உத்தரகண்டில் வெள்ளம் அனுப்பி இந்துக்களை தண்டிக்க போவதாக இயேசு முன்னமே என்னிடம் சொல்லி இருந்தார் என்று திரு.உமாஷங்கர் ஐ.ஏ.எஸ் சொன்னதாக ஒரு வாரபத்திரிக்கையில் செய்தி வெளிவந்திருக்கிறது. கண்மூடித்தனமான மதவெறியின் விளைவாகவும், வேதத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் புரட்டி உபதேசிக்கும் கள்ள தீர்க்கதரிசிகளுடன் கொண்ட சகவாசத்தின் விளைவாகவும் வந்த வார்த்தைகளாகவே இதைப் பார்க்கிறோம். வேதத்தின்படி இது முற்றிலும் தவறு. இப்படிப்பட்ட மதியீனமான கருத்துக்களையும் அதை பிரசங்கிப்பவர்களையும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
புனித யாத்திரைக்கு செல்லுபவர்கள் விபத்தில் மரிக்கும் செய்திகளை கேள்விப்படும்போதும், வழிபாட்டுத்தலங்கள் உள்ள பகுதிகள் இயற்கை சீரழிவால் பாதிக்கப்படும்போதும் அதை “தேவனுடைய கோபாக்கினை (Wrath of God)” என்று சில கிறிஸ்தவர்கள் வருணிப்பதை நானே என் காதுகளால் கேட்டிருக்கிறேன். இதைப்போன்ற பரிசேய அகங்காரமும் அறியாமையும் வேறொன்றும் இல்லை. முதலாவது சிலுவையில் தொங்கிய உங்கள் தேவன் எப்படிப்பட்டவர் என்பதையும் அவர் நேசம், நீடிய பொறுமை இன்னதென்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். நீங்களே அவரை இன்னும் ஒழுங்காகப் புரிந்துகொள்ளாமல் இருக்கையில் அவரை மற்றவர்கள் வணங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம்? கர்த்தரை வணங்காமல் வேறு தெய்வங்களை வணங்குவது மாத்திரம்தான் பிரதான பிரச்சனை என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் புதிய ஏற்பாட்டின் ABC-யைக் கூட இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பதும் பழைய ஏற்பாட்டைக்கூட அரைகுறையாய்த்தான் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதும் உண்மை.
இயற்கை பேரழிவுகளுக்கான காரணம்:
சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை (எசே18:32) என்றே கர்த்தர் சொல்லுகிறார் .
தேவன் ஆதாமுக்காக படைத்த பூமியானது அழிவை அறியாத சொர்க்கபூமியாகவே இருந்தது. அதை ஆண்டுகொள்ளும்படியான முழு அதிகாரத்தையும் கொடுத்து தேவன் மனிதனை அதில் வைத்தார். இயற்கைக்கு ஒத்த வாழ்வை நாம் வாழ்ந்தோமானால் இயற்கை என்றும் நமது நண்பனே! ஆனால் இன்றைய இயற்கை பேரழிவுகளும் அதனால் ஏற்படும் உயிர்சேதங்களும் பெரும்பாலும் மனித தவறுகளால் ஏற்படுகிறது என்பதே உண்மை. நாம் நமது சுயநல வியாபாரங்களுக்காக இயற்கையை அழித்தோம் அதன் விளைவை அறுவடை செய்கிறோம் இன்னும் அதிகதிகமாகவும் அறுவடை செய்வோம்.
கடலோரப்பகுதிகளில் இயற்கை அரணாக இறைவன் ஏற்படுத்தி வைத்திருந்த சவுக்குக் காடுகளை சுயநலத்துக்காக அழித்துவிட்டு சுனாமியால் பேரழிவை சந்தித்தது யாருடைய பிழை? பேரழிவிற்குப் பின்னர் ஒரு கூட்டம் இது பக்தியற்றவர்கள் மீதான தேவகோபாக்கினை என்றது, இன்னொரு கூட்டம் இப்படி குழந்தைகளையும் அப்பாவிகளையும் அழித்த கடவுள் இரக்கமற்றவன் என்று தூற்றியது. அந்த இரு கூட்டத்தாரும் அறிவின்றி கடவுவுளை தூற்றினார்கள் என்பதே உண்மை!
புவி வெப்பமயமானது யாரால்? ஓசோனில் ஓட்டை விழுந்தது யாரால்? ஆற்று மணலைத் திருடச்சொல்லியும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவிக்கும் அணுஉலைகளையும் ஏற்படுத்தச்சொல்லி இயேசுநாதரா உங்களுக்கு சொன்னார்? பிளாஸ்டிக்கை இயேசுவா உருவாக்கி உங்கள் கையில் கொடுத்தார்? காற்று மாசுபாடு, ஒலி/ஒளி மாசுபாடு, பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர் மாசுபாடு என்று எல்லாவற்றையும் சீரழித்துவிட்டு, கர்த்தர் அருமையாக உருவாக்கி நம்கையில் கொடுத்த எதை சரியாக பராமரித்து வைத்திருக்கிறோம்? சரி, உத்தரகண்ட் பேரழிவிற்கு காரணம் என்ன? கடந்த 50 – 60 வருடங்களாக அந்த மலைப்பகுதியில் செய்யப்பட்டு வந்த மாபெரும் காடு அழிப்பு, இயற்கை அரணான மரங்களை அழித்ததன் விளைவாக ஏற்பட்ட மண் சரிவு. இது முழுக்க முழுக்க மனிதத்தவறினாலும் யாத்திரிகர்களை முன்னெச்சரிக்கையாகப் பாதுகாக்க தவறிய அரசின் கவனக்குறைவினாலும் ஏற்பட்ட அழிவு என்பது ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்!!
தன்னை வணங்காதவர்களை இயேசு அழிப்பாரா?
அப்படியானால் கடைசிகாலத்தில் இயேசுவின் வருகைக்கு அடையாளமாக மாபெரும் இயற்கை சீற்றங்கள் நடக்கும் என்பதுதானே வேதம் தரும் எச்சரிப்பு என்றால் நிச்சயமாக இயற்கை பேரழிவுகள் இயேசுவின் வருகைக்கு முன்னடையாளங்கள்தான். ஆனால் அவற்றை தாம் ஏவிவிட்டதனால் வருவதாக இயேசு அங்கு குறிப்பிடவில்லை. இவை நிகழும் என்றுதான் முன்னறிவிக்கிறார். பூமியின் அதிபதியான மனிதன் அதை ஒழுங்கின்றி, பொறுப்பின்றி நிர்வகித்ததன் விளைவாக இப்படிப்பட்ட எதிர்விளைவுகளை அவன் சந்திக்க நேரிடும் ஏற்படும் என்ற எச்சரிபேயன்றி அது தேவனுடைய பரிபூரண சித்தமல்ல. இது கர்த்தருடைய முன்னறிவினால் உண்டான தீர்க்கதரிசனமேயன்றி அவர் மனதின் விருப்பமல்ல…ஆனால் திரு உமா சங்கர் அவர்கள் சொன்ன தொனியானது தன்னை வணங்காதவர்கள் மீது கர்த்தர் இயற்கையை ஏவிவிட்டு அவர்களை கொடூரமாய் கொல்லுவதுப்போல காட்டுவதென்பது முழுக்க முழுக்க இயேசுகிறிஸ்து பற்றிய ஒரு பொய் பிம்பத்தை தோற்றுவிப்பதாகும். இதை அவர் ஆர்வக்கோளாரினால் செய்திருந்தாலும் அது இயேசுவின் நாமத்துக்கு மகிமைக்கு மாறாக இழுக்கையே கொண்டுவந்து சேர்க்கும்.
ஒன்றை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்,கடுமையான தேவ தண்டனைகள் ஊற்றபட்ட பழைய ஏற்பாட்டு காலத்தில்கூட தேவன் தன்னை வணங்கவில்லை என்ற காரணத்துக்காக பெலிஸ்தரையோ, கானானியரையோ, மோவாபியரையோ அம்மோனியரையோ தண்டிக்கவில்லை காரணம் அவரது உடன்படிக்கை அவர்களோடு இல்லை. தன்னோடு உடன்படிக்கை பண்ணின இஸ்ரவேலர் தன்னை விட்டு சோரம்போய் வேற்று தெய்வங்களை பின்பற்ற ஆரம்பித்தபோதே தேவன் அவர்களை தண்டித்தார். இதை பழைய ஏற்பாடு முழுவதிலும் நாம் காணலாம். இஸ்ரவேல் அல்லாத பிற தேசத்தாரை அவர்கள் இஸ்ரவேலுக்கு செய்த அநியாயங்களின் நிமித்தமும், அவர்களது சொந்த அக்கிரமங்களின் நிமித்தமும் தண்டித்தாரேயன்றி தன்னை வணங்காத காரணத்துக்காக தண்டிக்கவில்லை. அதுபோலவே அவரோடு சுவிசேஷத்தின் மூலம் புதிய உடன்படிக்கைக்குள் நுழைந்துள்ள கிறிஸ்தவர்களாகிய நாம் அவரோடு செய்துகொண்ட உடன்படிக்கையை மீறும்போது அவர் நம்மை சிட்சிப்பார். ஆனால் அவரை ஏற்றுக்கொள்ளாத பிற மதத்தினர் பற்றி; ஒரு மனிதன் தான் சாகும்வரை அவருடைய சுவிசேஷத்தையும் கிருபையையும் புறக்கணிக்கும் உரிமை அவனுக்கு முழுவதும் உண்டு. அதன் பலனாக அவன் நித்திய ராஜ்ஜியத்தை இழந்துபோவானேயன்றி அவன் பூமியில் வாழும்வரை தனது சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளும்படி தேவன் அவனை வற்புறுத்தவோ, சித்திரவதை செய்யவோ மாட்டார். ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் உக்கிர கோபம் கொண்டு அற்பாயுசில் அழித்துப்போடவும் மாட்டார். அப்படிப்பட்ட முன்னுதாரணங்கள் புதிய ஏற்பாட்டில் எங்கும் இல்லை. மனிதனுக்கு கொடுக்கபட்ட கடைசிநாள் வரை தேவன் அவன் தன்னுடைய அன்பையும் இறையரசையும் ஏற்றுக்கொள்ளும்படி அவனுக்காக எல்லாக் கதவுகளையும் திறந்துவைத்து பொறுமையோடு காத்திருக்கிறார்.
சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கான நியாயத்தீர்ப்பென்பது மறுமைக்குரியதேயன்றி இம்மைக்குரியதல்ல. இம்மையில் அவர்களது சாய்ஸ்-க்கு மதிப்பு கொடுத்து நாம் அவர்களைவிட்டு அமைதியாக விலகிச்செல்லுவதும் தொடர்ந்து அவர்களுக்காக ஜெபிப்பதுமேயன்றி நாம் செய்யக்கூடியது வேறொன்றுமல்ல.
எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்பினார் (மாற்கு 6:11).
அப்படியானால் உலகின் கடைசிநாளான நியாயத்தீர்ப்பு நாள்வரை அந்தப் பட்டணங்களை தன்னை ஏற்றுக்கொள்ளாததன் நிமித்தம் கர்த்தர் அழிக்கமாட்டார் என்பது இதன்மூலம் தெரிகிறது.
யாருக்கு முதலில் நியாயத்தீர்ப்பு?
தேவனுடைய தண்டனை துவங்கினால் அது முதலாவது அவருடைய வீடாகிய திருச்சபையிலிருந்தே துவங்கும் என்பது வேதம் தெளிவாக சொல்லும் உண்மை. அதற்கு ஆதாரமாக எசேக்கியேல் 8,9 அதிகாரங்கள் முக்கியமாக 9 ஆம் அதிகாரம் 6ஆம் வசனம். எசேக்கியேல் தீர்க்கதரிசி எழுதிய ஆகமத்தில் அக்கிரமம் நிறைந்த எருசலேம் நகரை அழித்துப்போடும்படி அவர் தம்முடைய தூதர்களுக்கு கர்த்தர் எவ்விதம் கட்டளையிடுகிறார் பாருங்கள்:
…(தண்டனையை) என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று கர்த்தர் என் (தீர்க்கதரிசி எசேக்கியேல்) காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம்பண்ணினார்கள். (எசே 9:6)
தண்டனை துவங்கியது தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து, முதலில் தண்டிக்கபபட்டவர்கள் சபையில் பெரிய பொறுப்பில் இருந்த மூப்பர்கள்.
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? (I பேதுரு 4:17)என்று புதிய ஏற்பாடும் இதை ஆமோதிக்கிறது. தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவருடைய வீட்டிலிருந்து துவங்குமென்றால் அது எப்படிப்பட்டவர்களிடமிருந்து துவங்கும் என்பதை நாம் இனி பார்க்கலாம்.
- தேவனுக்கு ஊழியம் செய்யாமல் தன் வயிற்றிற்கு ஊழியம் செய்பவர்கள். தன்னை ஜனங்களுக்கு பணிவிடைக்காரனாக ஒப்படைக்காமல் தன்னை ராஜாவைப்போல காட்டிக்கொள்ளும் அட்டூழியர்கள்
- ஜனங்களுடைய செவித்தினவுக்கு தீனிபோடும்படியும் தங்கள் சுயலாபத்துக்காகவும், சுயமகிமைக்காகவும் வேதத்தை திரித்து புரட்டி உபதேசிக்கும் கள்ளப்போதகர்கள்.
- தன்னை ஊழியக்காரன் என்று நம்பி தன்னிடம் வரும் பெண்களையும், சிறுமிகளையும் வசப்படுத்தி அவர்களை சீரழிப்பவர்கள்
- தனது சபையில் இருக்கும் ஏழை எளியவர்களை கண்டுகொள்ளாமல் சபைக்கு அசையும் அசையாச் சொத்துக்களை வாங்கிப்போட்டு தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தைக் கட்டுக்கொள்ளும் கள்ளமேய்ப்பர்கள்.
- பொய் தீர்க்கதரிசனம் சொல்லி குடும்பங்களை பிரிப்பவர்கள், சபைகளை உடைப்பவர்கள்.
- மனதில் தோன்றியவைகளையெல்லாம் தேவன் தந்த திட்டங்களாக அறிவித்து பணம் பறிக்கும் போலி சுவிசேஷகர்கள், டிவி ஊழியர்கள்.
- தங்க வீடில்லாமல் ஏழைகள் பலர் வாடிக்கொண்டிருக்க தேவன் தங்குவதற்கு ஆலயம் கட்டுகிறேன் என்று சொல்லி பணவசூல் செய்து பிரம்மாண்ட ஆரம்பர ஆலயங்களும் ஜெபகோபுரங்களும் கட்டும் திருட்டு ஊழியர்கள்.
- ஆசீர்வாத ஆசை மற்றும் சாப பயம் காட்டி தசமபாகம், காணிக்கை வசூல் செய்யும் பாஸ்டர்கள்
- வைப்பாட்டி வைத்திருக்கும் பாஸ்டர்கள், பிஷப்புக்கள், சுவிசேஷகர்கள்,விசுவாசிகள்
- லூசிபரைப்போல தங்களை ஆராதிக்கும் இரசிகர் கூட்டத்தை உருவாக்கும் போலி ஆராதனை வீரர்கள்
- ஆவிக்குரியவைகளை பணத்துக்கு விற்கும் ஆன்மீக வியாபாரிகள்.
- சபைக்குள் சாதி,சபைபிரிவு,மொழி,இன பாகுபாடு பார்ப்பவர்கள், அதை வளர்ப்பவர்கள்.
- சபைக்குள் தேர்தல் நடத்துபவர்கள், அதிலும் அரசியல் செய்பவர்கள்.
- சபைக்குள் வாரீசு அரசியல் செய்யும் பாஸ்டர்கள், அழைப்புக்காக அன்றி பிழைப்புக்காகவும், கனத்துக்காகவும், சபை சொத்துக்களுக்காகவும் ஊழியத்துக்கு வரும் பாஸ்டர்களின் மகன்கள்/மருமகன்கள்
- சபைக்கு வரும் இளம் சகோதரிகளை காம வேட்டையாடும் பாஸ்டர்களின் தவப்புதல்வர்கள்.
இப்படி இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். சபைக்குள் நியாயத்தீர்ப்புக்காக இத்தனைபேர் காத்துக்கொண்டிருக்க தேவன் அப்பாவி இந்துக்களை அழிப்பதாவது. திரு உமாசங்கர் அவர்களே! உங்கள் கையிலுள்ள வேதத்தை மறுபடியும் ஒருமுறை படியுங்கள்!!
இக்கட்டுரையின் தொடர்ச்சியை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்
Excellent Article. I have sent this article to Bro. Uma Shankar IAS stating that , believers like him should not give twisted Doctrines when he has to fight against the same propagated by the numerous false and immature preaching cheats in India.
Without doubt, Uma Shankar is an honest government officer who fought against corruption boldly and without fear . But unfortunately Bro. Uma Shankar does not seem to put enough time in understanding the sound Christian Theology.
Spending more time on the Bible alone can bring the right wisdom, building thoughts on our own theology and wishes will mislead others too. I hope Bro. Uma shankar will have a open heart to accept this and correct. God loves such ‘accepting’ hearts.
Bro. Uma Shankar has responded to me :
“Thanks for the response brother.
Will go through your write up and get back.
Regards
Umashankar”
We need to give some time to Bro. Uma Shankar to get sound knowledge about the correct path. With correct theology and sound doctrine He would be one of a wonderful servants of God.
நன்றி சகோதரரே! நாங்களும் அவர் மீது அளவுகடந்த அன்பும் நன்மதிப்பும் வைத்திருக்கிறோம். திறந்த மனதோடு கட்டுரையை வாசித்து தனது கருத்தை மறுபரிசீலனை செய்வார் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறோம்.
அருமையான விளககம் சகோதரே…………….
காப்பி ரைட்டுக்கு சாதுவும் உமாவும் சன்டை வரும் போல் தெரிகிறது……..
Let us give time to Bro.Uma Shankar……
’சாமி குத்தம்’, சாமி கண்ணைக்குத்தும்’, ’அழிக்கும் கடவுள்’ என்பதெல்லாம் இந்து கலாச்சாரம் அளித்த நம்பிக்கைகள். பழைய ஏற்பாட்டு காலத்தில்கூட தேவன் தன்னை வணங்கவில்லை என்ற காரணத்துக்காக புறஜாதியாரைத் தண்டித்ததில்லை. நம் தலையில் நாமே மண்ணைவாரிப்போட்டும் செயலகள் அனைத்தும் செய்யப்படும் இக்கடைசி நாட்களில் தான் இப்பேற்பட்ட உபதேசங்கள் தெரிந்த்தோ, இல்லை அறியாமயாலோ கிளம்புகின்றன. ஐஏஎஸ் அதிகாரி என்றில்லாமல், பரம்பரை வேதபண்டிதர்கள் கூட இந்த அறியாமையால் பேசுவது ஆச்சரியம். அவமானம்!
//தேவன் அப்பாவி இந்துக்களை அழிப்பதாவது. திரு உமாசங்கர் அவர்களே! உங்கள் கையிலுள்ள வேதத்தை மறுபடியும் ஒருமுறை படியுங்கள்!!//
பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் ஆணவப் பேச்சினால் இயேசு தான் நிந்திக்கப் படுகிறார் என்பதைக் கூட உணராது உளறியுள்ளார். வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல் உள்ளது இவரின் பேச்சு.
நீண்டுகொண்டே போகும் இந்தப்பட்டியலில் இன்னொரு டேஞ்சரான ஆசாமிகள். “ வேதத்தை நேசிக்காமல், வாசிக்காமல், என்றோ அறைகுறையாகப் படித்ததையும், சுய புத்திக்கெட்டிய காரியங்களையும், வேதம் சொல்லாததை வேதத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்ளும் அல்லது இருக்க விரும்பும் பிஸியான போதகர்கள்.”
Good one.
2. And Jesus answering said unto them, Suppose ye that these Galilaeans were sinners above all the Galilaeans, because they suffered such things?
3. I tell you, Nay: but, except ye repent, ye shall all likewise perish.
4. Or those eighteen, upon whom the tower in Siloam fell, and slew them, think ye that they were sinners above all men that dwelt in Jerusalem?
5. I tell you, Nay: but, except ye repent, ye shall all likewise perish. Lu 13: 2-5
God reveals to his people not to condemn them but to pray for them to be saved. Remember what Abraham did for Sodom. Has he prayed for them or invited fellow Christians to pray. At least do it next time and show the world you are Christians (you may not prove by saying after the disaster but warning and praying with concern – learn from Jonah. God could have changed the situation)
Uma Shankar’s actual interview is here. He did not say anything like God was going to punish the Hindus. We all need to first check if the matter is correct or not before ACCUSING someone. But what better can be expected from watchmen brothers??
http://asrilanka.com/2013/07/14/20674
Sister Golda, The orginal Interview has come in Nakheeran weekly july 13th.
“2011 மார்ச் 8-ந் தேதி தமது தீர்க்கதரிசி மூலம் எனக்கு ஒரு தகவலை அனுப்புகிறார் இயேசு. அப்போது, “யாத்திராகமத்தில் 7 முதல் 12 வரையுள்ள அதிகாரங்களில் சொல்லப்பட்டிருப்பது போல, எகிப்தின் தேவர்களை (கடவுள்கள்) எப்படி தண்டித் தாரோ அதேபோல இந்திய கடவுள்களையும் தண்டிப்பேன் எனவும், எகிப்தின் தேவர்கள் எல்லாம் எப்படி பொய்க்கடவுள்கள் என்று நிரூபித்தாரோ அதேபோல இந்திய தேவர்கள் அனைவரும் பொய் என நிரூபிப்பேன்’ எனவும் தெரிவித்தார். அந்த தீர்க்கதரிசனம்தான் இப்போது நிறைவேறத் துவங்கியுள்ளது” என்கிறார் சீரியஸாக உமாசங்கர்.”
Do you thinik Hindus worship non-Hindu Gods?
Hindus worship too many gods.
Is it possible to have more than one God? Do you think that is logical?
நியாயத்தீர்ப்பு பற்றி வேதம் சொல்வது என்ன?
—–
The Scriptures warn us about the “full cup of iniquity” law. When God’s mercy and grace runs its duration, then God’s anger and wrath boils over, and His judgment starts to fall. Judgment is first meant to lead to repentance (redemption). If the person is beyond redemption, God’s judgment is finally for total destruction. Godsends utter destruction upon people and nations when their wickedness takes them beyond redeeming love. There is a point of no return when the unpardonable sin has been committed. Even this is mercy and grace because if God did not utterly destroy the unrepentant, then extended mercy only allows evil, violence,and needless suffering to continue upon the innocent.
The principle is simple: God breaks His silence when a person, a city, or a nation reaches a certain level of wickedness, and He uses one or more of His divine judgments.If the situation is redeemable, His judgments are for redemptive purposes. If the situation is beyond redemption (repentance), then His judgments are utterly destructive.
The following are just a few examples of the cup of iniquity reaching full measure:
Genesis 6:5-7
5 The Lord saw how great the wickedness of the human race had become on the earth, and that every inclination of the thoughts of the human heart was only evil all the time. 6 The Lord regretted that he had made human beings on the earth, and his heart was deeply troubled. 7 So the Lord said, “I will wipe from the face of the earth the human race I have created—and with them the animals, the birds and the creatures that move along the ground—for I regret that I have made them.”
Genesis 15:13-16
13 Then the Lord said to him, “Know for certain that for four hundred years your descendants will be strangers in a country not their own and that they will be enslaved and mistreated there. 14 But I will punish the nation they serve as slaves, and afterward they will come outwith great possessions. 15 You,however, will go to your ancestors in peace and be buried at a good old age.16 In the fourth generation your descendants will come back here, for the sin of the Amorites has not yet reached its full measure.”
God does not give Abraham’s descendants the land until after the Amorites had failed to repent, taking advantage of God’s mercy, compassion and grace. Therefore God’s judgment instead. God is the same for all peoples. Judgment only comes after man continues in sin instead of repenting,thus filling the cup of iniquity and bringing on God’s wrath! Remember that ancient Israel’s possession of Canaan was based on the same conditions applicable to the Amorites!
MOSES KNEW GOD’S LAWS OF JUDGMENT AND CONDITIONS TO KEEPING THE LAND
Deuteronomy 9:3-5
3 But be assured today that the Lord your God is the one who goes across ahead of you like a devouring fire. He will destroy them; he will subdue them before you. And you will drive them out and annihilate them quickly, as the Lord has promised you.
4 After the Lord your God has driven them out before you, do not say to yourself, “The Lord has brought me here to take possession of this land because of my righteousness.” No, it is on account of the wickedness of these nations that the Lord is going to drive them out before you. 5 It is not because of your righteousness or your integrity that you are going in to take possession of their land; but on account of the wickedness of these nations, the Lord your God will drive them out before you, to accomplish what he swore to your fathers, to Abraham, Isaac and Jacob.
THE CANAANITES LOST THEIR LAND WHEN THEIR CUP OF INIQUITY BECAME FULL. GOD BREAKS HIS SILENCE AND HIS WRATH STARTS TO FALL. JUDGMENT COMES WHEN GRACE IS CONTINUALLY REJECTED BY REFUSING TO REPENT AND OBEY GOD’S COVENANT.
Ancient Israel and Babylon both filled up their “cups of iniquity” separately,and judgment fell on them both accordingly! God is no respecter of nations or people. God has no favorites!
Jeremiah 25:7-12
7 “But you did not listen tome,” declares the Lord, “and you have aroused my anger with what your hands have made, and you have brought harm to yourselves.”
8 Therefore the Lord Almighty says this: “Because you have not listened to my words,9 I will summon all the peoples of the north and my servant Nebuchadnezzar king of Babylon,” declares the Lord, “and I will bring them against this land and its inhabitants and against all the surrounding nations.I will completely destroy them and make them an object of horror and scorn, and an everlasting ruin. 10 I will banish from them the sounds of joy and gladness, the voices of bride and bridegroom, the sound of millstones and the light of the lamp. 11 This whole country will become a desolate wasteland, and these nations will serve the king of Babylon seventy years.
12 “But when the seventy years are fulfilled, I will punish the king of Babylon and his nation, the land of the Babylonians, for their guilt,” declares the Lord, “and will make it desolate forever.
Dear Saint, God is predictable and is filled with mercy and grace. If it were not for His compassion , you and I would fall victim to the terrors of a beast government as have our brothers and sisters in nations such as Sudan,Rwanda,Indonesia,Burundi,and others. Yes, God has to judge or the innocent, according to the prophet Isaiah, become prey.
Love,
Dr. Jonathan Hansen
If anybody knows the issue like earthquake or something like disasters, give it in news papaers before it happens ya. That not doing instead once it happen and finished, people arise and says God shows to me, god spokes to me. Dont make over scenes and make hindus more hatred on christians. In this way christians loose their good names on themselves. Hashem bless our country.
gud one