தசமபாகம் – ஒரு நீதிமன்ற வழக்குஎனக்கு சகோதரர் ஒருவர் மூலம் மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட இந்த அற்புதமான நாடகத்தை உங்களுக்காக தமிழில் மொழியாக்கம் செய்து தருகிறேன். இதன் அசல் ஆங்கிலப் பிரதியை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. அவர் யாராக இருந்தாலும் அவருக்கு என் நன்றிகள், ஏனனில் இது அநேகருடைய கண்களைத் திறந்து வைக்கக் கூடியது. இந்த நாடகத்தில் வரும் நீதிபதி மற்றும் பாஸ்டர்.ஜோன்ஸ் ஆகிய இரண்டு பாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல. இது யாரையும் புண்படுத்த வெளியிடப்படவில்லை, தேவஜனங்களின் மனங்களைப் பண்படுத்தும் நோக்கத்துடனேயே வெளியிடப்படுகிறது.

இடம்: நீதிமன்றம்

நேரம்: காலை 11.00 மணி

பாத்திரங்கள்: நீதிபதி மற்றும் பாஸ்டர் ஜோன்ஸ்

நீதிபதி: பாஸ்டர்.ஜோன்ஸ் அவர்களே! நீங்கள் உங்கள் திருச்சபைக்கு வரும் மக்களிடம் கடந்த 20 ஆண்டுகளாக அவர்களது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை இறைவன் பெயரைச் சொல்லி ஏமாற்றிப் பெற்றதாகவும். தசமபாகம் தருபவர்களை இறைவன் ஆசீர்வதிப்பார் என்று நயங்காட்டியும் தராதவர்கள் மீது தேவனுடைய சாபம் வருமென்று மிரட்டியும் தசமபாகத்தைப் பெற்றதாக தங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குற்றத்தை நீங்கள் ஒப்புக் கொள்ளுகிறீர்களா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: கனம் நீதிபதி அவர்களே! இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன், எமக்கு இறைவன் அருளின வேதம் எதைச் சொல்லுகிறதோ அதையே நான் என் மக்களுக்கு போதித்தேன். ஆபிரகாம் மெல்கிசேதேக்கிற்க்கு தசமபாகம் கொடுத்தான் தேவன் அதினிமித்தம் அவனை ஆசீர்வதித்தார். அவன் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது.

நீதிபதி: அது சரி அல்ல! ஆதியாகமம் 13:2 இல் தான் ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது.

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! அதைத்தானே நானும் கூறுகிறேன்?

நீதிபதி: அந்த வசனம் ஆதியாகமம் 13 ஆம் அதிகாரத்தில் வருகிறது. ஆனால் ஆபிரகாம் மெல்கிசேதேக்கிற்கு தசமபாகம் கொடுத்தது அதற்கு அடுத்த அதிகாரத்தில்தான் வருகிறது (ஆதி14:20) அப்படியானால் மெல்கிசேதேகிற்கு தசமபாகம் கொடுப்பதற்க்கு முன்னமே ஆபிரகாம் ஐசுவரியவானாய் இருந்தான் என்பது தெளிவாக இருக்கிறதல்லவா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! நீங்கள் சொல்வதும் சரிதான்.

நீதிபதி: அப்படியானால் ஆபிரகாமின் பொருளாதார ஆசீர்வாதம் தசமபாகம் கொடுத்ததினால் வந்ததல்ல என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்களா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: (பதில் இல்லை)

நீதிபதி: பாஸ்டர் ஜோன்ஸ் அவர்களே! ஆபிரகாம் தசமபாகம் கொடுத்ததினால் தேவன் அவனை ஆசீர்வதித்தார் என்று சொல்லுகிறீர்கள். அப்படியானால் ஆபிரகாம் எத்தனை முறை மெல்கிசேதேகிற்கு தசமபாகம் கொடுத்ததாக வேதத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஒரே ஒரு முறைதான்.

நீதிபதி: அவன் மாதந்தோறும் கொடுத்ததாகப் பதிவு செய்யப்படவில்லை அல்லவா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை

நீதிபதி: சரி, ஆபிரகாம் தான் தசமபாகமாகச் செலுத்தியவற்றை எங்கிருந்து பெற்றான்?

பாஸ்டர்.ஜோன்ஸ்: அவை அவனுக்கு யுத்தத்தில் மீட்கப்பட்ட பொருளாகக் கிடைத்தவை.

நீதிபதி: அப்படியானால் அவன் தனது சுய சம்பாத்தியமான வருமானத்திலிருந்து கொடுக்கவில்லை மாறாக தனக்கு சொந்தமல்லாத யுத்தத்தில் மீட்கப்பட்ட பொருளிலிருந்து எடுத்துக் கொடுத்தான் என்று சொல்லுகிறீர்களா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம் அப்படித்தான் வேதம் கூறுகிறது.

நீதிபதி: ஆபிரகாம் தனது சுய சம்பாத்தியத்திலிருந்து அல்லது சொந்தப் பொருளிலிருந்து மெல்கிசேதேகிற்கோ அல்லது வேறு யாருக்குமோ தசமபாகம் கொடுத்ததாக வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: அது…..வந்து…இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

நீதிபதி: வேதத்தை நன்கு கற்றறிந்து போதகராக இருக்கும் நீங்கள் “நினைக்கிறேன்” என்றெல்லாம் நீதிமன்றத்தில் பதிலளிக்கக் கூடாது. ஆபிரகாம் தனது சொந்தப் பொருளிலிருந்து எடுத்து தசமபாகம் கொடுத்ததாக வேதத்தில் எங்கேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? இல்லையா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை, நான் படித்தவரை எங்கும் அப்படிப் பதிவு செய்யப்பட வில்லை.

நீதிபதி: சரி..ஆபிரகாம் மெல்கிசேதேகிற்கு எவைகளையெல்லாம் தசமபாகமாகக் கொடுத்தான்?

பாஸ்டர்.ஜோன்ஸ்: யுத்தத்தில் மீட்கப்பட்ட பொருளிலிலிருந்து கொடுத்ததாக வேதம் சொல்லுகிறது. அது கால்நடைகளாகவோ, உணவாகவோ அல்லது மக்கள் பயன்படுத்திய பிற பொருட்களாகவோ இருக்கலாம்.

நீதிபதி: பணத்தை தசமபாகமாகக் கொடுத்ததாக அங்கே குறிப்பிடப்பட்டுள்ளதா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை

நீதிபதி: சரி…ஆபிரகாம் விஷயத்தில் எனது கடைசிக் கேள்வி, மெல்கிசேதேகிற்கு தசமபாகம் கொடுக்கச் சொல்லி தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிட்டாரா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை, ஆபிரகாம் அதைத் தானே விரும்பிப் பரிசாகக் கொடுத்தான்

நீதிபதி: நீங்கள் சொன்னவைகளை எல்லாம் வைத்துப் பார்த்தால், ஆபிரகாம் மெல்கிசேதேகிற்கு தானே விரும்பித்தான் பரிசாகக் கொடுத்தான், அதைக் கொடுக்கும்படி யாரும் அவனை நிர்பந்திக்கவில்லை, கொடுத்தது பணமும் அல்ல என்பது தெளிவாக விளங்குகிறது. அப்படியானால் எல்லாக் கிறிஸ்தவர்களும் தங்களது மாத வருமானத்தில் 10% பணத்தை திருச்சபைக்கு தர வேண்டும் என நிர்பந்திப்பது என்ன நியாயம்?

நீங்கள் உங்கள் சொந்த வாயால் ஒப்புக்கொண்ட காரியங்களை வைத்தே இதுவரை உங்கள் சொந்த லாபத்திற்காக வேதத்தை திரித்து உபதேசித்து மக்களைச் சுரண்டியிருக்கிறீர்கள் என்பது புலனாகிறது.

பாஸ்டர்.ஜோன்ஸ்: நீதிபதி அவர்களே! சற்றுப் பொறுங்கள், தசமபாகம் விஷயத்தில் ஆபிரகாமின் காரியத்தை மேற்கோள் காட்டிப் போதித்தது எவ்வளவு மதியீனம் என்பதை நான் இப்பொழுது உணர்கிறேன். ஆனால் தசமபாகம் குறித்ததான என்னுடைய நம்பிக்கைக்கு ஆதரவாக வேதத்தில் இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன. யாக்கோபு தேவனுக்கு எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. நாம் அவருடைய மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.

நீதிபதி: சரி..யாக்கோபு என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். நீங்கள் மேற்கோள் காட்டிய பகுதியை வேதத்திலிருந்து வாசியுங்கள்.

பாஸ்டர்.ஜோன்ஸ்: நிச்சயமாக…ஆதியாகமம் 28:20-22 வரை வாசிக்கிறேன் கேளுங்கள் “அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால்,கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்; நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்” என்று வேதம் தெளிவாகச் சொல்லுகிறது.

நீதிபதி: நாம் யாக்கோபுடைய மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா பாஸ்டர்.ஜோன்ஸ்?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! யாக்கோபு தசமபாகம் தருவதாகப் பொருத்தனை பண்ணினார் நாமும் அவ்வாறே செய்ய வேண்டும்.

நீதிபதி: இங்கு நான் ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன், யாக்கோபு என்ன பொருத்தனை பண்ணினார்? தேவன் என்னை ஆசீர்வதித்தால் மாத்திரமே…தசமபாகம் தருவேன் என்றல்லவா கூறுகிறார். நான் தசமபாகம் தரவேண்டுமானால் தேவன் முதலாவது என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற நிபந்தனை இங்கு வருகிறது. நாமும் இந்த மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறீர்களா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: நான் அதைக் குறிப்பிடவில்லை…

நீதிபதி: வேறு எதைக் குறிப்பிட்டீர்கள்?

பாஸ்டர்.ஜோன்ஸ்: நாமும் கடவுளுக்கு தசமபாகம் கொடுக்க வேண்டும் என்பதுதான் அது.

நீதிபதி: நீங்கள் உங்கள் சுயலாபத்திற்காக வேதத்தைப் புரட்டுகிறீர்கள் என்பது மீண்டும் புலனாகிறது. அதுமட்டுமன்றி யாக்கோபு தனது பொருத்தனையை எப்படிக் காப்பாற்றினார் என்பதற்கான வேத ஆதாரங்களை நீங்கள் நீதிமன்றத்தில் சமர்பித்தாக வேண்டும். மேலும் அவர் எங்கு அல்லது யாரிடத்தில் அந்த தசமபாகத்தைக் கொடுத்தார் என்பதற்கான வேத ஆதாரங்களையும் சமர்பிக்க வேண்டும் ஏனனில் அதைப் பெற்றுக் கொள்ள அந்த காலத்தில் தேவாலயமோ லேவியரோ இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: அவர் பொருத்தனையை நிறைவேற்றினார் என்பதற்கான ஆதாரங்களோ அல்லது அதை எங்கு அல்லது யாரிடத்தில் கொடுத்தார் என்பதற்கான ஆதாரங்களோ வேதத்தில் எங்குமே இல்லை.

நீதிபதி: யாக்கோபு தானே விரும்பித்தான் அந்தப் பொருத்தனையைச் செய்தார் என்பதும் மேலும் அது ஒரு நிபந்தனைக்குட்பட்ட பொருத்தனை என்பதும் தெளிவாக இருக்கிறது. ஆக பொருந்தாத இந்த வேத பகுதியை மேற்கோள்காட்டி  தசமபாகம் செலுத்த வேண்டும் என்பதை கட்டளையாக சபையில் போதிக்கக் கூடாது என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்களா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஒப்புக் கொள்ளுகிறேன், ஆனால் ஜனங்கள் தசமபாகம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தும் பல்வேறு வேதவசனங்கள் இருக்கின்றன.

நீதிபதி: நீங்கள் இதுவரைக் கொடுத்த எந்த பதிலுமே திருப்தியாக இல்லை. நீங்கள் வேத வாக்கியத்தை எடுத்து அதை உங்கள் லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பது மட்டும் தெளிவாக விளங்குகிறது. ஆனாலும் தாங்கள் சமுதாயத்தில் ஒரு உயர்ந்த பொறுப்பில் உள்ள குடிமகன் என்பதால் தங்கள் வாதத்தை நிரூபிக்க இன்னும் ஆதாரங்களை எடுத்து வைக்க வாய்ப்பு தருகிறேன்.

பாஸ்டர்.ஜோன்ஸ்: மிக்க நன்றி! மல்கியாவின் புத்தகத்தில் 3 ஆம் அதிகாரம் 8 ஆம் வசனமுதல் வாசிக்கிறேன் ”மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள். என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” இதிலிருந்து நாம் தசமபாகம் தரவேண்டும் என்றும் தராவிட்டால் கர்த்தர் சபிப்பார் என்றும் வேதம் சொல்லுகிறது.

நீதிபதி: இதைக் கர்த்தர் யாரிடம் கூறுகிறார்?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இஸ்ரவேல் மக்களிடம்…

நீதிபதி: அப்படியா?…மல்கியா 2:1 ஐ வாசிக்க முடியுமா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: சரி, வாசிக்கிறேன்..”இப்போதும் ஆசாரியர்களே இந்தக் கட்டளை உங்களுக்குரியது…”

நீதிபதி: அப்படியானால் மூன்றாம் அதிகாரத்தில் ஆசாரியர்களிடம் பேசி முடித்துவிட்டாரா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை யுவர் ஆனர்!

நீதிபதி: பாஸ்டர்.ஜோன்ஸ் அவர்களே! பதில் சொல்லுங்கள் இங்கும் கர்த்தர் பணத்தை தசமபாகமாகச் செலுத்தச் சொல்லுகிறாரா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: அக்காலத்தில் பணம் புழக்கத்தில் இல்லை

நீதிபதி: தவறு! வேதவிற்பன்னரான தங்களுக்குத் தெரியாதா? பணப்புழக்கத்தைக் குறித்து ஆதியாகமத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மல்கியா புத்தகமானது ஆதியாகமத்துக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டது. இங்கு ஆகாரங்களையெல்லாம் பண்டகசாலைக்குக் கொண்டுவரும்படி கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் லேவியரும் தகப்பனற்ற பிள்ளைகளும் ஏழை விதவைகளும் உண்டு பசியாறும்படிக்கே!

கவனியுங்கள்! இங்கும் கூட தசமபாகம் என்பது ஆகாரமே தவிர பணம் அல்ல…

பாஸ்டர்.ஜோன்ஸ்: (பதில் இல்லை)

நீதிபதி: இந்தக் கட்டளையானது நியாயப்பிரமாணத்தின் கீழிருந்த ஒரு தேசத்துக்குக் கொடுக்கப் பட்டது. இயேசு கிறிஸ்து அந்த நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி விட்டார் என்பதையும் இனி நாம் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்கள் அல்ல என்பதையும் மறந்துவிட்டீர்களா? இங்கும் கூட நீங்கள் ஆகாரம் என்று இருக்கிறதை பணம் என்று புரட்டி போதிக்கிறீர்கள். ஆகாரம் என்று இருந்த தசமபாகத்தை தேவன் பணம் என்று மாற்றிவிட்டார் என்று வேதத்தில் ஏதேனும் ஒரு ஆதாரமாவது இருக்கிறதா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: எனக்குத் தெரிந்து இல்லை…

நீதிபதி: பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களுக்கு தேவன் கொடுத்த ஒரு குறிப்பிட்ட கட்டளையை எடுத்து, திரித்து அதைப் புதிய ஏற்பாட்டு ஜனங்களுக்குப் போதிக்கிறீர்கள், உங்களுக்கு வருமனம் வரவேண்டுமென்பதற்காக. இதைத் தவறு உங்கள் மனசாட்சி உங்களுக்கு உணர்த்தவில்லையா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல, புதிய ஏற்பட்டிலும் கூட இயேசு தசமபாகத்தைக் குறித்து கட்டளை கொடுத்திருக்கிறார். மத்தேயு 23:23ஐ வாசித்துப் பாருங்கள் மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டும்.இங்கு இயேசு தசமபாகம் செலுத்துவதை விடாதிருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்.

நீதிபதி: உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கட்டும், இதை இயேசு யாரிடம் சொல்லுகிறார்?

பாஸ்டர்.ஜோன்ஸ்: வேதபரகரிடமும் பரிசேயரிடமும்

நீதிபதி: நீங்கள் வேதபாரகரா? பரிசேயரா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஐயோ!…இரண்டுமே இல்லை.

நீதிபதி: இயேசு இங்கு நியாயப்பிரமாண சட்டத்தைக் கைக்கொள்ளுவதை விடாதிருக்கவேண்டும் என்று சொல்லுகிறார்.  அப்படியானால் நீங்கள் நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவரா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை

நீதிபதி: ஏன் இல்லை?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஏனென்றால் இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றிவிட்டார்.

நீதிபதி: அதை அவர் எப்பொழுது நிறைவேற்றினார்?

பாஸ்டர்.ஜோன்ஸ்: அவர் சிலுவையில் மரித்தபோது

நீதிபதி: அப்படியானால் நியாயப்பிரமாணமானது இயேசு சிலுவையில் மரிக்கும்வரை அதிகாரத்திலிருந்தது அல்லவா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! சரிதான்…

நீதிபதி: நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதல்லவா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: புரிகிறது யுவர் ஆனர்!…இயேசு மரிக்கும் வரை நியாயப்பிரமாணம் அதிகாரத்திலிருந்தது. வேதபாரகரும் பரிசேயரும் அதற்குக் கீழ்ப்பட்டிருந்து நியாயப்பிரமாணச் சட்டத்தின் ஒரு கட்டளையான தசமபாகத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திலிருந்தார்கள். எப்பொழுது நியாயப்பிரமாணம் நிறைவுற்றதோ அப்பொழுது தசமபாகமும் நிறைவுற்றது.

நீதிபதி: அந்த வசனத்தை நீங்கள் மறுபடியும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் எவற்றை தசமபாகமாகச் செலுத்தினார்கள்?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஒற்தலாம், வெந்தயம், சீரகம்

நீதிபதி: இங்கும் பணம் குறிப்பிடப்பட்டுள்ளதா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை, ஆனால் உணவுப் பொருட்களை மக்கள் தசமபாகமாகக் கொடுத்தால் நாங்கள் சபையை எப்படி நடத்துவது? நாங்கள் சபைக்கட்டிடம் கட்ட வாங்கிய கடனைச் செலுத்த வேண்டும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், மற்ற கட்டணங்களைக் கட்ட வேண்டும். எங்கள் குடும்பத்தையும் பராமரிக்க வேண்டுமல்லவா? நாங்கள் எங்கள் மக்கள் தரும் பணத்தைச் சார்ந்து இருக்கிறோம்.

நீதிபதி: உங்கள் தேவைகளைச் சொல்லி தவறுகளை நியாயப்படுத்த முடியாது பாஸ்டர்.ஜோன்ஸ். உங்கள் கடனையும் கட்டணங்களையும் கட்ட வேண்டுமென்பதற்காக வேத வசனத்தைத் திரித்து தேவன் ஆசீர்வதிப்பார் என்று நயங்காட்டியும் தராவிட்டால் தேவன் சபிப்பார் என்று பயங்காட்டியும் அப்பாவி ஜனங்களைச் சுரண்டுகிறீர்கள். உங்களை ஆவிக்குரிய தகப்பனாகவும் தங்கள் மேய்ப்பனாகவும் ஏற்றுக்கொண்டு உங்களை கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகள் என்று நம்பும் ஜனங்களை நடத்துகிற விதம் இதுதானா? சொல்லுங்கள்.

நீதிபதி: முடிப்பதற்குமுன் உங்களுக்காக சில காரியங்களைச் சொல்லுகிறேன், பாஸ்டர்.ஜோன்ஸ் அவர்களே! கேளுங்கள்.

தசமபாகம் என்பது பணமல்ல, அது ஆகாரம். அது ஏழைகளுடைய வயிற்றுப் பசி ஆற்ற கொடுக்கப்பட்டது உங்கள் ஆடம்பர கட்டடங்களுக்காக அல்ல.

அது நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களுக்கு விதிக்கப்பட்டது. புதிய ஏற்ப்பாட்டு சபைக்கல்ல.

அப்படியானால் புதிய ஏற்பாட்டு சபையில் உள்ள ஏழைகளை எப்படி போஷிப்பது? புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் தங்களிடையே இருந்த ஏழைகளை தாங்களே போஷித்தார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆதித்திருச்சபை விசுவாசிகளின் காணிக்கைகள் அவர்களுக்குள்ளே இருந்த தரித்திரரை போஷித்ததே தவிர அப்போஸ்தலரை கோடீஸ்வரர்கள் ஆக்கவில்லை.

புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் எப்படிக் கொடுக்க வேண்டும் என்று பவுல் 2கொரி9:7 இல் ஆலோசனை கூறுகிறார். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். ஒருவன் தானே விருப்பப்பட்டு தனது வருமானத்தில் 10% கொடுப்பது தவறு அல்ல. ஆனால் அப்படிக் கொடுக்கச்சொல்லி வற்புறுத்துவதே தவறு.

நீங்கள் மறுபடியும் ஜனங்களை அடிமைத்தனத்துக்குள்ளும் சாபத்துக்குள்ளும் தள்ளுகிறீர்கள் கலாத்தியர் 3:10 சொல்லுகிறது ”நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே” மேலும் கலாத்தியர் 5:4 சொல்லுகிறது ”நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்” ஏற்கனவே விடுதலை பெற்ற மக்களை மறுபடியும் அடிமைத்தனத்துக்குள்ளாக இழுத்துச் செல்லுவது எவ்வளவு பயங்கரமான பாவம் என்பதை அறியீர்களா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: கனம் நீதிபதி அவர்களே! இப்பொழுது உணர்கிறேன். சுயாதீனம் பெற்ற மக்களை மறுபடியும் அடிமைத்தன நுகத்துக்கு இழுத்துச் செல்லுவது எவ்வளவு பெரிய பாவம்! இதை இவ்வளவு நாட்களாக அறியாது இருந்துவிட்டேன்.

நான் இருந்த சபையில் எந்த போதனையைக் கேட்டேனோ அதையே நானும் போதிக்க ஆரம்பித்து விட்டேன். வேத வார்த்தையை ஆராய்ந்து பார்க்கவில்லை.

ஆம்! நான் குற்றவாளி என்பதை ஒத்துக் கொள்ளுகிறேன். இனி இந்தத் தவறை ஒரு போதும் செய்ய மாட்டேன்.

0 thoughts on “தசமபாகம் – ஒரு நீதிமன்ற வழக்கு”

 1. பலருக்கு தேவையான ஓர் உபயோகமான கட்டுரை அண்ணா.. கண்டிப்பாக அவர்களை சிறிது நேரம் யோசிக்க வைக்கும்.. மேற்கோள்கள் அருமை.. மொழி மாற்றம் சிறப்பாக உள்ளது.. தங்களது சீரிய பணி தளைத்தோங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

 2. its a healthy message to today’s christians, but how many pastors like jones are doing the same without knowing these truths ???????

  1. தங்கள் வருகைக்கும் கமெண்ட்டுக்கும் நன்றிகள், தங்களின் ஏக்கம்தான் என் ஏக்கமும். நம்மால் முடிந்தவரை சத்தியத்தை சொல்லுவோம். விசுவாசிகளின் உள்ளத்தில் கிரியை செய்ய சொல்லி தேவனிடம் கெஞ்சுவோம். மாற்றங்கள் வரும் . அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்று ஒரு பழமொழி உண்டல்லவா?

 3. Praise the Lord.

  Thank very much for this skit which protect from skid in Christian life.
  God bless you. i knew this concept of 10% offering but i could’t explain properly. When ever i discuss this matter it became as argument then i stopped it, The almighty show the path of discussion without arguments. May God Bless you and your service.

 4. ஏற்கனவே விடுதலை பெற்ற மக்களை மறுபடியும் அடிமைத்தனத்துக்குள்ளாக இழுத்துச் செல்லுவது எவ்வளவு பயங்கரமான பாவம் என்பதை அறியீர்களா?… ennum ethanai naal nammai adimaiyai nadathuvargal?? migavum arumaiyana katturai bro. Vijay.. ungal pani thodara en jebanalum vaalthugalum.. praise the Lord..

 5. I am not a pastor, but I am normal believer. My comment is this message is misleading the believers. Tithes belong to God, if any believer who dont give tithes is stealing God. God specifically told the believers where to give, it is to the church (Read the Malachi chapter 3 fully).
  There is a high priest for each covenent. Aaran was the high priest for the old covenent where people have to give tithings.
  Jesus is called the High Priest of the new covenent in the order of Melchizedek (Hebrew 7:11) to whom Abraham gave tithes and in return Melchizedek Blessed Abraham who had the promise. Also Jesus when he confronted the Pharasees he said you do give…. and tenth of …, you should practise this without… (Luke 11:42). He said you should give tenth.
  Regards to the Pastor John, it is not human court to judge him. If he didnt handle the money properly, it is God who judge him. Because he is God’s servant. If you are going to church and if that church feed you spiritually, your tithes should go to that church.

  1. அன்பு சகோதரர் விசாகன் அவர்களுக்கு, அடியேனுடைய தளத்துக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். தங்கள் கமெண்ட்டுக்கு நன்றி, தாங்கள் கட்டுரையை சரியாகப் படிக்கவில்லை என்பது சற்று வருத்தமளிக்கிறது. ஏனனில் தாங்கள் எழுப்பிய கருத்துக்கள் எல்லாவற்றிற்க்கும் கட்டுரையிலேயே தெளிவான விளக்கம் இருக்கிறது. மல்கியா 3 ஆம் அதிகாரத்தை திரும்பத்திரும்ப வாசித்துப் பார்த்தேன் எங்குமே சபைக்கு தசமபாகம் கொடுக்கவேண்டும் என்று காணப்படவில்லை. தாங்கள் எந்த மொழிபெயற்ப்பிலிருந்து எடுத்து அந்தக் கருத்தைச் சொல்லுகிறீர்கள் என்று அறிந்துகொள்ளலாமா? எனக்குத் தெரிந்தவரையில் தமிழில் “பண்டகசாலை” என்றும் ஆங்கில மொழிபெயற்ப்புகளில் ”Storehouse” என்றுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

   கடவுள் பெயரைச் சொல்லி ஒருவரிடம் ஆசைகாட்டியோ அல்லது சாபம்வரும் என்று மிரட்டியோ பணம் வாங்குவது ஆன்மீகக் குற்றம் மாத்திரமல்ல. சட்டப்படியும் அது குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் சட்டப்படி தண்டணையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

 6. Dear Brother,
  Greeting to you in the name of our LORD & SAVIOUR JESUS CHRIST. The dialouge was so true & biblical.In today’s Christian Church, monetary & worldly blessings are projected as being directly proportional to obeying the Shephard ( i.e., the Pastor) & people who are poor are lead to believe that they lack something in their Spiriyual life & obediance to the doctrine. This is an eye opener to all.It would encourage all to support the Missionaries( where the real work is being done) & help the poor & needy and stop promoting & pampering the luxurious living of today’s Pastors.

 7. Dear Brother Vijay, I accept but !
  In our bible is one of the short message from god but it is full fill all men understand words it is a sprit words, many more words from god not printed, it is not possible, it has printed means we can’t take our hand so your drama script is true from bible but not tell date & time full picture we can’t answer .
  Tithe do not ask compulsory, whoever read the bible they know it is not compulsory but, whoever giving the tithe to church they only paid to god, god only seen their heart and their scarifies, god did blessing more to that persons, proofed their life it is blessed, Paul leave his all property and take ministry for Jesus, whoever not giving 10% in their salary(only well persons means 3 times taking enough food) how they scarify the life to Jesus.
  I feel wealth is good means I give to tithe to church, it is help to send the gospel message in the world people (Give to Right Persons) Compared to Jesus all this things nothing.
  I am first giving only Rs.1, than Step by step god bless me now I give Rs. +_8000/-. So all believers give to tithe right persons God Will bless you, you stop means you can’t get, how you give the quantity That much only get.
  God Bless You,
  Glory to God in the name of Jesus.

 8. மிக மிக அருமை அதாவது இயேசுவை அறிந்து ஆவிக்குரிய ஆராதனை செய்யும் மக்கள் சொன்னாலும் சொல்லாவிட்டும் தசமபாகம் கொடுத்துகொண்டுதான் இருக்கிறார்கள் ஆகவே அதைமட்டுமே சபைகளிலே சொல்லிக்கொண்டே இருக்க தேவை இல்லை அதை விட்டு விட்டு மக்களை தேவனுடைய வருகைக்கு ஆயத்தம் செய்யும் சபைகள்தான் இன்று தேவை பரிசுத்தத்தை குறித்தும் பரிசுத்தமாய் எப்படி இருக்கவேண்டும் என்பதைகுரித்தும் யார் சொல்லுவார்கள் என்றுதான் இயேசுகிறிஸ்துவும் ஏங்கி கொண்டிருக்கிறார் ஏனென்றால் இயேசுகிறிஸ்து வருகை மிக மிக சமீபம் இந்த கட்டுரையை குறித்து ரெம்ப சந்தோசமா இருக்கு அண்ணன் ………….

 9. அருமையான கட்டுரை. நாடக பாணியில் சொல்ல வந்த கருத்தை எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் சொல்லப்பட்டிருப்பது பாரட்டுக்குரியது. யோசிக்க வைக்கும் கட்டுரை. பெருக விதைப்பவன் பெருக அறுப்பான் என்கிறது எனவே கர்த்தரின் ஊழியத்திற்க்கு என அதிமாக கொடுப்பது தவறல்ல. சபைக்கு மட்டும் தான் என்பதுதான் சற்று நெறுடலான விசயம். அநேக ஊழியர்கள் பணம் அதிகமாக வருவதினால் தங்கள் வாழ்க்கையை தாம் தூம் என பட்டோடமாக வாழ்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் கஷ்டத்தின் மத்தியில் ஊழியம் செய்பவர்களும் உண்டு. அவர்களுக்கு ஏழை எளிய விசுவாசிகள் தரும் இந்த தசமபாகம் தான் ஊழியத்திற்கு கைகொடுக்கிறது. எப்படியாயினும் தங்கள் கட்டுரை வேத வெளிச்சத்தில் எழுதப்பட்டிருப்பது பாரட்டுக்குரியது.

 10. Nehemiah 10:37 (New King James Version)
  37 to bring the firstfruits of our dough, our offerings, the fruit from all kinds of trees, the new wine and oil, to the priests, to the storerooms of the house of our God; and to bring the tithes of our land to the Levites, for the Levites should receive the tithes in all our farming communities.

  Most of the Tamil Christians in Canada do not farm. It does not mean they do not bring the tithes to the church. We need to interpret in context. Many times God has asked people to bring tithes ( Deu) . He said not to come empty handed. People can argue about tithes.

  Giving is part of the worship. It is not about your money , it is about your heart. A person loves God as his Father will give everything. A cheerful giver.

  Acts 5
  Lying to the Holy Spirit
  1 But a certain man named Ananias, with Sapphira his wife, sold a possession. 2 And he kept back part of the proceeds, his wife also being aware of it, and brought a certain part and laid it at the apostles’ feet. 3 But Peter said, “Ananias, why has Satan filled your heart to lie to the Holy Spirit and keep back part of the price of the land for yourself? 4 While it remained, was it not your own? And after it was sold, was it not in your own control? Why have you conceived this thing in your heart? You have not lied to men but to God.”

  Why do not sell all our possession and take it to Apostles. The Judge will say there is no Apostle anymore only pastors so do not take the proceeds. Again take this in context.

  I agree some pastors talk about this all the time. I seldom preach about this but God inspire people to give to the work of the Lord. Church has an important mandate to take the Gospel to the whole world and this can not be compared to the Old testament temple.

  Church need money not chicken. We broadcast 2, 15 minutes message every day to 300,000 Hindu Tamils who live in Canada and pay $4,000.00 (Rs 160,000 ) and Television Message every Sunday ( Rs.50,000 ) . Will they accept vegetables in lieu of cash.

  I think the writer of this article must do his work not do the pastor’s work. They do not understand how hard we work. I worked as an Auditor in Revenue Canada and my wife worked for provincial government both resigned our job. After working 17 years as pastors we do not even get the slary closer to what we were getting from the governments. We work double shift ( 16 hours) not of compulsion but out of inexpressible love for my Father.

  A person have no work write this and disturb God’s work. Many pastors I know in Canada work extremely hard. I am surprised to see this in Facebook.

  1. அன்புள்ள பாஸ்டர் டேவிட் அவர்களுக்கு, தங்கள் உணர்வையும் ஊழியத்தையும் மதிக்கிறேன். முதலாவதாக அடியேனுடைய தளத்துக்கு தங்கள் வருகைக்காகவும், கமெண்ட்டுகாகவும் எனது நன்றிகள்.

   தசமபாகம் லேவியருக்குக் கொடுக்கும்படி வேதம் சொல்லுகிற பகுதியை எங்களுக்குக் காட்டினீர்கள், பாஸ்டர்களை லேவியர் என்றும் சொல்லுகிறீர்கள். லேவியர் குறித்து தாங்கள் காட்டாமல் விட்ட வேதபகுதி ஒன்றை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம். இஸ்ரவேலர் கானானைச் சென்றடைந்த பிறகு மீதமுள்ள 11 கோத்திரத்துக்கும் கர்த்தர் சுதந்திர வீதங்களைப் பிரித்தார். லேவியருக்கு மாத்திரம் ஒரு பூமிக்குரிய சுதந்திரமும் இல்லை. கர்த்தர் சொன்னார் “நானே உனது சுதந்திரம்” என்று.

   லேவியருக்குரிய சுதந்தரமென்னவென்றால்: நானே அவர்கள் சுதந்தரம்; ஆகையால் இஸ்ரவேலில் அவர்களுக்குக் காணியாட்சியைக் கொடாதிருப்பீர்களாக; நான் அவர்கள் காணியாட்சி.(எசே 44:28)

   இன்று லேவியர் என்று தங்களைச் சொல்லி தசமபாகம் பெற்றுக் கொள்ளும் பாஸ்டர்கள் லேவியராக வாழவும் வேண்டும். அவர்கள் தசமபாக, காணிக்கைப் பணத்தில் அசையும் அசையாச் சொத்துக்களை தங்களுக்கென்று வாங்கிக் குவிப்பதேன்?

   புதிய ஏற்பாட்டு சபைக்கு தசமபாக நியமம் கொடுக்கப்படவில்லை ஆனால் சமநிலைப் பிரமாணம் கொடுக்கப்பட்டது [2 கொரி 8] ஆனால் இன்றைய பாஸ்டர்கள் சமநிலைப் பிரமாணத்தை இருட்டடிப்பு செய்துவிட்டு பழைய ஏற்பாட்டு தசமபாகத்தைப் போதிப்பது ஏன்? நீங்கள் எந்த உடன்படிக்கையின் கீழ் ஊழியம் செய்கிறீர்கள்? தங்கள் சபையின் வருமானம் ஏழை விசுவாசிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறதா?

   இந்துக்களில் 100க்கு கிட்டத்தட்ட 98 சதவிகிதம் பேர் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை. இதை நான் சொல்லவில்லை எல்லோருக்குமே தெரியும். கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை கிறிஸ்தவர்கள் மட்டுமே பார்க்கிறார்கள். பெரிய மாநகரங்களில் லட்சக் கணக்கான பணம் செலவழிக்கப்பட்டு நடக்கும் நற்செய்தி கூட்டங்களில் பெரும்பாலும் கலந்து கொள்பவர்கள் அனைவரும் விசுவாசிகளே! நம்மிடையே உணவுக்கும் பிள்ளைகள் படிப்புக்கும் பணமின்றி போராடும் விசுவாச சகோதர சகோதரிகள் பலர் இருக்கும் போது சமநிலை பிரமாணத்தின்படி அவர்களுக்கு பணம் பகிர்ந்து கொடுக்கப்படாமல். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் படோடோப நற்செய்திக் கூட்டங்களுக்கும் பணம் வீணடிக்கப்படுவதேன்?

   ஓநாய்களுக்குள்ளே ஆடுகளைப் போல சுவிசேஷம் அறிவிக்க நாம் அவிசுவாசிகளுடைய மத்தியில் அவர்கள் வாழ்க்கைக்குள்ளே கடந்து செல்லவேண்டும். அதுதான் தேவகட்டளை, தொலைக்காட்சி வழியே செய்கிறேன் என்பது குறுக்குவழி. அது எவ்விதத்தில் சரியாகும்? கிறிஸ்தவத் தொலைக்காட்சிகளைப் பார்ப்பது விசுவாசிகளே எனவே அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்குப் பயன்படும் நிகழ்ச்சிகளைத் தாருங்கள். தொலைக்காட்சியில் சுவிசேஷம் அறிவிப்பது போன்ற வீண்செலவு வேறு எதுவுமில்லை.

   ஜனங்கள் புதிய ஏற்பாட்டு காலத்தில் எல்லாவற்றையும் விற்று அப்போஸ்தலர் பாதத்தில் வைத்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது உண்மைதான்! ஆனால் அதைப் பெற்றுக்கொண்ட அப்போஸ்தலர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்தளித்துவிட்டு வெறுங்கையராய் அலைந்தார்கள். “வெள்ளியும் பொன்னும் எங்களிடத்தில் இல்லை” என்றான் பேதுரு அதுபோல இன்றைய பாஸ்டர்களால் சொல்ல முடியுமா? ஆதித்திருச்சபை விசுவாசிகளை மட்டும் இன்றைய விசுவாசிகளோடு ஒப்பிட்டு போதிப்பது ஏன்? ஆதித்திருச்சபை ஊழியர்களையும் உங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க மாட்டீர்களா?

   விசுவாசிகள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு அப்போஸ்தலர் பாதத்தில் வைக்க வேண்டும் என்பது தேவ கட்டளை அல்ல அவர்கள் அன்பின் மிகுதியால் அப்படி செய்தார்கள் ஆகவேதான் அங்கு எழுப்புதல் அக்கினி கொட்டப்பட்டது. சமநிலைப் பிரமாணமே விசுவாசிகளுக்கு தேவன் தந்த கட்டளையாகும். இதுபற்றி என்னுடைய “கப்பல் கவிழ்ந்த கதை” என்ற கட்டுரையில் எழுதியிருக்கிறேன் தயவு செய்து வாசித்துப் பாருங்கள். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக! வரவுக்கும் கமெண்டுக்கும் மீண்டும் எனது நன்றிகள்.

 11. [[தொலைக்காட்சியில் சுவிசேஷம் அறிவிப்பது போன்ற வீண்செலவு வேறு எதுவுமில்லை]]

  I disagree! பிற மதத்தவர் பார்த்து இரட்சிக்கப்பட்டதே இல்லை என்று உங்களுக்கு தெரியுமா? தொலைக்காட்சி ஊழியத்தை பெருமைக்காக செய்யாமல், ஆண்டவர் சொல்லி, அவர் சித்தப்படி செய்தால், தேவைகளும் சந்திக்கப்படும். ஆத்துமாக்களும் ஆதாயப்படுத்தப்படுவார்கள்.

 12. Dear Bro.Vijay.,

  Since ur not a pastor , the message what u r saying is really wonderful.., It will open many people’s eyes who give blindly to the wealthy pastors and their ministries .. God Bless ur holy service…..
  But at the same time do not blame the Entire television ministry…,
  The duty of the Shepherd(Pastor) is not only adding new sheep (believers) also watching (keeping faith among saved souls) the existing sheep carefully..,

  If u really want to help us please mention those ministries who r sucking innocent people’s blood in the name of tithe …… God will be with u ., do not afraid of anyone….

  Let the Holy Spirit will give u strength to continue this service….

 13. மிகவும் அருமையான கருத்துக் கொண்ட தற்போதைய கிறிஸ்தவத்தின் நிலையை எடுத்துக் கூறியதற்காக நன்றி…

 14. dear brother vijay,i accept what u say about today’s situation of our churches..But i am scared if people will start thinking of giving to God after reading this article..

  1. Dear Sister Sheba, Im not opposing any willful offering. This article is about asking forcefully by preaching about blessings and threatening about curses.

   Regarding giving to God please search the New Testament for whom and what reason the offering was collected in the Early Church? Did they collect money to build some sanctuaries? or to run some colorful gospel events? God actually doesnt need our money but poor saints(co-believers) of God among us needs our support for food, clothing, Shelter and for their kids education.

 15. Dear brother in CHRIST. Greetings to you in HIS matchless name. I was longing for this kind of messeges to be shared to the people. I also share such kind of messeges while preaching. My heart is burning when i see people are deceived. my heart is really bubbling with JOY when I read eye opening messeges like this. The need of the hour is more. let us do moooooore. May God bless your ministry abundantly.

 16. திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும்

 17. ரோட்டில் ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் நண்பருடன் செல்கிறீர்கள் நீங்கள் அவனுக்கு உதவி செய்கிறீர்கள் ஆனால் உங்கள் நண்பர் உதவி செய்யவில்லை. பிச்சை எடுப்பது தவறு என்று அவர் நினைக்கிறார். உதவி செய்யவில்லை என்பதற்காக அவர் குற்றவாளி இல்லை. உதவி செய்ததால் நீங்கள் நல்லவரும் இல்லை.சிலர் பிச்சை கொடுபதில்லை என்பதற்காக பிச்சைக்காரன் பிச்சை எடுப்பதை விட போவதில்லை .பைபிளில் இருந்து விளக்கம் கொடுபதாக நினைத்துகொண்டு தவறாக வழி காட்டாதீர்கள்.பைபிளில் உள்ள கட்டளைகளை உள்ளது உள்ள படி நாம் செய்ய வேண்டும்.மற்ற காரியங்களை உணர்வு பூர்வமாக கையாள வேண்டும்…

 18. very good article and has covered all aspects. For a person who earns 30,000 giving 3,000 will not be a big issue but for a person who earns only 3,000 Tithing will be difficult. Compelling that person to tithe is against the new testament teaching of Cheerful giving.

  1. any person can test our almighty god by giving offering more than 10%.mostly i come across person with incomes on the lower side
   only giving higher proportions.giving to church is must.god will judge the church leaders. we can not make any comment on seeing just the outward or
   immediate consequence. god’s direction to the church leaders are not always in a revealed state.god’s will can neither be questioned nor comprehensible.always run from the influence of sin or sinner’s advices.

 19. what yardstick should one follow to maintain the present day church.mostly i could see pompous life among the church leaders.the physical presence of the church organisers within the church other than the church worship timing is very very rare.an unknown person who is willng to know truths about our almighty god is helpless whenever they peep into our vast church premises in the main road other than the exact church worship time which runs a few hours in the whole week.the verses may be played from an audio bible in the verandah of the churches in low volume in local languages in one side and in english in another side.gospel must reach all.time is short.
  god bless you.

Leave a Reply