(இது ”சிற்றின்பம் தொடரின்” இரண்டாம் அத்தியாயம். நீங்கள் கடந்த அத்தியாயத்தைப் படிக்காவிடில் அதைப் படித்து விட்டு பின்னர் இந்த அத்தியாயத்தைத் தொடரும்படி அன்புடன் வேண்டுகிறேன்)
இதற்கு முந்தய அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்
விதவிதமாய்ப் பாவத்திலே ஜீவித்த நானே
இந்தநாளில் எந்தன் இயேசு சொந்த ரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை
இந்த அருமையான பழைய தமிழ்ப்பாடல் பாவச்சேற்றிலிருந்து தூக்கி எடுக்கப்பட்ட ஒருவரின் ஆழ்மனதிலிருந்து பொங்கிப் பொங்கி வழியும் மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தை நமக்கு நினைவூட்டுகிறது. ஆம்! இரட்சிப்பு என்பது பாவ நிவாரணம், மன்னிப்பு என்பவைகளோடு நின்று விடுவதில்லை. நாம் இனி பாவம் செய்யாமலிருக்கக் கிடைத்த விடுதலையே இரட்சிப்பு! இது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறதல்லவா?
இந்த அத்தியாயத்தில் பாவத்தை மேற்கொண்டு வாழும் ஜெயமுள்ள வாழ்க்கை குறித்த முகவுரையை ஆரம்பிக்கிறேன். இது இன்னும் சில அத்தியாயங்கள் செல்லும். என்னை மாற்றின இந்த சத்தியம் உங்களையும் மாற்றவல்லது என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன். சகோதரனே! முழுமையாக வென்று விட்டீர்களா? என்று கேட்டால் இன்னும் இல்லை என்பதே என் பதில். ஆனால் அந்த மாபெரும் வெற்றி எனக்குள் துவங்கி விட்டதென என்னால் உரக்கக் கூற முடியும். நான் அதிகம் நேசிக்கும் சகோ.சகரியாபூணன் அடிக்கடி சொல்லுவது போல வெற்றி வாழ்க்கை 3000 அடி உயரமுள்ள மலைச் சிகரம் என்றால் நான் இன்னும் 3000 அடி ஏறவில்லை. அதற்கு எனது முழு ஆயுட்காலமும் ஆகலாம். ஆனால் ஒரு 400 அடி தூரம் தேவகிருபையால் ஏறிவிட்டேன். எனக்குப் பின்னால் வெறும் 50 அடி மட்டுமே ஏறியுள்ளவர்களை உற்சாகப்படுத்தி இதோ இந்த வழியாய் வாருங்கள் என்று ஊக்கப்படுத்துவதே ஊழியம்.
உங்களில் யாரேனும் 450 அடி ஏறி இருப்பீர்களானால் தயவு செய்து உங்களுக்குப் பின்னால் ஏறிவரும் எங்களுக்கு உதவுங்கள். ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி தேவனுடைய மாளிகையாய் ஒருங்கிணைந்து கட்டப்படுவதே சபை.
இனிவரும் பகுதிகள் ஒரு ஆழமான வேதபாடம் போல செல்லும், தயவுசெய்து பொறுமையாக என்னுடன் வாருங்கள்.
நமது உலகக் கோப்பை:
முதலாவது ஒரு இனிப்பான செய்தியுடன் ஆரம்பிக்கிறேன்:
மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் (இனி) மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல (ரோமர் 8:12).
உலகக் கோப்பை வென்ற அணி துள்ளிக் குதிப்பதைப் போல நம்மைக் கொண்டாட்டம் போடச் செய்யும் வாக்குத்தத்தம் இது. பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களின் காதுகள் கேட்பதற்கு ஏங்கின வார்த்தை இது. அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு ”விசேஷித்த நன்மையானதொன்றை” தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.(எபி 11:40) என்று வேதம் சொல்லுகிறதல்லவா? பாவமாம்சத்தில் வெளிப்பட்டும் (ரோம 8:3) பாவம் செய்யாதவராக வாழ்ந்த இயேசுவைப் போல நாமும் ஜெயங்கொண்ட வாழ்க்கை வாழ நமக்குத் திறக்கப்பட்டிருக்கும் புதிய ஜீவனுள்ள வழியே அந்த “விசேஷித்த நன்மை” ஆகும். பிரியமானவர்களே! பில்கேட்ஸும், அம்பானிகளும் தங்களது சொத்து முழுமையும் கொடுத்தாலும் இந்த ”விசேஷித்த நன்மையை” வாங்க முடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள். பாவத்தால் தோற்கடிக்கப்பட்டு கைதிகளாய் வாழ்ந்த நமக்கு அளிக்கப்பட்ட பாக்கியந்தான் எத்தனை பெரிது!
எல்லாம் சரிதான் சகோதரனே! ஆனால்…
என்று நீங்கள் இழுப்பது எனக்குப் புரிகிறது. இரட்சிக்கப்பட்டும் ஏன் என்னால் எனது பழைய பாவத்தை ஜெயிக்க முடியவில்லை என்பதுதான் உங்கள் கேள்வி. என்னைப் பல ஆண்டுகளாகக் குடைந்து கொண்டிருந்த கேள்வியும் அதுதான். இதற்குப் பதில் “மந்திரத்தில் மாங்காய் காய்க்காது” என்பதுதான். தெளிவாக விளக்குகிறேன் கவனியுங்கள்:
ஆதாமின் வீழ்ச்சிக்குப் பிறகு மனிதன் பாவத்துக்கு அடிமையாகவே பிறந்தான் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. பாவம் செய்ததினால் பாவியானவன் ஆதாம் மட்டுமே! நாம் அனைவரும் பாவிகளாய்ப் பிறந்ததாலேயே பாவம் செய்கிறோம். இதை தேவனும் அறியாமல் இல்லை. பழைய ஏற்பாட்டை நன்றாக வாசித்துப் பாருங்கள் பாவத்தின் மேல் ஜெயம் அவர்களுக்கு வாக்குப்பண்ணப் படவில்லை. மாறாக பரிகாரமும் மன்னிப்புமே அருளப்பட்டது. பாவம் செய்யாமலிருக்கும் விடுதலை வாழ்வு அவர்களுக்கு இல்லை ஆனால் பாவத்தை விட்டு விலகி ஒடும் வழி மாத்திரம் அவர்களுக்கு எப்போதும் திறந்திருந்தது. யோசேப்பு அவ்வழியாய் ஓடி தப்பித்துக்கொண்டான், சிம்சோனும், தாவீதும் உள்ளே சிக்கிக் கொண்டார்கள்.
ஆனால் நம் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, பரிசுத்தவாழ்வு, சிலுவைமரணம் மற்றும் உயிர்த்தெழுதலினால் நமக்கு ஒரு மாபெரும் புதிய வழி திறக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு மந்திர வல்லமை அல்ல. மாறாக இயேசுவை முற்றிலுமாக சார்ந்து வாழும் ஒரு உன்னதமான அடிமை வாழ்வாகும் (ரோம 6:19).
ஒரு பால பாடம் (An Elementary Lesson)
நீங்கள் பாவத்தை ஜெயிக்கும் வாழ்க்கை வாழ விரும்பினால் பின்வரும் அ,ஆ,இ,ஈ,உ,ஊ-வை கண்டிப்பாக அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தேவன் ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் வைத்தபோது நன்மை எது? தீமை எது? என்பதைப் பகுத்தறிவதற்கு அவர்கள் தன்னையே சார்ந்திருக்க வேண்டும் என்று விரும்பினார். ஏனெனில் அவரே அதை நிர்ணயிக்கும் ஆற்றலும் தகுதியும் உள்ளவர். ஆனால் மனிதனின் உள்ளத்தில் பிறந்த ஆசை என்ன? அவனுக்கு தேவனைச் சார்ந்து, அவரை மையமாகக் கொண்டு வாழும் வாழ்வில் நாட்டம் இல்லை. மாறாக நன்மை தீமை இன்னதென்று நிர்ணயிக்கத்தக்கதான உரிமையை தான் எடுத்துக் கொண்டு தன்னை மையமாகக் கொண்டதான ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ள விரும்பினான். அவனது குறுக்குப்புத்தியை அறிந்து கொண்ட சாத்தான் அவனை எளிதாக வஞ்சித்தான். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: ”நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என்றது (ஆதி 3:4,5).
தேவனை மையமாகக் கொண்டு வாழும்படி படைக்கப்பட்ட மனிதன் தனது சுயசித்தத்தைப் (Free Will) பயன்படுத்தி தன்னையே மையமாகக் கொண்ட ஒரு முரணான வாழ்வை அமைத்துக் கொண்டபடியால் பாவத்துக்கு என்றென்றும் அடிமையாகிப் போனான். இன்றும் கூட நமக்கு வரும் சோதனைகளெல்லாம் நாம் தேவனை மையமாகக் கொண்டு வாழ்கிறோமா? அல்லது நமது சொந்த வாழ்க்கையை வாழ்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்கும்படிக்கே வருகிறது. ஒவ்வொரு முறையும் நாம் தோற்கும் போதும் நாம் சுயத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நிரூபணமாகிறது. இதனால்தான் நமது கிறிஸ்தவப் பயணம் தோல்வியில் முடிகிறது. சூரியனைச் சுற்றி வரும்படி படைக்கப்பட்ட பூமி அப்படிச் செய்ய மறுத்து என் இஷ்டப்படிதான் சுற்றுவேன் என்று தறிகெட்டு சுற்றுமானால் அதன் விளைவு என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
நாம் பாவமென்றால் மது அருந்துவது, விபச்சாரம் செய்வது, கொலை செய்வது, திருடுவது என்று பெரிய பட்டியலே வைத்திருக்கிறோம். ஆனால் இவைகளெல்லாம் சுயத்தை மையமாகக் கொண்ட வாழ்வு வெளிப்படுத்தும் கனிகளே ஆகும். ஆனால் உண்மையில் பாவம் என்றால் ”நாம் நமக்காக வாழ்வது” என்பதே, இதுவே ஆணிவேர் ஆகும். மரத்தின் வேர் அருகே கோடரியை வைக்காமல், கனிகளையும் இலைகளையும் மாத்திரமே பிடுங்கிப் போட முயற்சிப்பதால்தான் பல சபைகளும் ஊழியக்காரர்களும் இன்று காரியத்துக்கு உதவாத வைத்தியர்களாகிப் போனார்கள்.
இயேசு சிலுவையில் மரித்தது நமது பாவ பரிகாரத்துக்கு மட்டுமே என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் வேதம் சொல்லுகிறது. “பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்” (2 கொரி 5:15). இயேசு நமது பாவத்துக்காக மாத்திரமல்ல, சுய ஜீவியத்திலிருந்து விடுவிக்கவும்தான் மரித்தார் என்பது இதனால் தெளிவாகிறதல்லவா? அப்படியானால் பாவ மன்னிப்பு பெற்ற நாம் சுயஜீவியத்திலிருந்து விடுதலையாகி இருக்கிறோமா?
இந்தக் கேள்விக்கு பதில் தேடத் துவங்கி விட்டீர்களானால் வெற்றிக்கு வெகு அருகாமையில் வந்து விட்டீர்கள் என்றே பொருள். ஆனால் இன்றைய ஊழியக்காரர்கள் சிலர் சொல்வதுபோல அக்கினி இறங்கி நுகங்களை முறிக்கும் என்பதோ, அந்த அக்கினி இறங்கி விட்டால் அதற்குப் பிறகு பாவமே செய்ய மாட்டீர்கள் என்பதோ வேதத்துக்கு முரணான பித்தலாட்டம். கிறிஸ்துவோடு கூட சிலுவையில் அறையப்பட்ட வாழ்வு மட்டுமே பாவத்தை ஜெயிக்க வேதம் சொல்லும் வழியே தவிர இவர்கள் சொல்லும் அக்கினி அல்ல. பரிசுத்த ஆவியானவர் நாம் கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்படும் வாழ்வு வாழ நமக்கு உதவி செய்கிறார் என்பதே வேதம் போதிக்கும் உண்மை. எதற்கெடுத்தாலும் அக்கினி அக்கினி என்பது இன்றைய கிறிஸ்தவ உலகில் ஒரு ஃபேஷன் அவ்வளவுதான். அடுத்து ஒரு அமெரிக்க ஊழியர் ”கந்தகம்” என்ற ஒரு புதிய கான்சப்ட்டை (Concept) ஆரம்பித்தால் உடனே இங்கும் அதைத் தொடங்கி விடுவார்கள் கந்தகத்தைத் தொடர்ந்து சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் என்று வரிசையாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்றைய தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு ஆவியானவரல்ல அமெரிக்கர்களே ஆசான்கள்!
வெற்றியின் முதல் படி: இயேசுவின் இரகசியம்
இயேசு பாவம் செய்யாதவராக வாழ்ந்தது எப்படி?
அவர் தேவகுமாரன், அதினால்தான் அவர் பாவம் செய்யவில்லை என்போமானால் நாம் அந்திக்கிறிஸ்துவின் ஆவியுடையவர்கள் என்று வேதம் நம்மை அழைக்கிறது(1யோவா 4:3). அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் அதுதான் உண்மை.
இயேசுகிறிஸ்து தேவகுமாரன்தான் அதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் அவர் தேவகுமாரனாய் இருந்தும் தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷசாயலானார். என்று பிலிப்பியர் 2:6,7 சொல்லுகிறது. அவர் தன்னை தேவகுமாரன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை மனுஷகுமாரன் என்றே தன்னைக் குறித்து பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். இயேசுகிறிஸ்து நம்மைப் போல பாவ மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று முதலாவது நாம் விசுவாசிக்க வேண்டும்,
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது (1யோவா 4:3).
இங்கு மாம்சம் என்பது உடலைக் குறிக்கவில்லை. இயேசு மனித உடலோடு பூமிக்கு வந்தார் என்று சாத்தான் கூட ஒத்துக் கொள்வானே! மேலே குறிப்பிட்ட 1யோவான் 4:3 எந்த மாம்சத்தைக் குறித்து சொல்கிறது? அதுவே ஆதாமின் விழுந்து போன சுபாவம் ஆகும். அதாவது நம்மைப் போல முழு மனிதனாக வந்தார். நம்மைப் போலவே சோதிக்கப்பட்டார். அவருக்கும் பாவம் செய்ய நமக்கு கிடைக்கும் தருணங்கள் போலவே கிடைத்தன. ஆனாலும் அவர் அவற்றை மேற்கொண்டார். எப்படி மேற்கொண்டார்? அக்கினி இறங்கி நுகத்தை முறித்ததாலா? இல்லவே இல்லை!
அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,(எபி 5:7,8)
மேற்கண்ட வசனத்தில் “தம்மை மரணத்திலிருந்து” என்று குறிப்பிடப்படுவது எந்த மரணம்?
அவர் சிலுவையில் அடைந்த சரீரப் பிரகாரமான மரணமா? அல்லவே அல்ல. கர்த்தர் “சாகவே சாவாய்” என்று ஆதாமை எச்சரித்தாரே அந்த ஆவிக்குரிய மரணம். எந்த அடிப்படியில் சொல்லுகிறீர்கள் என்று கேட்டால் அதற்கான ஆதாரம் அந்த வசனத்திலேயே இருக்கிறது. இயேசு தன்னை மரணத்திலிருந்து இரட்சிக்க வேண்டினார் என்றும் அவரது ஜெபம் கேட்கப்பட்டது என்றும் வசனம் சொல்லுகிறது. ஆனால் இயேசு சரீரப் பிரகாரமாக மரித்தார் என்பது உலகறிந்த உண்மையாயிற்றே? இதிலிருந்தே அவர் பாவத்தின் மூலமாக வரும் ஆவிக்குரிய மரணத்தைத்தான் குறிப்பிடுகிறார் என்பது விளங்குகிறதல்லவா?
இயேசுகிறிஸ்து தான் ஆதாம் மூலமாய்ப் பெற்றுக் கொண்ட பெலவீனமான, எளிதில் பாவத்தில் விழுந்து விடக்கூடிய மாம்சத்திலே தான் வந்திருப்பதை உணர்ந்தவராய் தேவனிடத்தில் தன்னை முற்றிலுமாக ஊற்றி பெலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி அந்த ஜெபம் கேட்கப்பட்டு விசேஷித்த வல்லமை இறங்கினதினால் அல்ல, பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டார்.
ஆம் பிரியமானவர்களே! நாமும் கூட தேவனுக்காக பரிசுத்தமாக வாழ வேண்டுமென்றால், நமது இயலாமையை தேவனிடத்தில் அறிக்கையிட்டு அவரிடத்தில் கண்ணீரோடு கெஞ்சுவதே முதற்படி. இயேசு தனக்கு உண்டான பயபத்தியினிமித்தம் கேட்கப்பட்டார் என்று வாசிக்கிறோம். அவர் தாம் ஜெபித்ததை வாஞ்சித்தார், வாஞ்சித்ததை ஜெபித்தார், அவரது வாஞ்சை அவரது அன்றாட வாழ்விலும் வெளிப்பட்டிருக்க வேண்டும். நாமோ நமக்கு குற்ற உணர்ச்சி உண்டாகும் போது மட்டும் பரிசுத்தத்துக்காக கதறியழுது ஜெபித்துவிட்டு மற்ற வேளைகளில் இண்டர்நெட்டில் ஆபாசத்தை மேய்ந்து கொண்டிருப்போமானால். நாம் பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல் செய்தாலும், பயபக்தி இல்லாததால் நமது ஜெபம் கூரையைக் கூடத் தாண்டாது.
இரண்டாம் படி: விலகி ஓடுங்கள்
கண்களின் இச்சை விசேஷமாக ஆபாசப்படம் பார்ப்பது தவறு என்று தெரிகிறது ஆனால் பார்க்காமல் இருக்க முடியவில்லையே என்ன செய்வது? இது எனது பெலத்துக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறதே என்றால் பார்க்கும்படியான சூழ்நிலையை ஏன் உருவாக்கிக் கொள்ளுகிறீர்கள்? தனி அறையில் இருக்கும் கம்ப்யூட்டரை எல்லாரும் நடமாடும் பொது அறைக்கு ஏன் மாற்றக் கூடாது? பொது அறைக்கு கம்ப்யூட்டரை மாற்றும் சூழ்நிலை எல்லோருக்கும் சாத்தியமில்லாமல் இருக்கலாம். இதை நான் ஒரு உதாரணமாகத்தான் சொல்கிறேன். அதாவது பாவத்தில் விழாதிருக்கும் சூழலை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே எனது அறிவுரை.
சில சகோதரர்கள் கூட்டமான பஸ்ஸில் ஏறினால் ஒரு பாதுகாப்பான(ஆத்துமாவுக்கு) இடத்தைத் தேடி நின்று கொள்வதில்லை, அதைவிட்டு சோதனையில் மாட்டிக் கொண்டு பின்னர் குற்ற மனசாட்சியோடு அலைந்தால் அது நம்முடைய தவறுதானே! நமது ஊரில் பேருந்தில் நிற்கும் பெண்கள் சரியாக பெண்கள் பக்கம் திரும்பி நிற்கிறார்கள். அப்படியானால் ஆண்கள், ஆண்கள் பக்கம்தானே திரும்பி நிற்க வேண்டும் அவர்களும் ஏன் பெண்கள் பக்கம் திரும்பி நிற்கும் பழக்கம் இருக்கிறது என்று புரியவில்லை. மற்றவர்களை விடுங்கள் சகோதரர்களுக்கு இது புரிய வேண்டாமா? நாமே ஏன் வலியப் போய் நமது குடுமியை சாத்தானிடம் கொடுத்து விட்டு பின்னர் வருந்த வேண்டும். இன்றைய டவுன்பஸ்க்களுக்கு உள்ளும், மெட்ரோ ரெயில்களுக்குள்ளும் பலரது பரிசுத்த வாழ்க்கையைக்கு படுகுழி வெட்டப்பட்டிருப்பதால் இதைக் குறித்து எழுதாமல் கடந்து செல்ல முடியவில்லை.
அதேபோல சுயஇன்பம் என்னும் பாவம்! இது பாவமா இல்லையா என்பதைப் பலர் பட்டிமன்றம் வைத்து ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களிடம் பழைய ஏற்பாட்டைச் சேர்ந்த ஓணான்(ஆதி 38) என்பவன் சிக்கிக் கொண்டு படும்பாடு இருக்கிறதே ஐயோ, பாவம்!
ஒரே வார்த்தையில் சொன்னால் தேவனுடைய ஆலயமாகிய சரீரத்தைத் தீட்டுப்படுத்தும் யாவும் பாவமே! சுயஇன்பம் என்பது பாவம்! பாவம்! பாவமே!, இதைக் குறித்து இன்னொரு அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம். ஏனனில் இது சபைகளால் எச்சரிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிற ஆனால் மகா மகா முக்கியமான பிரச்சனை.
நாம் தேவனிடத்தில் அந்தரங்கத்தில் கதறி அழுவது மெய்தான், ஆனால் அந்த வைராக்கியமும் பயபக்தியும் எப்போதும் நம்மிடத்தில் இருக்கிறதா? என்பதே நம்மிடத்தில் தேவன் சோதித்தறிய விரும்பும் ஒரு காரியம். நாம் தேவனிடத்தில் பதிலைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கக் காரணம் நமக்கு”கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை” என்ற இருமனம் இருப்பதுதான். புரியுமென நினைக்கிறேன்.
சகோதர! சகோதரிகளே! நான் உங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்வது பாவத்தை விட்டு விலகி வாழும் சூழலைக் உருவாக்கிக் கொள்ளுங்கள். அத்தகைய சூழல்களை, நபர்களைத் தவிருங்கள். இது நம்முடைய வேலை, இதை நமக்காக தேவன் செய்ய முடியாது நாமே செய்தாக வேண்டும். வேசித்தனத்துக்கு விலகி ஓடு (1கொரி 6:18) என்று வேதம் நம்மை எச்சரிக்கவில்லையா? விலகி ஓடுவது மகா அவசியமென்றாலும் புதிய ஏற்பாடு வாக்குப் பண்ணின வெற்றி அது அல்ல என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இதை இயேசுவை அறியாதவர்கள் கூட செய்ய முடியுமே! அப்படியானால் நமக்கு அருளப்பட்ட விசேஷித்த நன்மை என்ன? அதை இனிவரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
நினைவுக்கு:
- சுயத்தை மையமாகக் கொண்ட வாழ்வே எல்லாவற்றிற்கும் வேர். அந்த சுயம் அழிக்கப் பட வேண்டும் என்கிற வாஞ்சை நமக்குள் ஆழமான வைராக்கியமாக மாற வேண்டும். இயேசு செய்ததுபோல பிதாவிடம் முற்றிலுமாக தன் இருதயத்தை ஊற்றி விடுதலைக்காக ஜெபிக்க வேண்டும்.
- இச்சைக்குள் தள்ளும் சூழ்நிலைகளை, நபர்களை விட்டு விலக வேண்டும்.
(தொடரும்…)
Hi Vijay
To be honest, among all the articles written by you…this article is really pulling the attention of the reader. The summary is very nice to remind what I read. Iappreciate you for bringing the neglected topics and present here. May God bless you and this ministry.
Thanks a lot for your suggesions brother,
bro.vijay quote
பிரியமானவர்களே! நாமும் கூட தேவனுக்காக பரிசுத்தமாக வாழ வேண்டுமென்றால், நமது இயலாமையை தேவனிடத்தில் அறிக்கையிட்டு அவரிடத்தில் கண்ணீரோடு கெஞ்சுவதே முதற்படி.
நம்மால் முடியாது எல்லாம் அவரால் கூடும் என்று நம் இயலாமையும் கிறிஸ்த்துவின் அவசியத்தையும் உணர்ந்து அவரிடும் வருகின்ற இந்த அனுபவம் மிகவும் முக்கியமானது.
நன்றி சகோ. விஜய்.
இயேசுவின் ரகசியமே நம் இரகசியம் உண்மை பிரதர்.இதை உணரும் போது கர்த்தர் நமக்காக எவ்வளவு பாடு பட்டார் என்பதை அறிந்து நன்றியுடன் ஆச்சரியம் அடைகிறோம்..
யோவான் 1:12 (John 1:12)
12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
Really nice article. I really wanted you to write like this. your tamil is very good. May God bless you and increase you above your imagination, let all your channles be opened for His glory.
Thank you so much sister, plz remember us in your prayers
Dear Bro Vijay,
Two simple prescriptions are available in Job 31:1 Psalms 17:3,
further remember Jesus’ last words; these people know not what they do, These words are truer for all of us. We do not understand what our limitations are and what the glory of God is. We with our iniquities and ignorance mostly demean the mightiness of God.
If we have Christ consciousness and Christ intelligence within us Satan will run away from us. Many passages of the Bible cannot be explained or understood by ordinary means. But Bible contains all the iniquities of men without hiding anything. They are not shame of the God but shame of the mankind. Only when we understand the Bible is not a “Holy Book” but a great book which can make all “Holy”. When we consider it just a holy book we use it only to recite, chant, quote, preach or even to keep under the pillows to avoid horror dreams. But in practice it talks about a Holy God, Holy Place, Holy Life in store for us. Bible characters were ordinary human beings who by practice attained Holy state, yet many failed. In present situation we are exposed to million different ways to be entrapped. But at the same time the Bible can be proved
and understood in a better way with a clear modern scientific knowledge. Satan tactfully withholds men from understanding both. If we could understand Bible in the truer sense we should grow stronger and stronger but we become weaker and weaker as we hear more from incompetent people.
The following explanation should help to understand my point. When we watch a sinful act in person we may fell shy and may not be able to look longer, so long it is served to us as images we do not have any ill feeling in watching them. In simple language we cannot look straight at a woman’s breast but when it is an image we have no guilt. The sinning can catch people in modern times unaware.
Let me explain a scientific truth here. According to psychologists Masturbation is natural and nothing wrong in it. It is a natural way to vent the sexual drive. Ok. But according to our God sex is a blessing to mankind because we do the multiplication process which is God’s work and God’s desire. God has given it with a purpose. Only indiscreet usage is sin.
So the creator has provisions also. When the produced sperm is not used, body has provision to reabsorb it within the body. So the already halved cells will easily amalgamate with whole cells. Only corrupted visuals, images and thoughts make it possible to emit during sleep. Secondly the spermatic liquid when transferred into counter parts becomes a medicine to keep the passage clean and healthy because again it easily gets absorbed by the female organ. This is the real meaning of becoming one flesh according to Bible. But in cases of adultery and fornication the passage is made into a gutter that is why the creator abominates it as a purposeless act. This is actually modern Anatomy which no doctor will reveal because it is against their money making attitude. This is one simple explanation like this we have so much to correlate Bible. When we use our body against the will of the God’s creation we commit sin. Only when we understand the real purpose of all the organs of our body we can estimate what our mind is designed for and how the spirit can be transformed. How many people will know that yoga is an exercise for better sex. If one listens to the expositions made there it is nothing but nonsense. Gods wisdom can be understood only from steadfast practice not by listening or visiting. Science minus God is destructive.
Bit long yet I think useful.
Will write more under other topics. God bless you Brother.
Thanks for the practical and useful thoughts outlined on this article. May God enable you to bring many more practical thoughts, enabling His people to be warned, edified and equipped in these lust controlled days .
– Prithvi/Bangalore