கண் முன்னே நடக்கும் ஒத்திகை

வெளியே ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். நாம் அரசியலை வைத்து கொஞ்சம் ஆன்மீகம் செய்வோம் வாருங்கள்.

இந்த உலகம் சாத்தான் என்றழைக்கப்படும் டிமோன்(Demon or Satan) கையில் இருக்கிறது. ஆனாலும் அவன் கையில் நேரடியாக ஆட்சி இல்லை. அவன் உலகம் முழுவதும் தனது பொம்மை அரசாங்கங்களை நிறுவி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் தீர்க்கதரிசனங்களின்படி இறுதி நாட்களில் சாத்தானின் நேரடி பிரதிநிதியான அந்திகிறிஸ்துவின் (Anti Christ) கைக்கு ஆட்சி வரவேண்டும். அந்திகிறிஸ்துவை அவனால் வலிந்து திணிக்க முடியாது, மக்களே அவனை தங்கள் தலைவனாக ஏற்றுக்கொள்ளும் நிலையை கொண்டுவர வேண்டும்.

அதற்காக அந்த பொம்மை அரசாங்கங்களுக்கு கட்டளை விதிக்கப்படுகிறது. மக்களை எவ்வளவு வெறுப்பேற்ற வேண்டுமோ அவ்வளவு வெறுப்பேற்றும் வேலை அவர்களுக்குத் தரப்படுகிறது. மக்கள் ஆட்சியாளர்களால் கசக்கிப் பிழியப்படுகிறார்கள். நீதிக்காக கதறும் மக்களுக்கு நக்கலான பதில்களையே ஆட்சியாளர்கள் தருகிறார்கள். எதிர்ப்பவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுகிறார்கள். இவற்றைப் பார்க்கும் மக்கள் பயத்தில் ஆழ்கிறார்கள். நமக்கான இரட்சகன் வரமாட்டானா என்று மக்கள் ஏங்கித் தவிக்கிறார்கள். அப்போது சாத்தான் அனைத்து மக்களாலும் விரும்பப்படும், உட்சபட்ச நம்பிக்கை நட்சத்திரமாக ஏற்றுக்கொள்ளப்படும் தனது ஏஜண்ட்டான அந்திகிறிஸ்துவை களமிறக்குகிறான். மக்களிடம் அவனைக் கொண்டு சேர்க்கும் பணியை சாத்தானின் வாயாக செயல்படும் கள்ளத் தீர்க்கதரிசி (மீடியா) செய்து முடிக்கிறான். மக்கள் அவனை தங்கள் அதிபதியாக ஏற்றுக்கொள்ளுகிறார்கள். மிருகத்தின் முத்திரையுடன் அந்திகிறிஸ்து அரியணையில் அமர்கிறான்.

கர்த்தர் தமிழர்களை மிகவும் நேசிக்கிறார். 12 சீடர்களில் ஒருவரான தோமாவை நம்மிடம்தான் அவர் அனுப்பினார். ஆசிய மொழிகளிலேயே தமிழில்தான் முதன் முதலில் வேதாகமம் அச்சிடப்பட்டது. நமது கண் முன்னே கடைசி காலத்துக்கான ஒரு Demo ஓடிக்கொண்டிருக்கிறது. எச்சரிக்கை! மனந்திரும்புங்கள்.

நம் கண்முன்னே தமிழகம் உட்பட உலகெங்கும் ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. மெயின் பிக்சர் விரைவில்…

இயேசுவின் வருகை வெகு சமீபம். அவரை சந்திக்க ஆயத்தமாகுங்கள்!

 

Leave a Reply