மிருகத்தின் முத்திரை உங்களுக்கா?

வேதாகமத்தின் கடைசி புத்தகத்தின் பெயர் “பயமுறுத்துகிற விசேஷம்” அல்ல, “வெளிப்படுத்தின விசேஷம்”. அதன் ஆசிரியர் அந்திகிறிஸ்து அல்ல, இயேசு கிறிஸ்து. அதன் நோக்கம் பீதியைக் கிளப்புவது அல்ல, நம்பிக்கையை உருவாக்குவது.

கந்தகம் எரிகிற அக்கினிக் கடலில் உயிரோடு தள்ளப்படுவாய் என்கிற பயங்கரமான நியாயத்தீர்ப்பு அந்திகிறிஸ்துவுக்கும் (வெளி 19:20). இனி ஒரு சாபமுமிராது (வெளி22:3), உங்கள் கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின (வெளி 21:4) போன்ற நம்பிக்கையூட்டும் வசனங்கள் நமக்கும் அதில் எழுதப்பட்டிருக்கிறது.

நியாயப்படி வெளிப்படுத்தின விசேஷத்தைப் படிக்கும்போதெல்லாம் அந்திகிறிஸ்து மிரளவேண்டும், நாம் மகிழ்ச்சியும் ஆறுதலும் அடையவேண்டும். ஆனால் அந்திகிறிஸ்து வெளிப்படுத்தின விசேஷத்தை வைத்து விசுவாசிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறான். என்ன நடக்கிறது இங்கே?

தேவனால் ஏற்கனவே முத்திரையிடப்பட்டவர்கள் (எபே 1:13, 4:30) மிருகத்தின் முத்திரையை நினைத்து ஏன் கலங்க வேண்டும்?

மிருகம், வேசி, கள்ளத்தீர்க்கதரிசி, வலுசர்ப்பம் இவர்களையெல்லாம் ஆட்டுக்குட்டியானவர் பார்த்துக் கொள்வார். நாம் கல்வாரி சிலுவையை மட்டுமே நோக்கிப் பார்ப்போம். அதுதான் நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவும்.

Leave a Reply