நாம் அரசியலில் பங்கு கொள்கிறோமோ இல்லையோ ஆனால் உலக அரசியலை உற்று நோக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். உலக அரசியல் நகரும் திசையையும், அரசாங்கங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதையும் சற்று கவனித்துப் பாருங்கள். மணவாளன் வாசலண்டை வந்துவிட்டார் என்பது புரியும்.
அரசாங்கம் என்பது தங்களுக்காக உண்டாக்கப்பட்டது என்றுதான் மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தீர்க்க வேண்டிய மக்கள் பிரச்சனைகள் மலையளவு குவிந்திருக்க, அரசாங்கங்களோ மக்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி, ஒவ்வொரு தனிமனிதன் சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தையும் அந்த அடையாள அட்டைக்குள் ஒருங்கிணைக்கும் பணிக்காக பல ஆயிரம் கோடிகளை செலவிட்டுக் கொண்டிருக்கின்றன. அது ஏன்? அந்தப் பணிக்கான அவசரமும் அவசியமும் என்ன?
ஏதாவது ஒரு நாட்டை எதிரியாக சித்தரித்து, அந்த நாடு அணு ஆயுதம் வைத்திருப்பதாக பூச்சாண்டி காட்டி, உலக வல்லரசுகள் எண்ணிக்கையில் அடங்காத நாசகார அணு ஆயுதங்களை தயாரித்துக் கொண்டிருப்பது ஏன்? தங்களிடம் உள்ள ஒன்றிரெண்டு அணுகுண்டுகளாலேயே அந்த எதிரி நாட்டை அழித்துவிட முடியும் என்ற பட்சத்தில் அதோடு நிறுத்திக் கொள்ளாமல் பூமியையே பல தடவைகள் பஸ்பமாக்கும் அளவுக்கு அணு ஆயுதங்களை குவித்துக் கொண்டேயிருப்பது “எந்த எதிரியுடன்” யுத்தம் செய்ய?
ஏழைநாடுகளில் மக்கள் பசியினாலும், கொள்ளை நோயினாலும் கொத்துக் கொத்தாக செத்து விழுகிறார்கள் ஆனால் வளர்ந்த நாடுகள் விண்வெளி ஆய்வுக்காக பல லட்சம் கோடிகள் செலவிடுகிறார்கள். விண்வெளியில் இருந்து அப்படி எதைத்தான் ஆய்வு செய்து அறிய விரும்புகிறார்கள்?
New World Order என்ற கருத்தை வல்லரசு நாடுகளின் தலைவர்கள் அடிக்கடி பேசிவருகிறார்கள். வணிகம் உலகமயமாக்கப்பட்டுவிட்டது, பொதுமொழியாக ஆங்கிலம் வந்துவிட்டது, நவீன தொடர்பு சாதனங்கள் உலகம் முழுமையையும் இணைத்துவிட்டன. இது எதைக் காட்டுகிறது?
நாம் இயேசு பூமியை ஆள பரிசுத்தவான்களோடே வருகிறார் என்று சொல்லிக்கொண்டிருக்க, உலகமோ வேற்றுக்கிரகவாசிகள் பூமியை ஆக்கிரமிக்க வருகிறார்கள் என்று அலறிக்கொண்டிருக்கிறது. சமீப காலமாக இந்தக் கருத்து பொழுதுபோக்கு ஊடங்கள் வழியாக தொடர்ந்து பரப்பட்டு வருகிறது… இதன் உள்நோக்கம் என்ன?
வேதாகமத்தை எழுதிய பரிசுத்தவான்கள் தரிசனத்தில் பார்த்தவைகளை நாம் நிஜத்தில் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம்…Get Ready!
ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.in
It is really a urgent needed message Thank you God bless you