நாம் கிருபையைக் குறித்த அறிவிலும், விசுவாசத்திலும் வளரும்போது ஜெபத்தைக் குறித்து மதம் நமக்கு கற்றுக்கொடுத்திருந்த பல்வேறு தவறான கருத்துக்கள் உடைந்துபோகும் என்பதில் துளியும் ஐயமில்லை. ஆனால் ஜெபத்துக்கான முக்கியத்துவம் என்பது ஒருநாளும் குறையவே குறையாது.
“இயேசு ஜெபித்தார்” என்று புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் சொல்லப்பட்டிருப்பதே ஜெபத்தின் முக்கியத்துவத்தை தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிறுத்தப் போதுமானது. நமது வாழ்வில் ஜெபத்துக்கான முக்கியத்துவம் குறைந்தால் அதற்கு கிருபையைக் குறித்த அறிவில் வளருவதோ, அல்லது விசுவாசம் பெருகுவதோ காரணமாக இருக்க முடியாது. அவிசுவாசமோ அல்லது சோம்பேறித்தனமோதான் காரணமாக இருக்கமுடியும்.