசர் இயேசுவின் கிருபை மாத்திரமே உங்களை ஏமாறாமல் காப்பாற்ற முடியும் என்று “நம்புகிறேன்”
[வசனத்தில் இல்லாத காரியங்களையும் ஆண்டவர் பேசக் கூடும்]
இது எனக்கு ஒரு புதிய செய்தி! இதற்க்கு ஏதாவது வேத ஆதாரம் இருந்தால் சொல்லுங்களேன்? ஏனென்றால் வேத ஆதாரம் இல்லாத பல வெற்று பேச்சுக்களை நம்பி ஏமார்ந்து திருந்த முயற்சிசெய்பவன் நான் ஆகையால் மறுபடியும் அந்த குழிக்குள் விழ விரும்பவில்லை
இந்த ஊருக்கு போகாதே. இந்த வேலை உனக்கு வேண்டாம். இந்த பஸ்ஸில் ஏறாதே. இந்த ஊரில் குண்டு வெடிக்கும்- என்றெல்லாம் வசனத்தில் இல்லாததை ஆண்டவர் பேச மாட்டாரா?
இன்னும் அனேக காரியங்கள் இருக்கிறது. சொன்னால் தாங்க மாட்டீர்கள் என்று இயேசு கிறிஸ்து சொல்ல வில்லையா?
நீங்கள் கேள்வியில் மந்தமாய் இருப்பதால் , சிலவற்றை உங்களுக்கு சொல்ல முடியவில்லை என்றும், போட்ட அஸ்திபாரத்தையே போட வேண்டி இருக்கிறது என்றும் பவுல் அலுத்துக் கொள்ள வில்லையா?
வசனத்தை தலை கீழாய் படித்துக் கரைத்துக் குடித்திருந்த பரிசேயர், வேதபாரகர், பிரதான ஆசாரியர்களால் , கண் முன்னால் நடந்து திரிந்த வசனத்தை கண்டு கொள்ள முடியவில்லை. ஏன்? வெளிப்பாடு இல்லை. வசனம் மட்டும் போதாது. Bible Knowledge alone is not sufficient. வெளிப்பாடும் வேண்டும். அப்பதான், அதான் இது, என்று match பண்ண முடியும்.
நம்முடைய இரட்சிப்பு, விசுவாச வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் வேதத்தில் இருக்கிறது. அது மட்டுமே நமக்கு போதும்தான். என்றாலும் எழுதப்படாத பல காரியங்களும் இருக்கத்தான் செய்கிறது. அதை ஆண்டவர் அவரோடு நெருக்கமாக இருப்பவர்களுக்கு தெரியப்படுத்துவார். உம்: தானியேல்: சிறையிருப்பு மாற வேண்டும் என்றுதான் தானியேல் ஜெபித்தார். அவர் ஆண்டவருக்கு பிரியமாக இருந்தபடியால், உலகத்தின் கடைசிவரை நடக்கப் போகும் காரியங்கள் அவருக்கு சொல்லப்பட்டது.
வெளிப்பாடு கண்டிப்பாக வசனத்தை contradict பண்ணாது. உம்: இரண்டாம் வருகையே கிடையாது, நரகம் கிடையாது என்ற வெளிப்பாடுகள் வசனத்திற்கு மாறானவை. Black Holes are graveyards for dying stars என்பது வசனத்தில் இல்லாத சரியான வெளிப்பாடு.இன்னுமொரு வித்தியாசமான் வெளிப்பாடு வாசிக்க நேர்ந்தது. என்னவென்றால், எப்படி இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் 40 நாட்கள் பலருக்கும் காட்சியளித்து, பின் எடுத்துக் கொள்ளப் பட்டாரோ, அது போல்,எடுத்துக் கொள்ளப் படுதலிலும் (Rapture) நடக்குமாம். அதாவது, மறுருபமாக்கப்பட்ட அனைவரும் 40 நாட்கள் பலருக்கும் காட்சி அளித்து, பல வல்லமையான காரியங்களைச் செய்து, கைவிடப் பட்டவர்களை பெலப்படுத்தி பின் தான் மறைந்து போவார்களாம். இது வசனத்தில் நேரடியாக சொல்லப் படாவிட்டாலும், இது மாறானது அல்ல. இப்படியும் நடக்கலாம்.
நெருக்கத்தைப் பொறுத்து வெளிப்பாடு கிடைக்கும் என்று நினைக்கிறேன். மார்பில் சாய்ந்திருந்தால் இதயத் துடிப்பையே கேட்கலாம், யோவான் போல.
அழைப்பைப் பொறுத்தும் வெளிப்பாடு கிடைக்கும் என்று நினைக்கிறேன்
வசனம், வசனம் என்று கண்ணை மூடிக் கொண்டு இருந்தால், ஆண்டவர் கண்ணுக்கு தெரிய மாட்டார்.
வெளிப்பாடு, வெளிப்பாடு என்று இருந்தால் ஒரு வேளை பிசாசை ஆண்டவர் என்று நினைக்க நேரிடலாம்!
Balance is needed, I think. And discernment is very much needed.
[[ நேசர் இயேசுவின் கிருபை மாத்திரமே உங்களை ஏமாறாமல் காப்பாற்ற முடியும் என்று “நம்புகிறேன்” ]]
ரோமர் 12:12 நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்!
வேதம் என்பதே மனிதரால் தொகுக்கப்பட்டது தானே, அப்படியானால் அன்றைக்கு பேசின தேவன் இன்றைக்கும் பேசமாட்டாரா, அவர் ஜீவனுள்ளவர் என்று நீங்கள் தானே சொல்லுகிறீர்கள், என்பதே இந்த கள்ளத் தீர்க்கதரிசிகளின் வாதம்..!
இவர்களெல்லாம் மீன்பிடிப்பவர்களல்ல, பிடித்த மீனை ஆராய்ச்சி செய்பவர்கள், முடிந்தால் அந்த மீன்கள் மீண்டும் கடலுக்குத் திரும்ப ஆவன செய்பவர்கள், இவர்களுடைய முன்னோர் ஆண்டவருடைய வருகைக்கு நாள் குறித்து ஊரைக் கொள்ளையடித்தவர்கள்,மேலும் மொத்தமாக கொளுத்திக்கொண்டு செத்துப்போனவர்கள், எல்லாவற்றுக்கும் முடிவு காலம் நெருங்குகிறது, ஆடும் வரை ஆட்டம் என்ற பாடலையே ரீமேக் செய்து இவர்களுக்காக ஒருமுறை பாடவேண்டும்..!
//வேதம் என்பதே மனிதரால் தொகுக்கப்பட்டது தானே, அப்படியானால் அன்றைக்கு பேசின தேவன் இன்றைக்கும் பேசமாட்டாரா, அவர் ஜீவனுள்ளவர் என்று நீங்கள் தானே சொல்லுகிறீர்கள், என்பதே இந்த கள்ளத் தீர்க்கதரிசிகளின் வாதம்..!//
அன்றைக்கு பேசின தேவன் இன்றைக்கும் பேசுவார் அதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் எழுதித் தந்ததற்க்குப் புறம்பாக எதுவும் பேசமாட்டர். அவர் பேசுவது அவரது வேத வார்த்தைகளை உறுதிப்படுத்துவதாகவே இருக்கும். வேதத்துக்குப் புறம்பான ஒன்றை சொல்லிவிட்டு “இதைக் கர்த்தர் பேசினார்” என்று சொல்லுபவன் பொய்க்குப் பிதாவினிடத்திலிருந்து வந்த பொய்யன்.
அன்புக்குரிய சகோதரி கோல்டா அவர்களே! கர்த்தர் தங்கள் கண்களைத் திறப்பாராக!
அன்பு சகோதரர் ஜான் அவர்களுக்கு, தங்கள் கருத்துக்களோடு முற்றிலும் ஒத்துப் போகிறேன். ஒன்றைத் தவிர, புதிய ஏற்ப்பாட்டில் தீர்க்கதரிசிகள் இல்லை என்ற தங்கள் கூற்றுக்கு நான் முரண்படுகிறேன். புதிய ஏற்பாட்டு சபையில் தீர்க்கதரிசிகள் உண்டு ஆனால் அவர்களது பணி பழைய ஏற்ப்பாட்டுத் தீர்க்கர்களிலிருந்து சற்று வித்தியாசமானது. கர்த்தருக்கு சித்தமானால் அதைக் குறித்து விரைவில் எழுதுகிறேன். புதிய ஏற்ப்பாடு சபையில் அப்போஸ்தலர்களே முதன்மையானவர்கள்.
புதிய ஏற்பாட்டு சபையில் தீர்க்கதரிசிகள் உண்டு என்பதற்க்கு சில ஆதாரங்கள்:
யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்திசொல்லி, அவர்களைத் திடப்படுத்தி (அப் 15: 32)
அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள். (அப்: 13:1)
தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார் (1கொரி 12:28)
தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள். (1 கொரி 14:29)
அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். (எபேசியர் 4:13)
அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; (எபேசியர் 2:20)
[[அன்புக்குரிய சகோதரி கோல்டா அவர்களே! கர்த்தர் தங்கள் கண்களைத் திறப்பாராக! ]]
அன்பு சகோ.விஜய் அவர்களே, ஆண்டவரை வட்டத்திற்குள் அடைக்காதீர்கள்!
// புதிய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் இல்லை என்ற தங்கள் கூற்றுக்கு நான் முரண்படுகிறேன்.//
ஆவியானவர் இல்லாவிட்டால் தீர்க்கதரிசிகளின் பணியானது பூஜ்யமாகும்; அதாவது ஆவியானவரால் அகத்தூண்டல் மூலம் வெளிப்படுத்தப்படாவிட்டால் யாரும் எதுவும் பேசவே முடியாது;அதற்கு மாறானவை விளைவுகளில் விளங்கும்;இது பழைய ஏற்பாட்டில் ஆவியானவர் செயல்பட்ட விதமாகும்.
பழைய ஏற்பாட்டில் பலரும் போதிக்கும் வண்ணமாக இயற்கைக்கு மாறுபட்ட ஒரு வல்லமையாக மாத்திரமே ஆவியானவர் அறியப்பட்டிருந்தார், செயல்பட்டார்;ஆனால் புதிய ஏற்பாட்டிலோ அவரே ஒரு நபராக உடன் இருந்து போதிப்பவராகத் தம்மை வெளிப்படுத்துகிற படியினால் இடைத்தரகு அதாவது மத்தியஸ்தர் பணியானது முடிவுக்கு வருகிறது.
இதனை எளிமையாக விளங்கிக்கொள்ளவேண்டுமானால் ஒரு கதைப் புத்தகம் போல, அல்லது அச்சடித்துக் கரங்களில் தவழும் புத்தகத்தைப் போல,முன்பு யாரோ படித்து சொல்லக்கேட்டதை நாம் நேரடியாகவே பெற்று அனுபவிக்கும் சுதந்தரமே பரிசுத்தாவியானவரின் பணியாகும்;இதோ இதனை எழுதுவதற்குத் தூண்டி உதவிசெய்பவரும் அவரே;ஆவி என்றால் அது என்று சொன்னால் போதும்;இவரோ ஒரு நபரைப் போல உடனிருந்து நடத்துவதனால் இவரை ஆவியானவர் என்று மரியாதையுடன் குறிப்பிடுகிறோம்.
இந்த வித்தியாசங்களை உணராத காரணத்தினாலேயே இன்னும் தூதர்களை தரிசிப்பதாகவும் ஏதோ ஒரு ஆவி தன்மேல் எதையோ சொல்லிச்சென்றதாகவும் சிலர் பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள்;இனி ஆவியானவர் வந்துபோகிறவர் அல்ல,அவர் தங்கியிருக்கிறவராக்கும்;அப்படியானால் ஆராதனைகளில் ஆவியானவரை வருந்தி அழைக்கிறோமோ அது எப்படி,அதற்கும் நம்முடைய தவறான புரிதலும் பெலவீனமுமே காரணம்;ஆவியானவர் வந்த பிறகு தூதர்களுடன் நமக்கு எந்த பிஸினெஸும் (Business) இல்லை; தூதர்கள் எப்போதும் போல பணிவிடை ஆவிகள் ஸ்தானத்தில் தொடர்கின்றனர்.
இதுவே ஆரோக்கிய உபதேசமாகும்.
//ஆவியானவர் இல்லாவிட்டால் தீர்க்கதரிசிகளின் பணியானது பூஜ்யமாகும்; //
I Agree Brother.
Pls follow & Participate in the Topic:
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=34879991
// புதிய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் இல்லை என்ற தங்கள் கூற்றுக்கு நான் முரண்படுகிறேன்.//
நான் சொல்ல வந்ததை ஒழுங்காக சொல்லவில்லை என்று நினைக்கிறன். புதிய ஏற்பாட்டில், குறிப்பாக வேதம் எழுதி முடிக்கப்பட்ட நிலையில் தீர்க்கதரிசிகள் (தீர்க்கதரிசன உழியம் செய்பவர்கள்) எல்லாம் வேதத்திற்கு கட்டுப்பட்டவர்கள். இவர்கள் சொல்லும் தீர்க்கதரிசனம் குறைவுள்ளது, சோதித்துபார்கப்படவேண்டியது. சாமுவேல் வாயைதிறந்து “தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்…” என்று சொல்லுகிறது எல்லாம் தேவன் சொன்னதே, அது அப்படியே நடக்கும், நடக்காத பட்சத்தில் அந்த திர்க்கதரிஷி கொல்லப்படவேண்டும்.
உபாகமம் 18:20 “சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.”
நவீன தீர்க்கத்ரிஷிக்கு இந்த வசனத்தை உபயோகித்தால் எல்லோரையும் “Mass murder” பன்ன வேண்டி வரும்.
அதுமாத்திரமல்ல “Marmanism” , “Original SDA (Elain G White’s Version)” , “Jehovas Witness” போன்ற “Cult” கும்பல் தோன்றினதற்கு இதுபோல நவீன திர்க்கதரிஷிகளே காரணம். இவர்கள் தங்களுடைய “superiority” ஐ காண்பிக்கும் பொருட்டு, தேவனுடைய பிரச்சனையை (அப்படி தேவனுக்கு ஒன்றும் இல்லை என்றாலும்) தாங்கள் திர்ப்பதாக நினைத்து “ஒளியின் தூதனை’ தேவன் என்று நம்பி “இயேசு பிதாவை விட கிழானவர்” , “இயேசுதான் மிகாவேல்” , “நரகம் என்பது தற்காலிகமானது” , “இயேசு லுசிபரினுடைய சகோதரர்” , “பிதாவுக்கு மனைவி உண்டு “, “இயேசு வேறு ஒரு கிரகத்தில் மனிதனாய் பிறந்து, தேவனாக பூமியில் பயிற்சி எடுப்பவர், நாமும் இரட்சிக்கப்பட்ட பின்பு வேறு ஒரு கிரகத்துக்கு தேவனாய் பயிற்சிக்கு அனுப்பபடுவோம்” என்று தவறான வழியில் ஜனங்களை மோசம் போக்குகிறார்கள். இவர்களை திர்க்கதரிஷி என்று நம்பும் அப்பாவி ஜனங்களும் “தேவன் வேதத்துக்கு வெளியேயும் பேசுவார்”
ஆகையால் இது உண்மை என்று நம்பி மோசம் போவார்கள்.
இதைப்பற்றிய ஒரு வேத ஆராய்சியாலரின் கட்டுரை
http://www.frame-poythress.org/poythress_articles/1996Modern.htm
In Nutshell, there is a great shift in paradigm of “prophet”. NT prophets (After the completion of bible) were not speaking under the divine authority so whatever they were saying MUST be tested against the infallible word of God. This is exactly similar to the “Priesthood” though there are modern priests; they don’t enter into the holy of holies for our sin (as Aaron did). Every born again believer is a priest who needs to carry the blood of lamb and go to alter with confidence (on the blood of lamb) for his own sin. God will be delighted to see His precious, Sinless blood of His Son and never smack us down
—
I heard Benny Hinn say on television back in the early 90s when he still had his church in Florida concerning prophecy, “if it doesnt bring edification, exhortation and comfort it‟s not true prophecy” (cf. I Cor. 14:3) which is an erroneous statement. Now I‟m not speaking against Brother Hinn because I don‟t know spiritually where he is right now with the Lord and I‟ve not been told by the Lord to speak out against any ministers by name. Perhaps he knew better then and did not explain the difference or perhaps now he does know the difference between the spiritual gift of Prophecy Paul was speaking about in Corinthians and prophecy from a prophet who carries an anointing of Judgment and is often called to prophesy words like those to the kings of Israel that did not bring “edification, exhortation and comfort.” But it‟s important for you to understand the distinction between the two. We have been called upon by the Lord to speak words of judgment against some churches in churches who invited us to minister. It‟s not a fun thing to do because they don‟t expect it and certainly don‟t advertise to their church or the community that “Brother and Sister Timmons are coming to give us words of judgment” and they never invite you back. Unfortunately, like the Bible, they normally reject the Word of the Lord and for this reason they must reject the messenger as well.
—
http://ccipublishing.net/yahoo_site_admin/assets/docs/Woe_to_the_Shepherds10-14-2009.286163028.pdf
[இந்த ஊருக்கு போகாதே. இந்த வேலை உனக்கு வேண்டாம். இந்த பஸ்ஸில் ஏறாதே. இந்த ஊரில் குண்டு வெடிக்கும்- என்றெல்லாம் வசனத்தில் இல்லாததை ஆண்டவர் பேச மாட்டாரா?]
நிச்சயமாக பேசுவார் ஆனால் அதை பத்திரிகையிலும் T.V யிலும் சொல்ல தேவையல்லாத Personal விஷயங்களாகத்தான் இருக்கும்.
[இன்னும் அனேக காரியங்கள் இருக்கிறது. சொன்னால் தாங்க மாட்டீர்கள் என்று இயேசு கிறிஸ்து சொல்ல வில்லையா?]
முதலாம் நுற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கும், சிஷர்களுக்கும் இல்லாத “தாங்கும்” சக்தி Angel T.V நேயர்களுக்கு வந்து விட்டதால் சாது எல்லாவற்றையும் சொல்லுகிறார் என்று சொல்ல வருகிறீர்களா?
[போட்ட அஸ்திபாரத்தையே போட வேண்டி இருக்கிறது என்றும் பவுல் அலுத்துக் கொள்ள வில்லையா?]
எது அஸ்திபாரம்? சில தேவதூதர்களுக்கு ரக்கை இல்லை என்பதா?
[வசனத்தை தலை கீழாய் படித்துக் கரைத்துக் குடித்திருந்த பரிசேயர், வேதபாரகர், பிரதான ஆசாரியர்களால் , கண் முன்னால் நடந்து திரிந்த வசனத்தை கண்டு கொள்ள முடியவில்லை. ஏன்? வெளிப்பாடு இல்லை. வசனம் மட்டும் போதாது. Bible Knowledge alone is not sufficient. வெளிப்பாடும் வேண்டும். அப்பதான், அதான் இது, என்று match பண்ண முடியும்.]
நவீன திர்கதரிஷிகளின் பொய்யான உபதேசத்தில் இதுவும் ஒன்று.
பரிசுத்த ஆவியானவர் என்றால் அந்நிய பாஷை பேசுவது
எழுப்புதல் என்றால் சத்தமாக (உடுக்கை அடிப்பது போல) வாத்தியம் போட்டு ஒரே பாட்டை “Tempo” ஏத்தி திரும்ப, திரும்ப பாடுவது.
வெளிப்பாடு என்றால் கனவு கண்டு சொல்லுவது போல எதாவது சொல்லுவது.
இதுதான் வெளிப்பாடு என்றால் மார்டின் லுத்தருக்கு வந்தது வெளிப்பாடு அல்ல, அது ஒரு எழுப்புதலும் அல்ல, அவரிடத்தில் பரிசுத்த ஆவியும் இல்லை. வெளிபாடு என்பது ஆவியானவர் அவருடைய வசனங்களை கொண்டு நம்மோடு பேசி, இயேசுவை மகிமை படுத்தி, அவரை இன்னும் நாம் நெருங்கும் படியாகவும், (நம்முடைய சொந்த) பாவத்தை நாம் வெறுத்து , அதற்கு எதிராக ரத்தம் சிந்தும் அளவுக்கு தீவிரிக்க வைப்பது.
பரிசேயர், வேதபாரகர், பிரதான ஆசாரியர்களால் ஏன் இயேசுவை கண்டுகொள்ள முடியவில்லை என்றால், ஆவர்களுக்கு “பணம்”, “புகழ்” என்று ஒரு கள்ள உறவு இருந்தது. அதனால் தான் இயேசு அவர்களை பொல்லாத விபசாரசந்ததி என்று அழைத்தார்
லூக்கா 16:13. எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார். இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
யோவான் 5:44. தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
அவர்களுடை நேசர் வானம் விட்டு இறங்கி வந்து, எதிரே நின்றபோதும் அவர்களால் அவரை நேசிக்க முடியவில்லை. பரிசேயர்கள் இயேசுவை வெறுத்ததின் காரணம் வெளிபாடு இல்லாமை அல்ல, “பாவம்”
லூக்கா 13:34 “…கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
யோவான் 3:20. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
[ உம்: தானியேல்: சிறையிருப்பு மாற வேண்டும் என்றுதான் தானியேல் ஜெபித்தார். அவர் ஆண்டவருக்கு பிரியமாக இருந்தபடியால், உலகத்தின் கடைசிவரை நடக்கப் போகும் காரியங்கள் அவருக்கு சொல்லப்பட்டது.]
சிறையிருப்பு இனிமேல்தான் மாறபோகிறது. இளைப்பாறுதலும் இனிமேல்தான் வரப்போகிறது. அதான் தானியேலும், யோவானும் கடைசிவரை எல்லாவற்றையும் சொல்லி வேதத்தை முத்திரை போட்டுவிட்டார்களே
[இது வசனத்தில் நேரடியாக சொல்லப் படாவிட்டாலும், இது மாறானது அல்ல. இப்படியும் நடக்கலாம்.]
இதுமாதிரி சொல்லுகிற எல்லாவற்றையும் எடுத்து கொள்ளலாமா? இதனால் சபைக்கு என்ன ப்ரோயோஜனம்?
[வசனம், வசனம் என்று கண்ணை மூடிக் கொண்டு இருந்தால், ஆண்டவர் கண்ணுக்கு தெரிய மாட்டார்.]
ஆண்டவர் கண்ணுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
யோவான் 20:29. “அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.”
2 கொரி 5:6. நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.
ரோமர் 8:24. அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? 25. நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.
கடைசியாக அன்பு சகோதரியே, வேதத்தில் தேவேனோடு நான் மேண்மையான ஐக்கியம் கொள்ளும்படியாகவும் , இயேசுவை இன்னும் ருசிக்கும் படியாகவும், அவரை நேசிக்கும் படியாகவும், பாவத்தை வெறுக்கும் படியாகவும் அனேக வசனங்கள் உண்டு ஆகையால் இதுபோல பொக்கீஷங்களை விட்டுவிட்டு இப்படி தேவையில்லாத, கர்த்தருக்கு மகிமையை கொண்டுவராத காரியங்களை செய்கிர்ரர்களே என்கிற ஆதங்கம் தான். தவறாக எதாவது எழுதியிருந்தால் தயவு செய்து மன்னித்து விடுங்கள்
சங்கிதம் 119:162. மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின்பேரில் மகிழுகிறேன்.
Praise the Lord!!
அருமையான சகோதரர் ஜான் அவர்களே!
தூதனுக்கு இறக்கை இருக்கு என்று சொல்லும் வெளிப்பாட்டால் யாருக்கு என்ன பிரயோஜனம் என்று கேட்டீர்கள்.
நமக்கு சிலரைப் பிடிக்கும் என்றால், அவர்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுவோம். அவர்களைப் பற்றி யாராவது பேசினால், நல்லா காது கொடுத்து கேட்போம். உம்: எனக்கு சச்சின் டெண்டுல்கர் பிடிக்கும் என்றால், அவருக்கு கல்யாணம் ஆச்சா? யார் மனைவி? எத்தனை பிள்ளைகள்? என்ன கலர் பிடிக்கும்? என்ன சாப்பாடு பிடிக்கும்? எங்கே வசிக்கிறார்? என்ன ஹாபி? என்று தெரிய ஒரு ஆசை இருக்கும். உண்மைதானே?
அது போல் தான் எனக்கு மிகவும் பிடித்த இயேசு கிறிஸ்துவை பற்றி, அவர் தோற்றத்தைப் பற்றி, அவர் எழுதிக் கொடுத்த வசனத்திலுள்ள பொக்கிஷங்கள் பற்றி, அவர் மனதின் பாரங்களைப் பற்றி, அவர் படைத்த பூமியைப் பற்றி, வானத்தை பற்றி, பிரபஞ்சத்தைப் பற்றி, பரலோகம் பற்றி, தேவ தூதர்கள் பற்றி,நரகம் பற்றி யெல்லாம் தெரிந்து கொள்ள எனக்கு ஒரு ஆசை இருக்கிறது.
அவரைப் பற்றி என்னவெல்லாம் தெரிந்து கொள்ள முடியுமோ, தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
சச்சினுக்கு சிக்கன் பிடிக்கும் என்று தெரிந்து எனக்கு ஆகப் போவதென்ன? ஒன்றுமில்லைதான். நமக்கு பிடித்தவர்களைப் பற்றி ஒரு தகவல் தெரிந்திருக்கிறது என்ற சந்தோஷம் தான். வேறொன்றுமில்லை.
அது போல் தான், சில தூதர்களுக்கு இறக்கை இருக்கிறது. சிலருக்கு இல்லை என்பது அவர் படைப்பை பற்றி தெரிந்து கொண்ட ஒரு உபரி தகவல். அவ்வளவுதான். இது ஒரு (அல்ப?) சந்தோஷம், எனக்கு!
I like these small, small details.
இப்படி தெரிந்து கொள்வதும், அவரைப் பற்றி அறிகிற அறிவில் வளருவதுதான்.
நீங்க யானையோட தும்பிக்கையை மட்டும் பார்க்கிறீங்க.அது போதும் என்று நினைக்கிறீங்க. நான் முழு யானையையும் பார்க்கிறேன். அல்லது பார்க்க நினைக்கிறேன் 🙂
Enough I think! Nice talking to you on this topic. God Bless You.
அன்பு சகோதரி! அவரைக் குறித்து அறிய வேண்டுமென்ற ஆவல் உங்களுக்கிருப்பதில் ஆச்சரியமில்லை. ஏனனில் நீங்கள் அவரது பிள்ளை. ஆனால் அவரைக் குறித்து அறிய மரியாள் போல அவரது பாதத்தில்தான் அமரவேண்டும். ”அவரது ஆடுகள் அவரது சத்தத்தை அறியும்” என்று வேதம் சொல்லியிருக்க நீங்கள் தொலைக்காட்சி ஊழியர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டு கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமென்ன? அவர்கள் சொல்லுவதெல்லாம் உண்மை என்கிற உத்திரவாதத்தை யார் கொடுக்க முடியும்? இன்றைய பிரபல ஊழியர்களில் சிலரைத்தவிர பெரும்பாலானோர் இன்னொரு இயேசுவையே நமக்குக் காட்டுகிறவர்கள்.
மேய்ப்பனை அறிந்த எந்த ஆடும் மேய்ப்பன் அருகிலிருக்க கூலியாளுக்குப் பின்னால் செல்லாது. ”God takes individual men. Tell me how much time you spend alone with God and I will tell you how spiritual you are.” என்று ரேவன்ஹில் என்ற ஊழியர் சொல்லுகிறார். ”என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.” என்று நீதி மொழிகள் 8:34 சொல்லுகிறது.
அவரை அறிய வேண்டும் என்கிற ஆவலைப் பொறுத்தமட்டில் “அவர் என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்?” என்ற தேடலே அவர் விரும்பும் பயனுள்ள தேடல் ஆகும். மற்றவை நம்மை அத்தேனே பட்டணத்தாரைப் போல மாற்றிவிடும் அபாயம் இருக்கிறது. அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை என்று அப் 17:21 சொல்லுகிறது.
நாம் அவரை ஆராய்வதிலும் அவர் நம்மை ஆராயும் படி அவருக்கு விட்டுக்கொடுத்தல் அவரோடு நம்மை இன்னும் அதிகமான நெருக்கத்தில் கொண்டுபோய் வைக்கும். நாம் கர்த்தரை அதிகமாக நெருங்கும் போது அவர் நமக்கு ஒரு உள்நோக்கிய பார்வையைத் தருவார். “ஐயோ நான் அதமானேன்! நான் அசுத்த உதடுள்ள மனுஷன்!” என்று ஏசாயாவைக் கதறவைத்தது அந்த உள்நோக்கிய பார்வைதான். அவரை அறிய அறிய கனி கொடுப்போம். இதனால்தான் ”அவர்களை அவர்களது கனிகளால் அறிவீர்கள்” என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
அடியேனுடைய கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டேன். தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஒரு அருமையான விவாதத்தில் பங்கு பெற்றதற்காக தங்களுக்கு நன்றி! இந்த விவாதம் அநேகருக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். சகோ ஜான் அவர்களுக்கும், சகோ.சில்சாம் அவர்களுக்கும் எனது நன்றிகள். கர்த்தர்தாமே நம்மை ”அவரை அறிகிற அறிவினால்”ஆசீர்வதிப்பாராக!
அன்பு சகோதரர் விஜய் சொல்ல வேண்டிய காரியங்களை தெளிவாக சொல்லிவிட்டதால் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. இருந்தாலும் சகோதரியே , நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது ஏனென்றால் நானும் இது போல “காதுக்கு இனிய” செய்திகளை கேட்கவும் , எல்லாரும் என் தலை மீது கைவைத்து எதாவது குறி சொல்லமாட்டார்களா என்று ஏங்கியும், அடிக்கடி விழுந்தும் எழுந்தவன்தான். அமெரிக்காவில் வசிப்பதால் இவை எல்லாவற்றையும் அனுபவித்தும் இருக்கிறேன். இந்தியாவில் லட்சகணக்கான மக்களிடத்தில் பேசுகிறவர்களிடம் நேருக்குநேர் அடிக்கடி பேசியும், ஜெபித்தும் இருக்கிறேன் (இப்போது அவர்களில் பெரும்பாலனவர்களிடம் கிட்டே கூட போவது கிடையாது). ஆனால் இதையெல்லாம் கடந்து ஒரு பேரானந்தம் இயேசுவில் உண்டு என்பதை ஒரு சின்ன அடியின் மூலம் தேவன் எனக்கு உணர்த்தினார் அதற்காய் கோடி நன்றிகளை அவருக்கு செலுத்திகிறேன்!! தேவன் பேசுகிறவர்! அவர் உண்மையிலே பேசுகிறவர் என்பதை அப்போது உணர்ந்தேன். அவருடைய சத்தத்தை இப்போதும் அனுபவிக்கிறேன். என்னை நம்புங்கள், அது ஒரு இனிமையான அனுபவம். இந்த போலியான சந்தோஷத்தை விட்டுவிட்டு “நிலையான” தேவன் தருகிற சந்தோஷத்தை நிங்கள் அடைய வேண்டும் என்று வாஞ்சிக்கிறேன், ஞாபகம் வந்தால் ஜெபிக்கிறேன்.
1 பேதுரு 1:8 அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்.
// இந்தியாவில் லட்சகணக்கான மக்களிடத்தில் பேசுகிறவர்களிடம் நேருக்குநேர் அடிக்கடி பேசியும், ஜெபித்தும் இருக்கிறேன் (இப்போது அவர்களில் பெரும்பாலனவர்களிடம் கிட்டே கூட போவது கிடையாது)…தேவன் பேசுகிறவர்! அவர் உண்மையிலே பேசுகிறவர் என்பதை அப்போது உணர்ந்தேன். //
தனிமையில் அமைதியான தருணங்களில் தேவன் இனிமையான பேசுகிறார் என்பது உண்மை தான்;அதே நேரத்தில் தேவைப்பட்டால் தேவ ஊழியர்கள் மூலமும் தேவன் பேசுகிறார்;ஆனாலும் போலிகள் அதிகமாகி விட்டதால் கேள்விக்குறியுடன் அணுகும் தேவ பிள்ளைக்கு ஊழியம் செய்யும் ஊழியர் தன்னிடம் ஜெபிக்க வந்திருப்பவர் தன்னை சந்தேகத்துடன் பார்க்கிறாரோ அல்லது அதிகம் எதிர்பார்க்கிறாரோ என்ற எண்ணம் மேலிடுவதால் இருதரப்பிலும் ஏமாற்றம் காணப்படுகிறது;சில ஜாம்பவான்கள் அனுபவத்திலிருந்து அடித்து நொறுக்குறார்கள்;நான் சொல்ல வருவது ஊழியர்கள் மூலம் ஆண்டவர் பேசுவதைக் கேட்கவேண்டுமானாலும் இருதரப்பிலும் உத்தமம் அவசியம்…இரு தரப்பிலும் மேதாவித்தனம் கூடாது..!
சகோ ஜான் அவர்களே!
ஒரு வேளை ஊழியக்காரர்களை நீங்கள் அதிகமாய் சார்ந்திருந்ததால், ஆண்டவர் ஒரு ஷாக் கொடுத்து அவர்கள் பிடியிலிருந்து உங்களை விடுவித்திருப்பார்! அவர் அப்படித்தான். தேவையற்றதை வெட்டி விடுவதில் சிறந்தவர்.
அவர் சத்தம் கேடபது இனிமையே. ஆண்டவர் அப்படி உங்களை நடத்துகிறார் என்பது மிகவும் மகிழ்ச்சி. அவர் சத்தம் கேட்டு , சித்தம் செய்ய வாழ்த்துக்கள்!
// சகோ ஜான் அவர்களே!
ஒரு வேளை ஊழியக்காரர்களை நீங்கள் அதிகமாய் சார்ந்திருந்ததால், ஆண்டவர் ஒரு ஷாக் கொடுத்து அவர்கள் பிடியிலிருந்து உங்களை விடுவித்திருப்பார்! //
Golda ,உங்களுக்கும் அதுபோன்றதொரு ஷாக் கொடுக்கப்பட வாழ்த்துகிறேன்; காமிராவுடன் ஆள்போட்டிருக்கிறோம்,சீக்கிரமே நல்ல சேதி வரும் பாருங்கள்..!
chillsam விஜய் நண்பர்களுக்கு !
நாங்கள் ஏஞ்சல் டிவியை பார்க்கிறோம் அதில் ஒளிபரப்பப்பட்ட சில நிகழ்ச்சிகளால்தான் நிறைய வசனங்களே மனப்பாடம் ஆகின இப்போதுதான் கிறிஸ்து இயேசுவில் வைராக்கியம் வருகிறது ஏன் கிறிஸ்தவ வெப்சைட்டுகளையே இப்போதுதான் தேடுகிறேன் அதற்க்காக ஏஞ்சல் டிவி கடவுளிடம் சேர்க்கும் என்று கூறவில்லை . எனக்கு அதுதான் ஒரு கீ யாக அமைந்தது
சகோ.ரீன், எனக்கும் என் குடும்பத்துக்கும் ஏஞ்சல் டிவி ஒன்றரை வருடங்கள் சோறு போட்டிருக்கிறது. நான் பணி செய்த இடத்தையும் என் முதலாளியையும் (முதலாளியாக மட்டும்) நேசிக்கிறேன். ஆனால் அது எனக்கு என்ன செய்தது என்பதை வைத்து அது எப்படிப்பட்டது என்று நான் முடிவு செய்யக் கூடாது. அப்படி செய்வது சுயநலம்.
அது என் தேவனுக்கும் சபைக்கும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை வைத்தே அது எப்படிப்பட்டது என்று நான் முடிவு செய்வேன்.