கிறிஸ்துவே ஜீவன்…

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் (ரோமர் 6:23)

பாவத்தினால் மரணம் வந்ததாகச் சொல்லும் வேதம், தேவனுடைய கிருபைவரமோ; பாவத்திற்கு நேர் எதிரான சுபாவமாக நாம் கருதும் பரிசுத்தத்தினால் அல்லது ஒழுக்கத்தினால் உண்டான நித்தியஜீவன் என்று சொல்லாமல், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் நித்தியஜீவன் உண்டானதாகச் சொல்லுகிறது.

மரணத்தை பாவம் என்ற கிரியையோடு அல்லது சுபாவத்தோடு தொடர்புபடுத்தும் வேதம், ஜீவனை ஒரு நபரோடு தொடர்புபடுத்துகிறது. இந்த வசனத்தை நாம் காலங்காலமாக படித்திருந்தாலும் மரணத்தை பாவத்தோடு தொடர்புபடுத்துவது போலவே, நம்மையும் அறியாமலேயே ஆழ்மனதில் நித்தியஜீவனை பரிசுத்தத்தோடும் ஒழுக்கத்தோடும் தொடர்புபடுத்தி பழகிவிட்டோம்.சிறுவயதுமுதல் கேட்டுவந்த நியாயப்பிரமாண போதனைகள் அதற்குக் காரணமாக இருக்கலாம். நித்தியஜீவனை ஆன்மீகக் கிரியைகள் தரமுடியாது, இயேசுதான் தரமுடியும்.

அதற்காக பரிசுத்தமாக வாழ வேண்டியது அவசியமில்லையா என்றால், அப்படியல்ல… ஜீவனாகிய கிறிஸ்து நமக்குள் வரும்போது பரிசுத்தவாழ்வு நமக்கு இயல்பாகவே சாத்தியமாகிறது.

கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்வதுதான் இரட்சிப்பு, கிறிஸ்துதான் ஜீவன்.(பிலி 1:21).. மற்ற எல்லாமே by products-தான்…கிறிஸ்துவின் இடத்தை வேறு எதுவும் ஆக்கிரமிக்க நாம் அனுமதிக்கக்கூடாது.

Leave a Reply