நிரந்தர விடுதலை

தோளில் ஒரு நூலும், அதிகார மட்டத்தில் பரிந்து பேச ஒரு அண்ணியும் இருப்பதால் தன்மீது இருக்கும் ஒரேயொரு வழக்கில் விசாரணைக்கு உட்படாமல், தண்டனைக்கு தப்பி எஸ்.வி. சேகரால் போலீசாரின் கண் முன்னரே ஜாலியாக உலாவர முடிகிறது. அதைப் பார்க்கும்போது நமக்கெல்லாம் கோபம் வருகிறது.

ஆனால் உண்மையில் நமக்கு அதிகார மட்டத்தில் பரிந்து பேச முதற்பேறான ஒரு அண்ணன் இருப்பதால் நம் மீதிருந்த பல்லாயிரம் வழக்குகள் முடிக்கப்பட்டு எந்தவித விசாரணையுமின்றி, தண்டனையுமின்றி இரட்சிப்பென்னும் ஆடையை அணிந்து கொண்டு நாமும்தான் ஜாலியாக உலாவி வருகிறோம்.

எஸ்.வி.சேகர் விஷயத்தில் நடப்பது ஒருவேளை அதிகார மீறலாய் இருக்கலாம். நாளை அதிகாரங்கள் மாறினால் அவர் சிக்கக்கூடும். ஆனால் நமது விஷயத்தில் பெரிய விலைக்கிரையம் செலுத்தப்பட்டு வழக்குகள் அத்தனையும் மொத்தமாக முடிக்கப்பட்டிருக்கிறது. அதிகார மாற்றம் என்ற பேச்சுக்கும் இடமில்லை. எத்தனை பாக்கியவான்கள் நாம்! இதனிமித்தம் நமது உள்ளம் எப்போதும் தாழ்மையினாலும் நன்றியுணர்வினாலும் நிரம்பியிருக்கட்டும்!

எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான் (சங்கீதம் 32:1).

 

Leave a Reply