அனலாக இறங்கணுமே…

ஆதிநிலை ஏகத் துடிக்கும் ஒரு விசுவாசி ஆவியானவர் ஆதியில் செய்த கிரியைகளை தன்னிடம் மறுபடியும் உயிர்ப்பிக்கக் கோரும் உணர்வுமிக்க பாடல். பாடலை அன்பு மகள் ஏஞ்சலின் கேப்ரியெல்லா பாடியிருக்கிறாள். இப்பாடலுக்கு அருமையாக இசையமைத்த அன்பு தம்பி ஜாக்சன் விக்டர் அவர்களுக்கும், மேலும் இப்பாடலுக்கு தங்கள் பங்களிப்பை அளித்த ஒவ்வொரு தேவபிள்ளைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

இசை: ஜாக்சன் விக்டர்
பாடல் & படத்தொகுப்பு: ஜெயராஜ் விஜய்குமார்
பாடியவர்: ஏஞ்சலின் கேப்ரியல்லா
ஒளிப்பதிவு: தர்மதுரை

அனலாக இறங்கணுமே,
மழையாக பொழியுணுமே!
காற்றாக தழுவுணுமே,
ஊற்றாகி வழியணுமே!

ஆவியான தேவனே
ஆட்கொள்ளுமே!(2) – அனலாக

மேலறைதனில் நீரே சபையை தொடங்கினீர்.
சீஷர் தலையின் மேலே நெருப்பாய் இறங்கினீர்.
தழலாய் வாரும் தேவா!
என்னில் தீயை மூட்டும் தேவா!(2) – அனலாக

உலர்ந்த எலும்புகள் மீது உயிராய் இறங்கினீர்
உயிர்த்த மனிதரை சேர்த்து படையாய் நிறுத்தினீர்
காற்றாய் வீசும் தேவா,
என்னை கனலாய் மாற்றும் தேவா!(2) – அனலாக

சீனாய் மலையை மூட மேகமாய்
மோசேயோடு கூட முகமுகமாய் பேசினீர்.
முகிலாய் மூடும் தேவா,
திருமுகத்தைக் காட்டும் தேவா!(2) – அனலாக

நேசக் கடலின் ஆழம் மூழ்க செய்பவர்
நீச்சல் ஆழம் நோக்கி என்னை இழுத்துச் செல்பவர்
அலையாய் சூழும் தேவா!
அன்பின் ஆழம் காட்டும் தேவா!(2) – அனலாக

Analaaga iranganume,
Mazhaiyaaga pozhiyanume
Kaatraaka thazhuvanume,
Ootraaki vazhiyanume

Aaviyaana dhavanae aatkollumae!(2) – Analaaga

Maelaraithanil neerae
sabhaiyai thodangineer
sheeshar thalaiyin mele
Neruppaai irangineer

Thazhalaai vaarum dheva
Ennil Theeyai moottum dheva (2)- Analaaga

Ularndha elumbugal meethu
Uyiraai irangineer
Uyirtha manitharai serthu
Padaiyaai niruthineer

Kaartaai veesum dheva
Ennai kanalaai maatrum dheva (2)- Analaaga

Seenai malaiyai mooda
Megamaai irangineer
Moseiyodu kooda
Mugamugamaai pesineer

Mugilaai modem dheva
Thiru mugathai kaattum dheva (2)- Analaaga

Nesa kadalin aazham
Moozhga seiybavar
Neechal aazham noki ennai
Izhuthu chelbavar

Alaiyaai soozhum dheva
Anbin aazham kaattum dheva

Analaaga iranganume,
Mazhaiyaaga pozhiyanume
Kaatraaka thazhuvanume,
Ootraaki vazhiyanume

Aaviyaana dhavanae aatkollumae! (2)- Analaaga

Leave a Reply