சுனாமி அலைகள் அடங்குவதற்கு முன்…


ஜப்பானின் கடலோரப் பகுதிகளில் சிலவற்றை வாரிக்கொண்டு போன சுனாமி ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் இன்னும் நம் மனதை விட்டு அகலவில்லை. கடந்த 2004 சுனாமியின் போது அதிகமான வீடியோக்கள் எடுக்கப்படவில்லை ஆனால் இந்தமுறை வீடியோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து குலைநடுங்க வைக்கின்றன. நியூசிலாந்தில் கிரைஸ்ட்சர்ச் நகரை பூகம்பம் பதம் பார்த்த அதிர்ச்சி அடங்குவதற்க்குள் வரலாறு காணாத இன்னொரு பேரழிவு. எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போல அணுக்கதிர் கசிவு, சூப்பர் மூன் போன்ற பயங்கரங்கள் அடுக்கடுக்காக வந்து பயமுறுத்துகின்றன. அடுத்து என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற பயமும் திகிலும் முற்றிலும் கடலால் சூழப்பட்ட சின்னஞ்சிறு தீவில் வாழும் என்னைச் சுற்றியுள்ளவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிகிறது. “பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்” என்ற லூக்கா 21:26 நிறைவேறுவது போல ஒரு பிரமை உண்டாகிறது.

சொல்லிவைத்தாற்போல நான் உள்ளிட்ட எல்லா விசுவாசிகளுடைய பேச்சு, தியானம், பேஸ்புக்கில் குறுஞ்செய்தி எல்லாம் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்தே இருக்கிறது. அழிவைக் குறித்த திகிலும், வருகையைக் குறித்த தியானங்களும் இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. ஏனெனில் சாத்தானின் மாபெரும் போராயுதமான “சகஜ வாழ்க்கை” என்ற ஆவிக்குரிய ஆபத்து விரைவில் திரும்ப இருக்கிறது. அது வரவேண்டும்தான், கர்த்தர் இரக்கமும் மனதுருக்கமும் உள்ளவராயிற்றே! நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே என்று ஏசாயா 57:16  சொல்லுகிறது.


நான் சில ஆண்டுகளுக்கு முன்பாகப் படித்த சுஜாதாவின் ஒரு நாவல் என் நினைவுக்கு வருகிறது (இது நான் “சகஜ வாழ்க்கையில் (!)” இருந்தபோது படித்தது). அந்த நாவலில் வேற்றுக்கிரக வாசிகள் பூமியை அழிப்பதற்க்கு ஒரு மிகப்பெரிய அழிவுக் கதிர்வீச்சை வானத்திலிருந்து அனுப்புவார்கள். அது ஒரு குறிப்பிட்ட நாளில் பூமியைத் தாக்கி ஒரே நொடியில் எல்லாவற்றையும் பஸ்பமாக்கிவிடும். அந்தக் குறிப்பிட்ட நாள் நெருங்க நெருங்க மனித இதயம் படும்பாட்டை கதாசிரியர் அழகாக விளக்கியிருப்பார். கோவில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் கூட்டம் அலைமோதும். பலர் தங்கள் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு தாரை வார்ப்பார்கள். உலகமே தலைகீழாக மாறிவிடும். ஆனால் அந்த குறிப்பிட்ட நாளில் அந்தக் கதிர்வீச்சு பூமியை நெருங்கி ஆனால் மறுபடியும் எடுத்துக்கொள்ளப்படும். வேற்றுக்கிரகவாசிகள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டதாகவும் பூமியை அழிக்கப் போவதில்லை என்றும் அறிவித்து விடுவார்கள். அழிவுபயம் நீங்கி எல்லாம் சகஜ நிலை திரும்பிவிடும். இதைச் சொல்லிவிட்டு ஆசிரியர் ஒரு அழகான, அர்த்தமுள்ள வரியுடன் நாவலை முடித்திருப்பார். “இப்போது பூமியில் அனைவரும் தங்கள் தங்கள் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்”.

சாத்தான் நம்மை “சகஜ வாழ்க்கை” என்ற தொட்டிலில் போட்டு தாலாட்டுப்பாடி மறுபடியும் தூங்கவைப்பதற்க்கு முன்னால் சூட்டோடு சூடாக சில காரியங்களை சொல்லிவைப்பது அவசர அவசியமாயிருக்கிறது. இயற்கைப் பேரழிவுகள் தேவ நியாயத்தீர்ப்புதான் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 2004 சுனாமி வந்தபோது இந்தோனேஷியாவின் கடலோரப்பகுதிகளில் நிறைய விபச்சார விடுதிகள் இருந்தன அப்பகுதியில் அக்கிரமம் மிகுந்திருந்தது அதனால்தான் அதை தேவன் அழித்துவிட்டார் என்றெல்லாம் நீதியே உருவான பல விசுவாசிகளும் ஊழியக்காரர்களும் சொன்னார்கள்.  அவர்கள் இன்று ஜப்பானைக் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்? ஜப்பானுக்குச் சென்று வந்த எனது நெருங்கிய நண்பர்கள் சிலர் ஜப்பானியர்களின் குணாதிசயங்களைக் குறித்து சிலாகித்துச் சொன்னபோது ஒரு விசுவாசியாக நான் வெட்கித் தலைகுனிந்தேன். நான் எவ்வளவு காரியங்களில் மாற வேண்டியிருக்கிறது!!

ஜப்பானியர்கள் இயேசுவை அறியாதவர்கள்தான் ஆனால் அவர்கள் பண்புகளை ஒப்பிட்டால் நாமெல்லாம் அவர்கள் பக்கத்தில் கூட நிற்க முடியாது. அவர்கள் விருந்தோம்பலில் அவ்வளவு சிறந்தவர்களாம்! நீங்கள் போய் ஒரு இடத்துக்கு வழி கேட்டால் அவர்கள் தங்கள் சொந்த வேலையைக் கூட விட்டுவிட்டு அந்த இடம் வரை உங்களைப் பத்திரமாக க் கொண்டுபோய் விட்டுவிட்டுத்தான் வருவார்களாம். ஜப்பானியர்களின் பணிவு அவர்கள் போடும் வணக்கத்திலேயே தெரிந்துவிடும். கடின உழைப்பாளிகள், தொழிலில் நேர்மையாளர்கள், ஜப்பான் தயாரிப்புகளை நம்பி வாங்கலாம். அவர்களது தராசும் நிறைக்கல்லும் சுமத்திரையானது. நான் சிங்கப்பூர் வந்த புதிதில் இங்குள்ள நண்பர் ஒருவர் ஜப்பானியப் பெண்களைக் குறித்துச் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. ஜப்பானியப் பெண்ணை மணம்புரிபவன் கொடுத்து வைத்தவன் என்றார். காரணம் என்னவென்றால் கணவனையும் பிள்ளைகளையும் மாத்திரம் அல்ல, தங்கள் மாமனார், மாமியாருக்கும் பணிவிடை செய்வதிலும் அவர்களைப் பராமரிப்பதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே! (விசுவாச சகோதரிகள் கவனிக்கவும்!). இப்படிப்பட்ட தேசத்தில் ஒரு பேரழிவு வரக்காரணம் என்ன? மனிதன் பார்க்கிற விதமாய் தேவன் பார்ப்பதில்லை என்பது புலனாகிறதல்லவா? இயற்கைச் சீற்றத்தில் அழிகிற மக்களைப் பாவிகள் என்று முத்திரை குத்துவது இன்றல்ல நேற்றல்ல ஆண்டவராகிய இயேசுவின் காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. அதனால்தான் இயேசு இதைக் குறித்து தெளிவாகச் சொன்னார்:

“சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார். (லூக்கா 13:4,5)

இது பேரழிவுகளில் மரணிக்கும் மக்களைக் குறித்து யாரும் கண்களை மூடிக்கொண்டு தீர்ப்பு சொல்லாதபடிக்கு ஆண்டவர் கொடுத்திருக்கும் எச்சரிக்கை. இந்த நிமிடம் நாம் ஜீவித்திருப்பது அவரது சுத்தக் கிருபை. பாவம் செய்பவர்களை சங்கரிப்பதானால் நியாயத்தீர்ப்பு துவங்கும் முதல் இடம் திருச்சபையே! நியாயத்தீர்ப்பு விஷயத்தில் கர்த்தர் தயவு தாட்சணியம் பார்ப்பவரல்ல.

கர்த்தர் சங்கார தூதனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும், முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள் என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம்பண்ணினார்கள். ” (எசே 9:4-7)

“நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?” (1 பேதுரு 4:17)

இயேசு வரப்போகிறார் என்று உலகத்தாருக்கு உரக்கக் கூறும் நாம் அவரைச் சந்திக்க ஆயத்தமாயிருக்கிறோமா?ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள் (வெளி 22:17), அப்போஸ்தலனான யோவானும்கூட பத்மு தீவில் கிறிஸ்துவுக்காகப் பாடு அனுபவித்தவனாக “ஆம், கர்த்தராகிய இயேசுவே வாரும்!” என்றான் (வெளி 22 :20). இதே வார்த்தையை  அதே நம்பிக்கையோடு நாமும் சொல்ல முடியுமா? வரப்போகிறவர் இனி ஆத்தும நேசராக வரப்போவதில்லை அக்கினி ஜுவாலை போன்ற பற்றி எரியும் கண்களுடன் ஆயிரமாயிரம் தூதர்களோடு  நியாயாதிபதியாக வரப்போகிறார். கோதுமையையும் பதரையும், செம்மறியாட்டையும் வெள்ளாட்டையும் பிரிக்கப் போகிறார். அவர் வரப்போகிறார் என்ற செய்தி கிறிஸ்தவர்களில் பலருக்கு நல்ல செய்தி அல்ல. துர்ச்செய்திகளுக்கெல்லாம் துர்ச்செய்தி!

கொடூர பாவிகளுக்கே நியாயத்தீர்ப்பென்றால் அது நமக்கு அருகிலல்ல நமது உச்சந்தலையில் மத்தியில் இறங்குவதற்கான சகலதகுதியும் நமக்கு இருக்கிறது. எதைக் குரூர பாவம் என்பீர்கள் கொலையையா? விபச்சாரத்தையா? ஓரினச் சேர்க்கையையா?

வேதத்திலுள்ள தேசங்களிலேயே எது பிரதானப் பாவிகளின் தேசம்? அக்கினியும் கந்தகமும் அழித்துப் போட்ட சோதோமா? இல்லை இல்லை. சோதோமின் பாவத்தையே அற்பம் என்று சொல்லவைத்த மாபாவிகளின் தேசமொன்று உண்டு. அது என்ன மோவாபா? பாபிலோனா? இல்லை இல்லை அது வேறு யாருமல்ல சாட்சாத் இஸ்ரவேல்தான். அந்த தேசத்தின் பாவம் என்ன? அதைக் கர்த்தரே சொல்லக் கேளுங்கள்: இதோ கர்த்தர் இஸ்ரவேலின் கதையைச் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 16:

கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமுக்குச் சொல்லுகிறார், கானான் தேசமே உன் உற்பத்திக்கும் உன் பிறப்புக்கும் இடம், உன் தகப்பன் எமோரியன், உன் தாய் ஏத்தித்தி.   உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால், நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை.

உனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றையாகிலும் உனக்குச் செய்ய ஒரு கண்ணும் உன்பேரில் இரக்கமாயிருந்ததுமில்லை; நீ பிறந்தநாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய். நான் உன் அருகே கடந்துபோகும் போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப்பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப்பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன்.

உன்னை வயலின் பயிரைப்போல அநேகமாயிரமாய்ப் பெருகும்படி வைத்தேன்; நீ வளர்ந்து பெரியவளாகி, மகா சௌந்தரியவதியானாய்… நான் உன் அருகே கடந்துபோன போது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.

நான் உன்னை ஜலத்தினால் முழுக்காட்டி, உன்னை இரத்தமற ஸ்நானம் பண்ணுவித்து, உனக்கு எண்ணெய் பூசி,சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சைகளை உனக்குத் தரித்து, கட்ட மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச் சால்வையையும் உனக்குக் கொடுத்து, உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு, உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன்.

இவ்விதமாய்ப் பொன்னினாலும் வெள்ளியினாலும் நீ அலங்கரிக்கப்பட்டாய்; உன் உடுப்பு மெல்லிய புடவையும் பட்டும் சித்திரத்தையலாடையுமாயிருந்தது; மெல்லிய மாவையும் தேனையும் நெய்யையும் சாப்பிட்டாய்; நீ மிகவும் அழகுள்ளவளாகி, ராஜ்யத்தைச் சுதந்தரிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றாய்.உன் அழகினாலே உன் கீர்த்தி புற ஜாதிகளுக்குள்ளே பிரசித்தமாயிற்று; நான் உன்மேல் வைத்த என் மகிமையினாலே அது குறைவற்றதாய் இருந்ததென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

நீயோவென்றால் உன் அழகை நம்பி, உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து, வழிப்போக்கரில் உனக்கு நேர்பட்ட யாவரோடும் வேசித்தனம்பண்ணி, உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச் ஜோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்;  அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்பவிப்பதுமில்லை….

நீ, தன் புருஷனையும் தன் பிள்ளைகளையும் அருவருத்த உன் தாயின் மகள்; நீ, தங்கள் புருஷரையும் தங்கள் பிள்ளைகளையும் அருவருத்த உன் சகோதரிகளின் சகோதரி; உங்கள் தாய் ஏத்தித்தி; உங்கள் தகப்பன் எமோரியன்.உன் இடதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சமாரியா உன் தமக்கை; உன் வலதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சோதோம் உன் தங்கை.

ஆகிலும் நீ அவர்களுடைய மார்க்கங்களிலே நடவாமலும், அவர்களுடைய அருவருப்புகளின்படி செய்யாமலும், அது மகா அற்பகாரியம் என்கிறதுபோல நீ உன் எல்லா வழிகளிலேயும் அவர்களைப் பார்க்கிலும் கேடாய் நடந்தாய். நீயும் உன் குமாரத்திகளும் செய்தது போல, உன் சகோதரியாகிய சோதோமும் அவளுடைய குமாரத்திகளும் செய்யவில்லை என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

ஐயோ! இந்த இஸ்ரவேல் செய்த பாவம் என்ன? கர்த்தர் நிர்பாக்கியமாய்க் கிடந்த அவளை மீட்டு தனக்கென்று உரிமையாக்கி மணவாட்டியாக நியமித்து அவளை ஆசீர்வதித்து வைத்திருக்கும்போது அவள் அவருக்கு துரோகம் செய்து தன் இஷ்டப்படி வாழ்ந்ததே! மிக ஜாக்கிரதையாக  (எனக்கும் சேர்த்தே) இந்த வார்த்தைகளை சொல்லுகிறேன். தயவு செய்து கவனமாகக் கேளுங்கள்! ஒரு விசுவாசி செய்யும் உச்சக்கட்ட பாவம் தேவனோடு உள்ள தனது உடன்படிக்கையை முறித்து தனது இஷ்டப்படி வாழ்வதே! பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டுக்கு நிழலாட்டமாக இருக்கிறது.

நம்மையும் கர்த்தர் தனது இரத்தம் சிந்தி ஜீவனைக் கொடுத்து உளையான பாவச்சேற்றிலிருந்து தூக்கி, இரட்சிப்பின் வஸ்திரத்தை தரிப்பித்து ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கி எல்லாவற்றிற்கும் மேல் நம்மை அவரது பரிசுத்த மணவாட்டியாகவும் நியமித்துக் கொண்டாரே! மேற்சொன்ன இஸ்ரவேலின் கதைக்கும் நமக்கும் எவ்வளவு ஒற்றுமை பாருங்கள்!! இஸ்ரவேல் அன்று செய்ததையே நாம் இன்று செய்கிறோம். உலகத்தால் கறைப்படாதபடி நம்மைக் காத்துக் கொண்டிருக்கிறோமா? உலகப்பொருளை அசட்டைபண்ணி கர்த்தரை சேவிக்கிறோமா?இயேசு வரப்போகிறாராம் அவரை முகமுகமாகச் சந்திக்க ஆயத்தமா?

அவர் கறைதிரையற்ற மணவாட்டியை அழைத்துக்கொள்ள வருகிறார்! நாம் எப்படி? அவரை முகமுகமாகச் சந்திக்க ஆயத்தமா?

ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான் என்று நீதிமொழிகள் 6:34 சொல்லுகிறது. அவரை முகமுகமாகச் சந்திக்க ஆயத்தமா?

நமக்கு முன்னாக உள்ள ஒரே வழி என்ன?

குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். (சங் 2:12). நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1யோவா 1:9)

அதற்குப் பின்பு பரிசுத்த தைரியத்தோடும் விசுவாசத்தோடும் சொல்லலாம் “கர்த்தராகிய இயேசுவே வாரும்!”


21 thoughts on “சுனாமி அலைகள் அடங்குவதற்கு முன்…”

 1. அருமை சகோதரா !!!!!!!!!!!!!!

  மிக அருமை .. மற்ற ஊழியக்காரர்கள் இதை வைத்து எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று யோசிக்கையில் தங்களின் பதிவு மிகத்தெளிவு ………

  தொடரட்டும் உமது பணி

 2. i defer brother: as in the last days earthquakes / calamities will come. But you’ve not clarified clearly. Jesus did not send it. It’s the devil for the limited time brings forth destruction as spelt in John 10:10

  1. அன்பு சகோதரி ரெபேக்கா அவர்களுக்கு, வேதத்தில் சில இடங்களில் பிசாசு அழிவைக் கொண்டு வந்ததாகவும் சில இடங்களில் தேவனே நியாயந்தீர்த்ததாகவும் வாசிக்கிறோம். எந்த அழிவும் வரும்போது யாரிடத்திலிருந்து, எங்கிருந்து வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு வருவதில்லை. ஆனால் எதுவும் தேவனுக்குத் தெரியாமல் நடப்பதில்லை. எனவே அழிவு யார் கையிலிருந்து வந்தது என்ற விவாதத்துக்கு பதிலே கிடைக்காது. கர்த்தர் நியாயந்தீர்க்கிறவர் மட்டுமல்ல அவர் காயங்கட்டுகிறவரும் கூட. நாம் பாதிக்கப்பட்டவர்களோடு சேர்ந்து கண்ணீர் வடிப்போம், அவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வோம். அவர்களுக்காக ஜெபிப்போம். இனி வரப்போகும் அழிவுகளைத் தடுக்க திறப்பிலே நின்று மன்றாடுவோம்.

 3. //ஏனெனில் சாத்தானின் மாபெரும் போராயுதமான “சகஜ வாழ்க்கை” என்ற ஆவிக்குரிய ஆபத்து விரைவில் திரும்ப இருக்கிறது. //

  உண்மைதான். உலகம் உணர்வுள்ள இருதயத்தை கொன்று விடுகிறது.

  //அவர்கள் இன்று ஜப்பானைக் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்?//

  ஜப்பானின் பெருமை தகர்ந்தது?

  அல்லது , அறிவியலும் தொழில் நுட்பமும் தான் மனிதனின் தெய்வம் என்ற நம்பிக்கை தகர்ந்தது?

  May be this will pull them towards the true God.

  I saw this and I think this is very true:

  “THESE ARE THE BEGINNING OF SORROWS”

  March 13, evening, 2011

  “All these are the beginning of sorrows. Then they will deliver you up
  to tribulation and kill you, and you will be hated by all nations for
  My name’s sake.” Matthew 24:8-9

  I was watching a newscast of the tsunami damage in Japan, and the Lord
  spoke to me three times:

  “These are the beginning of sorrows, these are the beginning of
  sorrows, these are the beginning of sorrows. For I have been trying to
  get the attention of people throughout the globe. Who is going to
  listen? Who will know that these indeed are the days that have been
  prophesied by those prophets that have been given my mandate to speak
  unto this generation?

  These are the days that many have speculated about. Are you going to
  trust me now? Are you going to put your faith in me now? In the
  coming months great catastrophes will be seen. You have watched as
  the great tsunami and earthquake has struck Japan. But what of those
  places where you think you are secure?

  Many think that a time of great tribulation is a time that is far off
  in the future. Many do not realize that this is that last generation
  that I have spoken of. Are you not aware of the five wise and the
  five foolish virgins that I have spoken of in my word? Do you have
  your oil in your lamps? Are your lamps trimmed and ready? For I tell
  you, you have entered into that time frame. It’s really up to you to
  be ready or not. I would never force my children to do something. And
  everything though it seems like it is harsh, has really been done in
  love. For my love in unrelenting. And it is true that many perish in
  the world around you, but all is being used to bring about the end of
  all things. ”

  Stephen Hanson

 4. //ஜப்பானியப் பெண்ணை மணம்புரிபவன் கொடுத்து வைத்தவன் என்றார். காரணம் என்னவென்றால் கணவனையும் பிள்ளைகளையும் மாத்திரம் அல்ல, தங்கள் மாமனார், மாமியாருக்கும் பணிவிடை செய்வதிலும் அவர்களைப் பராமரிப்பதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே! (விசுவாச சகோதரிகள் கவனிக்கவும்!). //

  நல்ல பிரியாணியின் நடுவில் கல் வருவது போல், நல்ல ஆவிக்குரிய கட்டுரையின் நடுவில் இது போன்ற இடித்துரைத்தல் எதற்கு சகோ. விஜய் ? தன் சொந்த தாய் தகப்பனை பேணும் கடமையை கூட தான் செய்ய மனமில்லாமல் , தன் மனைவி தலையில் கட்டுவது, கிறிஸ்தவ ஆண்களின் சுய நலமே அன்றி வேறென்ன ? பராமரித்து போஷித்து நல்ல சேவகனாய் இருந்து காப்பாற்றும் கடமை ஆண்களுக்குரியது, வேதத்தின்படி.

 5. //”ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான் என்று நீதிமொழிகள் 6:34 சொல்லுகிறது. அவரை முகமுகமாகச் சந்திக்க ஆயத்தமா//

  இந்தவசனத்தை சரியான கோணத்தில் அறிந்துகொண்டேன். எனக்குள் மீண்டும் உணர்வைப்புதுப்பிக்கும் இந்தக்கட்டுரைக்காக நன்றி.

  தேவனுக்கே மகிமை.

 6. Matthew 24:8

  Beginning of Sorrows is also translated as beginning of birth pains.

  I received this in mail.

  Ring of Fire and Birth Pains are linked.

  —————–

  Ring of Fire Joseph Herrin (03-14-2011)

  The Ring of Fire describes a geographic area where 75% of the
  earth’s volcanoes, and 90% of the earths earthquakes occur.

  The earthquake in Christchurch, New Zealand which occurred on February
  22, 2011, and the massive 9.0 magnitude quake that occurred in Japan on
  March 11 were both located on the Ring of Fire. The Spirit of Christ has
  led me to a growing understanding of these events by directing me to
  focus on the phrase “Ring of Fire.”

  As I considered these events, in my mind were the words “birth
  pains.” The Spirit of Christ has shown me that these events are
  related to birth pains.

  Mark 13:8 “For nation will rise up against nation, and kingdom against
  kingdom; there will be earthquakes in various places; there will also be
  famines. These things are merely the beginning of birth pangs.”

  Romans 8:19-22 For the earnest expectation of the creation eagerly waits
  for the revealing of the sons of God. For the creation was subjected to
  futility, not willingly, but because of Him who subjected it in hope;
  because the creation itself also will be delivered from the bondage of
  corruption into the glorious liberty of the children of God. For we know
  that the whole creation groans and labors with birth pangs together
  until now.

  In my spirit I sensed a prompting to do an Internet search on the words
  “birth pains” and “ring of fire.” When I did, the Spirit
  confirmed what I had been sensing.

  ****** the term ring of fire, it seems, is associated with childbirth. I’m deleting that portion. Pl. refer the internet *******

  Everything that occurs in nature is according to the design of Yahweh.
  That women experience pain in childbirth is by design. In the third
  chapter of Genesis we read that pain in childbearing is a part of the
  curse brought upon the creation when Adam and Eve sinned.

  Genesis 3:16 To the woman He said: “I will greatly multiply your sorrow
  and your conception; In pain you shall bring forth children; Your desire
  shall be for your husband, and he shall rule over you.”

  In other writings I have shared the parable that is contained in these
  words. Yahweh did not choose this experience for the woman arbitrarily.
  It was intended to reveal through the natural realm some deep spiritual
  truths. Yahweh’s desire from the beginning of the creation has been
  to have sons in His image and likeness. When mankind sinned, the plan of
  God did not change. However, it became necessary for mankind to
  experience pain in order to arrive at conformity to the image of Christ.

  In these words to the woman in Genesis 3:16 we find a grand parable. Eve
  was the wife of the first man, whose name is Adam. The church is the
  wife of the Last Adam, who is Yeshua the Messiah.

  I Corinthians 15:45-48 And so it is written, “The first man Adam became
  a living being.” The last Adam became a life-giving spirit. However, the
  spiritual is not first, but the natural, and afterward the spiritual.
  The first man was of the earth, made of dust; the second Man is the Lord
  from heaven. As was the man of dust, so also are those who are made of
  dust; and as is the heavenly Man, so also are those who are heavenly.

  Eve was told that she would only be able to bring forth children through
  pain. In a direct parallel, the church can only bring forth sons in
  Christ’s image through pain.

  Matthew 10:38-39 “He who does not take his cross and follow after Me
  is not worthy of Me. He who finds his life will lose it, and he who
  loses his life for My sake will find it.”

  Philippians 1:29 For to you it has been granted on behalf of Christ, not
  only to believe in Him, but also to suffer for His sake…

  Romans 8:16-17 The Spirit Himself bears witness with our spirit that we
  are children of God, and if children, then heirs – of God and joint
  heirs with Christ, if indeed we suffer with Him, that we may also be
  glorified together.

  People of God, the ministers of ease and prosperity do not proclaim
  truth. They tell no one that there is an “afflicted path that leads
  to life, and few there are who find it.” The church continually
  receives the lie that Christ suffered so that they would not have to do
  so. Such a message is appealing to the flesh and soul of man, but it is
  a false message. Christ proclaimed the message that all who would follow
  in His steps must also embrace pain, and sorrow and suffering. Such
  things are necessary in order to bring forth sons in the image of God.
  There is a cross appointed to ALL who would be a disciple of Christ.

  There is a ring of fire that ALL sons must pass through in order to be
  revealed.

  I Peter 4:12-13 Beloved, do not think it strange concerning the fiery
  trial which is to try you, as though some strange thing happened to you;
  but rejoice to the extent that you partake of Christ’s sufferings, that
  when His glory is revealed, you may also be glad with exceeding joy.

 7. I agree brother, but it is vital to know Good comes from God and bad comes from Devil. else our understanding will be wrong. Iam not picking some scriptures but the whole Bible is a big Indicative of God and Jesus came to give life and life more abundandly

  1. சிந்திக்க – நோவா காலத்து வெள்ளம் யார் அனுப்பியது? சோதோம் கொமோரா பட்டணத்தை யார் அழித்தது?

 8. //இயேசு வரப்போகிறார் என்று உலகத்தாருக்கு உரக்கக் கூறும் நாம் அவரைச் சந்திக்க ஆயத்தமாயிருக்கிறோமா?//

  Very True !

 9. Rabecca :
  I agree brother, but it is vital to know Good comes from God and bad comes from Devil. else our understanding will be wrong. Iam not picking some scriptures but the whole Bible is a big Indicative of God and Jesus came to give life and life more abundandly

  இது “New age” எனும் புதுயுக நம்பிக்கையாளரின் கருத்தாகும்.

 10. and that shows you are not balanced too and you want to make a big of yourself. can you eloborate on standing in the gap. இனி வரப்போகும் அழிவுகளைத் தடுக்க திறப்பிலே நின்று மன்றாடுவோம்.??????????? please dont bluff. New age is too different.

  1. அன்பு சகோதரி! சகோ.சில்சாம் எழுதிய கருத்துக்களை எழுதியது யார் என்று பார்க்காமல் நான் எழுதியதாக நினைத்து என்னை குற்றம்சாட்டியிருக்கிறீர்கள். இதே போல கவனக்குறைவாக வேதத்தையும் படிப்பதனால்தான் பல தவறான உபதேசங்களில் மாட்டிக்கொள்ளுகிறோம். தவிரவும் தேவனிடத்தில் நன்மை மாத்திரமே வரும் என்று அவரது ஒரே ஒரு பக்கத்தை மட்டும் மிகைப்படுத்திப்படுத்திப் பிரசங்கிப்பது புதுயுகக் கொள்கைதான் (செழிப்பின் உபதேசமும் இதில் அடங்கும்). ”தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்” என்று ரோமர் 11:22 தெளிவாகச் சொல்லுகிறது. அழிவு சாத்தானிடமிருந்து மாத்திரமே வரும் என்று சாதிப்பீர்களானால் அடுத்துக் கேட்கப்படும் கேள்விகளுக்கு தங்களால் பதில்சொல்லவே முடியாது. தேவன் தனக்காக வழக்காடுவதைவிட தன்னைப் புரிந்துகொள்ளவே விரும்புகிறார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

 11. //தேவன் தனக்காக வழக்காடுவதைவிட தன்னைப் புரிந்துகொள்ளவே விரும்புகிறார்.// நன்று சகோதரரே!

 12. Brother Golda,
  //ஜப்பானியப் பெண்ணை மணம்புரிபவன் கொடுத்து வைத்தவன் என்றார். காரணம் என்னவென்றால் கணவனையும் பிள்ளைகளையும் மாத்திரம் அல்ல, தங்கள் மாமனார், மாமியாருக்கும் பணிவிடை செய்வதிலும் அவர்களைப் பராமரிப்பதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே! (விசுவாச சகோதரிகள் கவனிக்கவும்!). //
  //நல்ல பிரியாணியின் நடுவில் கல் வருவது போல், நல்ல ஆவிக்குரிய கட்டுரையின் நடுவில் இது போன்ற இடித்துரைத்தல் எதற்கு சகோ. விஜய் ? தன் சொந்த தாய் தகப்பனை பேணும் கடமையை கூட தான் செய்ய மனமில்லாமல் , தன் மனைவி தலையில் கட்டுவது, கிறிஸ்தவ ஆண்களின் சுய நலமே அன்றி வேறென்ன ? பராமரித்து போஷித்து நல்ல சேவகனாய் இருந்து காப்பாற்றும் கடமை ஆண்களுக்குரியது, வேதத்தின்படி./

  If the Japanese women were taking care of their in laws and serving them, they deserve our honor. Although it is duty of the man to earn for his family, there are many things in the family the men cannot do it well like the women, like cooking & serving. Besides, the man will always speak kindly to his parents but if his wife too does the same it is surely a blessing.

  I agree with Bro. Vijay, there is nothing wrong for our believing sisters to learn from the Japanese women.

  (Of course this is not the main issue in the message.)

  1. // Brother Golda, //

   கோல்டா மேயர் என்பவர் இஸ்ரேல் நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார்.

   // If the Japanese women were taking care of their in laws and serving them, they deserve our honor.//

   உண்மைதான்.பொதி சுமக்கிற கழுதையை பாராட்டத்தானே வேண்டும்.

   என்னுடன் படித்த நண்பன் ஒருவன் ஜப்பான் பெண்ணை திருமணம் செய்து டோக்கியோவில் வசிக்கிறான். தற்சமயம் பள்ளி செல்லும் தன் மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் கடமையை குறித்து சொல்ல, இந்த வேலையெல்லாம் உன் மனைவியிடம் தள்ளி விடு என்று பிற நண்பர்கள் சொல்ல, (in group mail) அவன் சொன்ன பதில் இது.

   It will be great if I can hand over everything to my wife and sit back, but it is not possible. Whoever said “Live in a english house, with your japanese wife, with a american butler, drinking french wine, eating chinese food”, I have few things to share with him.

   எனவே, உண்மையிலேயே ஜப்பான் பெண்கள் அப்படித்தானா என்று தெரியவில்லை.

   //Although it is duty of the man to earn for his family, there are many things in the family the men cannot do it well like the women, like cooking & serving.//

   அப்படின்னு நீங்கதான் சொல்றீங்க. எங்க ஊரில் எல்லா ஹோட்டலிலும் இன்முகத்துடன் பார்த்துப் பார்த்துப் பரிமாறுவது ஆண்கள்தான். அனத்துப் பதார்த்தங்களையும் அருமையாக சுவையாக சமைப்பவர்களும் அவர்கள் தான். எல்லா கல்யாண வீடுகளிலும் அவர்கள் இராஜ்யம்தான். நாட்டில் செய்வதை வீட்டில் செய்ய இயலாதா அவர்களால்?

   // I agree with Bro. Vijay, there is nothing wrong for our believing sisters to learn from the Japanese women. //

   I understand that, many western men share household work like cooking, washing clothes and dishes, and taking care of babies and also they love and respect their in-laws. I think there is nothing wrong for our believing brothers to learn from western men

   எந்த ஊழியக்காரரிடத்திலும் நான் கவனிக்கும் 2 காரியங்கள் உண்டு. ஒன்று பெண்கள் பற்றி என்ன சொல்கிறார்கள்? பணம் பற்றி (காணிக்கை கொடுப்பது பற்றி, உலக ஆசீர்வாதங்கள் பற்றி) என்ன சொல்கிறார்கள் என்பது. 100/100 மார்க் வாங்கியது வின்செண்ட் செல்வகுமார் மட்டும்தான் இதுவரையில்!

   இது நான் சமீபத்தில் ஒரு ஊழியக்காரருக்கு அனுப்பிய மடலின் ஒரு பகுதி:


   There is one thing that I disagree with what you said. You said God created woman as a helper to a man. She should wake up early and do all things for her husband-like that you said. This is not a Biblical, Godly attitude towards women, I think. God created her as a helpmate , may be, but not as servant to a man. When God created Eve, there were no household work to be done, there were no cooking, washing to be done. God asked both of them (not just Adam) to rule the earth.What does a helpmate mean then? Adam was alone before, now he has a company to love,talk and share things. Before he had to do everything on his own, now he can do things along with Eve. அன்புக்கு, ஆசைக்கு, பாசத்துக்கு, பேச்சுக்குத்தான் மனைவி துணை. மற்றபடி ஆணாதிக்க மனப்பான்மையுள்ள ஆண்கள் சொல்வது அவள் கணவனுக்கு வேலை செய்ய, பணிவிடை செய்ய படைக்கப்பட்ட வேலைக்காரியோ, second class citizen னோ இல்லை. நீ இந்த ஜாதி, இந்த வேலைதான் செய்யணும் என்று சொல்வது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு, நீ பெண், சமைப்பதும் துவைப்பதும் உன் வேலை என்று சொல்வதும். ஆனாலும் வாய் கூசாமல் எல்லா ஆண் ஊழியக்காரர்களும் இதைத் தான் சொல்கிறீர்கள். என்று மாறுமோ இந்த அவல நிலை.

   பெண்களுக்கு அறிவுரை சொல்லும் ஊழியர்கள், ஆண்களுக்கும் சேர்த்து சொன்னால்தான் அது சரியான, சமநிலையான ஊழியமாக இருக்கும்.
   கணவன், மனைவியை இயேசு கிறிஸ்து சபையை நேசிப்பது போல் நேசிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இயேசு கிறிஸ்து சபைக்கு உயிரையே கொடுத்தார். உயிரைக் கொடுக்க வேண்டாம், மனைவிக்கு ஒரு காஃபியாவது காலையில் போட்டு கொடுக்கலாம் அல்லவா?? வேறு என்னவெல்லாம் இயேசு கிறிஸ்து சபைக்காக செய்தார்? தன்னை தாழ்த்தினார், அடிமையின் ரூபமெடுத்தார், பரலோக மகிமையை துற்ந்தார், அசிங்கப்பட்டார், அவமானப்பட்டார், ஜீவனைக் கொடுத்தார்.- இப்படியெல்லாம் அன்பு கூர்ந்தார். இது நேசம். அவர் நேசர். இப்படியெல்லாம் ஆண்கள் இருக்கும்படி போதிக்கப்பட வேண்டாமா? அத்துடன் 1 கொரி 13 ம் அதிகாரத்தில் அன்பின் குணாதிசயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இதையும் ஆண்கள் மனப்பாடம் பண்ணி தியானித்து அதன் படி மனைவியை நேசிக்க வேண்டும்.

   ஒரு குடும்பத்தில் கணவன் எழுந்து பிள்ளையை பார்ப்பார். மனைவி நல்லா தூங்குவாங்க என்று சொன்னீங்க. பெண்ணுக்கும் இரத்தமும், சதையும் உள்ள உடம்புதானே. அவர்களுக்கு உடல் வலி இருக்காதா? ஒரு நாள் tired ஆ இருக்காதா? ஒரு நாள் தூங்கினால்தான் என்ன?பெற்ற பிள்ளையை ஆண் பார்த்தால்தான் என்ன? கவுரவம் குறைஞ்சிடுமா? இந்த மனப்பான்மை மாற வேண்டும்.

   நீங்க வாலிப பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் ஊழியம் செய்றீங்க. ஆண்கள் பெண்களை மதிக்கணும். திருமணமானவுடன் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்ய வேண்டும் மரியாதையாய் நடத்தணும் என்றெல்லாம் தயவு செய்து சொல்லிக் கொடுங்க.பெண்களுக்கு மட்டுமே உபதேசம் பண்ணாதீங்க.

   இந்துக்கள் பெண்களை சொல்லால் அடிப்பாங்க, முகமதியர்கள் கல்லால் அடிப்பாங்க. கிறிஸ்தவர்கள் வசனத்தால் அடிக்கிறாங்க. காயப்படுத்துவதே ஆண்களுக்கு பழக்கமாகி விட்டது.காயப்படுவதே பெண்களுக்கு பழக்கமாகப் போய் விட்டது.

   பைக்கில் வேகமாகப் போவதும், ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவதும் நல்லதுதான். ஆனால் அதுவல்ல அன்பு செலுத்துவது. உங்க மனைவியின் பாரத்தை பகிர்ந்து கொண்டு அவங்களை நேசிங்க.பிறருக்கும் அப்படியே சொல்லிக் கொடுங்க. ஆண்டவரோடு உங்களுக்கு நல்ல நெருக்கம் இருப்பதால் அவரிடமே இதைப் பற்றிக் கேளுங்க. அவர் சொல்லிக் கொடுப்பதை சொல்லுங்க. இந்த ஆணாதிக்க மனப்பான்மை உள்ள சமூகம் சொல்வதை நீங்களும்(ஊழியக்காரர்களும்) சொல்லாதீங்க.

Leave a Reply