அன்பு எனக்கிராவிட்டால்…

இயேசுவைத்தானே எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறோம், பின்னே ஏன் இயேசுவுக்குப் பதில் அன்னா காய்பாக்கள் நம்மில் வெளிப்படுகிறார்கள்?

சிலுவையைத்தானே பிரசங்கிக்கிறோம்? பின்னே ஏன் நாம் சிலுவையை சுமக்கிறவர்களாய் இல்லாமல் பிறரைப் பிடித்து சிலுவையில் அறைகிறவர்களாய் அலைகிறோம்?

சுவிசேஷ விதைகளைத்தானே விதைக்கிறோம்? பின்னே ஏன் பரிசேயச் செடிகள் முளைக்கின்றன?

எதை, எங்கே, எப்படி தொலைத்தோம்?

விடையைத் தேடினால் ஒரே ஒரு காரணி மிஸ்ஸிங்… அதுதான் “அன்பு”,

இயேசுவையும் அன்பையும் பிரிக்க முடியாது. அன்பின் உருவமவர்! சிலுவையையும் அன்பையும் பிரிக்க முடியாது, அன்பின் உச்சபட்ச வெளிப்பாடே சிலுவை தியாகம்! சுவிசேஷத்தையும் அன்பையும் பிரிக்க முடியாது, பிதாவின் அன்பைச் சொல்லுவதே சுவிசேஷம்!

அன்பற்ற பக்தி அவபக்தி, அன்பற்ற கிறிஸ்தவம் அந்திக்கிறிஸ்தவம்!

நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால்… (வாசிக்க 1 கொரிந்தியர் 13 முழுவதும்…)

Leave a Reply